இன்று தொடங்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2025-ஐ இந்தியா பெருமையுடன் புதுதில்லியில் நடத்தும் நிலையில், அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரதிநிதிகளை அன்புடன் வரவேற்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளதாவது;
"இன்று தொடங்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2025-ஐ தில்லியில் நடத்துவதில் இந்தியா பெருமை கொள்கிறது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அன்பான வரவேற்பு மற்றும் வாழ்த்துகள். இந்தப் போட்டி மனித உறுதியையும், எழுச்சியையும் கொண்டாடுகிறது. இந்தப் போட்டி உலகம் முழுவதும் உள்ளடக்கிய மற்றும் துடிப்பான விளையாட்டுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கட்டும்."
India is proud to be hosting the World Para Athletics Championships 2025 in Delhi, which commences today. A warm welcome and best wishes to all participants. This tournament celebrates human determination and spirit. May this tournament inspire a more inclusive and vibrant… pic.twitter.com/SRa6p2z0sO
— Narendra Modi (@narendramodi) September 27, 2025


