சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ல் டேக்வாண்டோ - மகளிர் கே44 - 47 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அருணாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"டேக்வாண்டோ - மகளிர் கே 44 - 47 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அருணாவுக்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பும், திறமையும் உண்மையிலேயே நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளைப் படைக்கட்டும்!"
Congratulations to Aruna on winning the Bronze Medal in Taekwondo - Women's K44 -47KG event. Her dedication and skill have truly made the nation proud. Here's to many more achievements in the future! pic.twitter.com/K49Aq0Nuff
— Narendra Modi (@narendramodi) October 23, 2023


