பொலிவியா நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு திரு ரோட்ரிகோ பாஸ் பெரேராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“பொலிவியா நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ரோட்ரிகோ பாஸ் பெரேராவிற்கு வாழ்த்துகள். இந்தியாவிற்கும் பொலிவியாவிற்கும் இடையிலான நெருக்கமான நட்புறவு, நீண்ட காலமாக நமது பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை ஆதரித்து வருகின்றது. பகிரப்பட்ட வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான நமது கூட்டுமுயற்சியை வரும் காலங்களில் மேலும் வலுப்படுத்த நான் ஆவலுடன் இருக்கிறேன்.
@Rodrigo_PazP”
Warm congratulations, Mr. Rodrigo Paz Pereira, on your election as the President of Bolivia. Close and friendly ties between India and Bolivia have long underpinned our mutually beneficial cooperation. I look forward to deepening our partnership for shared progress and prosperity…
— Narendra Modi (@narendramodi) October 21, 2025


