பீகார் மாநிலம் மோதிஹரியில் செங்கல் சூளையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் காயமடைந்தோருக்கு ரூ. 50,000 கருணைத் தொகையையும் பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலக ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
" மோதிஹரியில் செங்கல் சூளை விபத்து காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதற்காகக் கவலை அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தோருக்காகப் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ. 50,000 கருணைத் தொகை வழங்கப்படும்: PM @narendramodi"
Pained by the loss of lives due to a mishap at a brick kiln in Motihari. Condolences to the bereaved families. Prayers with the injured. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 24, 2022