குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சம் கருணைத்தொகையும், காயமடைந்தவர்களுக்குத் தலா ₹50,000 உதவித் தொகையும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதைக் கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். இந்தத் துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகிறது.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா ₹50,000 வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி."
Extremely saddened to hear about the loss of lives due to a mishap at a fireworks factory in Ahmedabad, Gujarat. My thoughts are with the bereaved families in this hour of grief. Praying for the speedy recovery of the injured. The local administration is providing all possible…
— PMO India (@PMOIndia) July 18, 2026


