13 துறைகளில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டம் அரசின் உறுதிப்பாட்டை காட்டுகிறது: பிரதமர்
உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டம், துறையுடன் கூடிய ஒட்டு மொத்த சூழலுக்கும் பயனளிக்கிறது: பிரதமர்
உற்பத்தியை ஊக்குவிக்க வேகத்தையும், அளவையும் அதிகரிக்க வேண்டும் : பிரதமர்
இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம்: பிரதமர்
உலகம் முழுவதும், இந்தியா மிகப் பெரிய அடையாளமாக மாறியுள்ளது, புதிய நம்பிக்கையை அதிகரிப்பதற்கான உத்திகளை வகுக்கிறது: பிரதமர்

தொழில் துறை, சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை ஏற்பாடு செய்த உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டம் பற்றிய இணைய கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறையை ஊக்குவிக்க, இந்தாண்டு பட்ஜெட்டில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய பிரதமர், கடந்த 6-7 ஆண்டுகளாக இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தை வெவ்வேறு அளவில் ஊக்குவிக்க, பல வெற்றிகரமான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். உற்பத்தியை ஊக்குவிக்க, மிகப் பெரிய அளவிலான நடவடிக்கையை எடுக்க வேண்டும், வேகத்தையும், அளவையும் அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உற்பத்தித் திறனை அதிகரிக்க, உலகின் பல நாடுகள் எடுத்த நடவடிக்கைகளை அவர் உதாரணங்களாக எடுத்து கூறினார். உற்பத்தியை அதிகரிப்பது, அதே அளவுக்கு நாட்டில் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும் என அவர் கூறினார்.

குறைந்த பட்ச அரசு தலையீடு, அதிகபட்ச ஆளுகை என்ற அரசின் சிந்தனை தெளிவாக உள்ளது. எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என அரசு எதிர்பார்க்கிறது என்று பிரதமர் கூறினார்.

தொழில்துறையை ஊக்குவிக்க எளிதாக தொழில் செய்தல், இணக்க சுமையை குறைத்தல், போக்குவரத்து செலவை குறைக்க ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல், மாவட்ட அளவிலான ஏற்றுமதி மையங்களை அமைத்தல் போன்ற பணிகளை அரசு செய்து கொண்டிருக்கிறது என அவர் கூறினார்.

எல்லா விஷயங்களிலும் அரசு தலையிடுவது, தீர்வுகளுக்கு பதிலாக அதிக பிரச்னைகளை உருவாக்கும் என அரசு நம்புகிறது என்று அவர் கூறினார். ஆகையால், சுய அங்கீகாரம், சுய சான்றிதழ் போன்றவை வலியுறுத்தப்படுகின்றன.

இந்தியாவில் உற்பத்தி செய்து, உலகளவில் விலையிலும், தரத்திலும் போட்டி போடும் விதத்தில், இந்திய நிறுவனங்களை மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

‘‘நமது முக்கிய துறைகளில் அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிக முதலீட்டை நாம் ஈர்க்க வேண்டும்’’ என அவர் கூறினார்.

முந்தைய திட்டங்களுக்கும், தற்போதைய அரசின் திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக் காட்டிய பிரதமர், முன்பு தொழில்துறை ஊக்குவிப்பு உள்ளீட்டு அடிப்படையிலான மானியங்களாக இருந்தன. தற்போது அவை, போட்டி நடைமுறை மூலம் இலக்கு மற்றும் செயல்திறன் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது என்றார்.

முதல் முறையாக 13 துறைகள் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார்.

துறையுடன் தொடர்புடைய ஒட்டுமொத்த சூழலுக்கு உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு திட்டம் பயனளிக்கிறது. வாகனம் மற்றும் மருத்துவத் துறையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம், வாகன உதிரி பாகங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மற்றும் மூலப் பொருட்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கும்.

மேம்படுத்தப்பட்ட பேட்டரிகள், சூரிய மின்சக்தி தகடுகள் மற்றும் சிறப்பு எஃகு ஆகியவற்றின் உதவியுடன் நாட்டின் எரிசக்தித் துறை நவீனமயமாக்கப்படும் என அவர் கூறினார்.

அதேபோல், ஜவுளித்துறை மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிலில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம், ஒட்டு மொத்த வேளாண் துறைக்கும் பயனளிக்கும்.

