நார்வே பிரதமர் திரு ஜோனாஸ் கஹர் ஸ்டோர் மீண்டும் அந்நாட்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். பல்வேறு துறைகளில் நார்வேயுடனான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“பிரதமர் திரு ஜோனாஸ் கஹர் ஸ்டோர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள். இந்தியா-நார்வே இடையேயான கூட்டாண்மையை அனைத்து துறைகளிலும் மேலும் வலுப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்.”
Congratulations to Prime Minister Jonas Gahr Støre on his re-election. I look forward to continue working closely together to further strengthen the India-Norway partnership in all areas.@jonasgahrstore
— Narendra Modi (@narendramodi) September 10, 2025


