நாட்டின் கொவிட்-19 பெருந்தொற்று சூழல் மற்றும் தடுப்பூசி வழங்குதற்காக தயார் படுத்துதல், விநியோகம் மற்றும் நிர்வாகம் குறித்து பிரதமர் திரு.நரேந்திரமோடி  தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஹர்ஷ் வர்த்தன், பிரதமரின் முதன்மை செயலாளர், நிதி ஆயோக் உறுப்பினர்(சுகாதாரம்), முதன்மை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் இந்திய அரசு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமும் கொவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மற்றும் தொற்று வளர்ச்சி விகிதம் நிலையாக சரிந்து வருவது பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் முன்னெடுக்கப்படும் மூன்று தடுப்பூசிகள் முன்னேற்ற நிலையில் இருக்கின்றன. இதில் இரண்டு தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட சோதனையிலும், ஒரு தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையிலும் உள்ளது.

இந்திய விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வுக்குழுக்கள் ஆப்கானிஸ்தான், பூட்டான், வங்கதேசம், மாலத்தீவுகள், மொரீஷியஸ், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற அருகாமை நாடுகளுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு ஆய்வு திறன்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். வங்கதேசம், மியான்மர், கத்தார் மற்றும் பூட்டான் நாடுகள் தங்கள் நாடுகளில் ஆய்வக பரிசோதனைகள் மேற்கொள்ளவும் வேண்டுகோள்கள் விடுத்துள்ளனர். சர்வதேச சமூகத்துக்கு உதவும் முயற்சியாக, நமது முயற்சிகளை நமது அருகில் உள்ள அண்டைநாடுகளுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளக்கூடாது, தடுப்பூசி வழங்கும் முறைக்காக தகவல் தொழில்நுட்ப தளங்கள் மற்றும் மருந்துகள், தடுப்பூசிகளை ஒட்டு மொத்த உலகத்துக்கும் வழங்க வேண்டும் என்று பிரதமர் மேலும் உத்தரவிட்டார்.

கோவிட்-19 –க்கான தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய வல்லுநர் குழுவானது, மாநில அரசுகள் மற்றும் இது தொடர்பான அனைத்து பங்குதார ர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பூசியை சேமித்து வைத்தல் விநியோகம் செய்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான விரிவான செயல் திட்டத்தை தயாரித்து வழங்கும். தடுப்பூசி விநியோகித்தல் மற்றும் தடுப்பூசிக்கான முன்னுரிமை ஆகியவற்றுக்காக தீவிரமாக பணியாற்றும் வகையில் மாநில அரசுகளுடன் நிபுணர் குழு ஆலோசனை மேற்கொள்ளும்.

நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் புவியல் ரீதியான பரப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தடுப்பூசிகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மேலும் உத்தரவிட்டார். போக்குவரத்து, வழங்குதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கான ஒவ்வொரு நடவடிக்கையும் கடுமையாகத் திட்டமிடப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். சங்கிலித்தொடர் குளிர் சேமிப்பு வசதிகள், விநியோக இணைப்புகள், கண்காணிப்பு முறை, முன்னோக்கிய மதிப்பீடு மற்றும்  மருந்து குப்பிகள் சிரிஞ்ச்கள் உள்ளிட்ட தேவைப்படும் துணை கருவிகளை தயார் செய்தல் ஆகியவற்றுக்கான திட்டமிடலை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

நாட்டில் மேற்கொள்ளப்படும் பேரழிவு மேலாண்மை திட்டம் மற்றும் தேர்தல் நடத்துதல் போன்ற நமது அனுபவங்களை இதில் உபயோகிக்க வேண்டும் என்றும் மேலும் அவர் உத்தரவிட்டார்.  இதே போன்ற முறையில் தடுப்பூசி வழங்குதல் மற்றும் நிர்வகித்தல் முறையை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். அனைத்து தேவையான அமைப்புகளின் வல்லுநர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொது சமூக அமைப்புகள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்/மாநில அளவிலான நிர்வாகிகள் ஆகியோரை பங்கேற்க செய்து ஈடுபடுத்துவதாக இருக்க வேண்டும். நமது சுகாதார திட்டத்தின் மதிப்பீடு நீடித்திருக்கும் வகையிலான முறையில் ஒட்டு மொத்த செயல்பாடுகளும் வலுவான தகவல் தொழில்நுட்ப பின்னணி மற்றும் முறைகள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறி உள்ளார்.  

ஐசிஎம்ஆர் அமைப்பு மற்றும் பயோ-டெக்னாலஜி துறையால் இந்தியாவில் சார்ஸ்கோவி-2(கொவிட்-19 வைரஸ்) மரபணு தொடர்பாக இந்தியா முழுவதும் இரண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வைரஸ் மரபணு ரீதியாக நிலையானது மற்றும் வைரஸில் பெரிய பிறழ்வு எதுவும் இல்லை என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வீழ்ச்சிகாரணமாக மனநிறைவு கொள்ளக் கூடாது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும் என்று தமது உரையின் நிறைவாக பிரதமர் எச்சரிக்கை விடுத்தார். குறிப்பாக வர இருக்கும் விழாக்காலங்களை கருத்தில் கொண்டு தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிதல் போன்ற கொவிட்டுக்கு ஏற்ற நடத்தைகள், தொடர்ந்து கைகளைக் கழுவதுதல் மற்றும் சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளுதலை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Chandrababu Naidu writes: 12 years on, leadership that endured, India that emerged

Media Coverage

Chandrababu Naidu writes: 12 years on, leadership that endured, India that emerged
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister highlights 12 years of the government dedicated to trust, development, and public welfare
June 09, 2026

Prime Minister Shri Narendra Modi today stated that the past 12 years of the government have been dedicated to trust, development, and public welfare. The Prime Minister noted that with the blessings of 140 crore countrymen and the spirit of Nation First, no stone has been left unturned in empowering the youth, women, and farmer brothers and sisters.

Shri Modi observed that it is the result of relentless efforts that today the country has gained a new identity across the world, from infrastructure to the digital revolution. To realize the resolution of a Viksit Bharat, the Prime Minister affirmed that the government will continue to move forward on this path of service, good governance, and prosperity.

The Prime Minister posted on X:

"हमारी सरकार के बीते 12 वर्ष विश्वास, विकास और जनकल्याण को समर्पित रहे हैं। 140 करोड़ देशवासियों के आशीर्वाद और राष्ट्र प्रथम की भावना से हमने युवाओं, महिलाओं और अपने किसान भाई-बहनों को सशक्त बनाने में कोई कोर-कसर नहीं छोड़ी है। यह हमारे अथक प्रयासों का ही परिणाम है कि इंफ्रास्ट्रक्चर से लेकर डिजिटल क्रांति तक आज देश को दुनियाभर में एक नई पहचान मिली है। विकसित भारत के संकल्प को साकार करने के लिए हम सेवा, सुशासन और समृद्धि के इसी पथ पर निरंतर आगे बढ़ते रहेंगे।

#12YearsOfSeva"