இந்தியாவின் விருப்பத்தை தொடர்ந்து, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது பெருமையான விஷயம் என பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் திட்டத்துக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இத்திட்டம் ஐ.நா பொதுச் சபையில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது நமது விவசாயிகளுக்கு மிகப் பெரிய வாய்ப்பு என அவர் கூறினார்.

நோய்களில் இருந்து மக்களை காக்க, சிறு தானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்த உலகளாவிய பிரசாரத்தை 2023ம் ஆண்டில் தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

2023ம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக ஐ.நா அறிவித்ததன் மூலம், உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும், சிறு தானியங்களுக்கான தேவைகள் மிக வேகமாக அதிகரிக்கும், இது நமது விவசாயிகளுக்கு மிகுந்த பலனளிக்கும் என அவர் கூறினார்.

இந்த வாய்ப்பை வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்தாண்டு பட்ஜெட்டில், உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது என பிரதமர் சுட்டிக் காட்டினார்.

சராசரியாக 5 சதவீத உற்பத்தி, ஊக்குவிப்பாக வழங்கப்படுகிறது. இதனால் அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் உற்பத்தி 520 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும். உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு திட்டம் உள்ள துறைகளில், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் 2 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டம் தொடர்பான அறிவிப்புகள் வேகமாக அமல்படுத்தப்படுகின்றன.

தகவல் தொழில்நுட்பம் ஹார்டுவேர் மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் உற்பத்தியில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம், உற்பத்தியையும், உள்நாட்டு மதிப்பு கூட்டலையும் மிக அதிகளவில் அதிகரிக்கும். ஐ.டி ஹார்டுவேர், 4 ஆண்டுகளில் 3 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான உற்பத்தியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மதிப்பு கூட்டும், 5 ஆண்டுகளில் தற்போதுள்ள 5-10 சதவீதத்திலிருந்து 20 முதல் 25 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தொலை தொடர்பு சாதனங்கள் உற்பத்தியும் 5 ஆண்டுகளில் ரூ.2.5 லட்சம் கோடிக்கு அதிகரிக்கும்.

இவற்றிலிருந்து நாம் ரூ. 2 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யும் நிலையில் இருக்க முடியும் என பிரதமர் கூறினார்.

உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், மருந்து துறையில், அடுத்த 5-6 ஆண்டுகளில், முதலீடு 15,000 கோடிக்கும் மேல் இருக்கும் எனவும், விற்பனை 3 லட்சம் கோடியாகவும், ஏற்றுமதி 2 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் பிரதமர் எதிர்பார்க்கிறார்.

மனிதகுலத்துக்கு இன்று இந்தியா செய்யும் சேவையால், உலகம் முழுவதும் இந்தியா மிகப் பெரிய அடையாளமாக மாறிவருகிறது. இந்தியாவின் நம்பகத்தன்மை மற்றும் அடையாளம் தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

நமது மருந்துகள், மருத்துவ சாதனங்கள், மருத்துவர்கள், மீதான நம்பிக்கை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது என அவர் கூறினார். இந்த நம்பிக்கைக்கு மதிப்பளிக்க, நீண்ட கால உத்தியுடன் மருந்தியல் துறை செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவில் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் தொடங்கப்பட்டது என அவர் கூறினார். தொற்று காலத்தில் கூட, கடந்தாண்டில் இத்துறை ரூ.35,000 கோடி மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்தது.

ரூ.1300 கோடி அளவுக்கு புதிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு துறையிலும், வழிகாட்டுதல் பிரிவு உருவாக்கப்படுவதன் மூலம், நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரதமர் கூறினார்.

தொழில்துறையில், உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தில் இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நாட்டுக்கும், உலகத்துக்கும், சிறந்த தரமான பொருட்களை உருவாக்குவதில் தொழில்துறை கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறினார். வேமாக மாறிவரும் உலகிற்கு ஏற்ப, புதுமை கண்டுபிடிப்பில் தொழில்துறை ஈடுபட வேண்டும் எனவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நமது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் எனவும், தொழிலாளர்களின் திறமைகளை மேம்படுத்தி, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

 

 

 

 

 

 

 

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PLI schemes attract ₹2 lakh crore investment till September, lift output and jobs across sectors

Media Coverage

PLI schemes attract ₹2 lakh crore investment till September, lift output and jobs across sectors
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 13, 2025
December 13, 2025

PM Modi Citizens Celebrate India Rising: PM Modi's Leadership in Attracting Investments and Ensuring Security