பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை பார்வையிடுகிறார். கும்பமேளாவில் மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தூய்மையான கும்பமேளா, தூய்மைக்கு நன்றி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார்.
தூய்மையான கும்பமேளா, தூய்மைக்கு நன்றி என்பதற்கான விருதுகளைத் துப்புரவுத் தொழிலாளர்கள், காவல்துறை ஊழியர்கள் உள்ளிட்டோருக்குப் பிரதமர் வழங்குவார். தூய்மைக்கான சேவை நிதிப் பயன்கள் பற்றிய டிஜிட்டல் அறிவிப்பும் வெளியிடப்படும்.
பின்னர் அங்கு திரண்டிருக்கும் மக்களிடையே பிரதமர் உரையாற்றுவார்.
திரிவேணி சங்கமத்தில் பிரதமர் புனித நீராடுவார். பிரயாக்ராஜில் துப்புரவுத் தொழிலாளர்களுடனும் அவர் கலந்துரையாடுவார்.
இந்த ஆண்டு பிரயாக்ராஜில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கும்பமேளாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தூய்மை இந்தியா முன்முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தூய்மையான கும்பமேளா, தூய்மைக்கு நன்றி எனும் விருதுகள் பிரதமரால் வழங்கப்படுவது, தூய்மையான கும்பமேளாவை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகித்தவர்களை கவுரவிப்பதாக இருக்கும்.


