உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"நைனிடால் மாவட்டத்தில் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சோக சம்பவத்தால் வேதனையடைந்தேன். இந்த சோகமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். சிக்கிக் கொண்டவர்களுக்கு உதவ மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன: பிரதமர்"
Pained by the tragedy in Nainital district, where a car was washed away. In this sad hour, my thoughts are with the bereaved families. Rescue operations are underway to assist those who are trapped: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 8, 2022


