வாரணாசியில் பாபா விஸ்வநாதர் வளாகத்தை நேற்று தொடங்கி வைத்த பின்னர், பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று கங்கையில் நீராடி வழிபாடுகளையும் நடத்தினார். மாலையில் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்.

கங்கை ஆரத்தி பற்றி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காசியில் ஆரத்தி எப்போதும் இதயத்தை புதிய சக்தியால் நிறைப்பதாக கூறியுள்ளார்.

 “काशी की गंगा आरती हमेशा अंतर्मन को नई ऊर्जा से भर देती है। आज काशी का बड़ा सपना पूरा होने के बाद दशाश्वमेध घाट पर गंगा आरती में शामिल हुआ और मां गंगा को उनकी कृपा के लिए नमन किया। नमामि गंगे तव पाद पंकजम्।“

பின்னர் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

அது பற்றி ட்விட்டர் பதிவில், “காசியில் @BJP4India முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களுடன் நடைபெற்ற விரிவான ஆலோசனை தற்போது முடிவடைந்துள்ளது” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

காசியில் முக்கிய வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த பிரதமர் அது பற்றி ட்விட்டர் பதிவில். “காசியில் முக்கிய வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தேன். இந்தப் புனித நகருக்கு இயன்ற சிறந்த உள்கட்டமைப்புகளை உருவாக்குவது தமது கடமையாகும்” என்று கூறியுள்ளார்.

ரயில் நிலையத்திற்கு சென்ற பிரதமர், “அடுத்த நிறுத்தம்... பனாரஸ் நிலையம். ரயில் போக்குவரத்துத் தொடர்பை அதிகரிக்க நாம் பணியாற்றி வருவதுடன் தூய்மையும், நவீனத்துவமும் நிறைந்த பயணிகளுக்கு உகந்த ரயில் நிலையங்களை உறுதி செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு குறைந்தபட்ச வசதி குறைவு கூட இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் பிரதமர் பணியாற்றி வருகிறார். இதே போல பின்னிறைவிலும் அவர் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தார். தங்களது உள்ளூர் எம்.பி.யான பிரதமர் மீது அன்பையும், உற்சாகத்தையும் பொழிந்த மக்களுடன் அவர் கலந்தார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Cabinet approves ₹1,570 crore ship repair facility at Vadinar, Gujarat

Media Coverage

Cabinet approves ₹1,570 crore ship repair facility at Vadinar, Gujarat
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 6, 2026
May 06, 2026

New India, New Pride: When Self-Reliance Meets Results — A Tribute to PM Modi