சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு. மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-ம் கருணைத் தொகையை அறிவித்தார்.
பிரதமர் அலுவலகம் X வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு;
“சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
இறந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”
Deeply saddened by the loss of lives due to a road accident in Raipur, Chhattisgarh. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon.
— PMO India (@PMOIndia) May 12, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be…


