ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாதில் தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“தன்பாதில் தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் ஆழ்ந்த வேதனையடைந்தேன். அன்புக்குரியவர்களை இழந்தவர்களோடு எனது சிந்தனை உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். PM @narendramodi”
“தன்பாத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். PM @narendramodi”
Deeply anguished by the loss of lives due to a fire in Dhanbad. My thoughts are with those who lost their loved ones. May the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 31, 2023


