பிரதமர் திரு. நரேந்திர மோடி 2019 மார்ச் 4 மற்றும் 5 தேதிகளில் குஜராத் மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். அவர் ஜாம்நகர், ஜஸ்பூர், அகமதாபாத் நகரங்களிலும், மார்ச் 5 ஆம் தேதி அடாலஜ் மற்றும் வஸ்த்ராலிலும் இருப்பார்.

மார்ச் 4 ஆம் தேதி ஜாம்நகரில், மருத்துவக் கல்லூரி வளாகத்தைப் பிரதமர் பார்வையிட்டு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பின்வருபவை அதில் அடங்கும் –

*குரு கோவிந்த் சிங் மருத்துவமனையின் கூடுதல் பிரிவுகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்:

குரு கோவிந்த் சிங் மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் கொண்ட கூடுதல் பகுதியை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மருத்துவமனையில் முதுநிலை வகுப்பில் பயில்வோருக்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள விடுதியையும் அவர் திறந்து வைக்கிறார்.

மருத்துவமனையை பார்வையிடும் பிரதமர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார்.

*சாவ்னி திட்டங்களைத் தொடங்கி வைத்தல்

சாவ்னி திட்டங்களை அங்கிருந்தவாறே பொத்தானை அழுத்தி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

ரஞ்சித்சாகர் இறைவைப் பாசனம் Und-1 மற்றும் நியாரி இறைவைப் பாசனத் திட்டம் Machu-1 ஐயும் நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக சாவ்னி திட்டங்கள் உள்ளன. ஜோடியா கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கும், Venu-2 இறைவைப் பாசனத் திட்டமான Und-3 -க்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

*பந்த்ரா-ஜாம்நகர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

பந்த்ரா-ஜாம்நகர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை காணொலிக்காட்சிவாயிலாககொடியசைத்து பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

*மற்ற திட்டங்கள்

Aaji -3 யில் இருந்து கிஜாடியா வரையில் 51 கிலோ மீட்டர் நீளம் உள்ள குடிநீர் குழாயை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் கல்வெட்டை பிரதமர் திறந்து வைக்கிறார். ராஜ்கோட் – கனாலஸ் ரயில் பாதை இரட்டிப்பு பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

ஜாம்நகர் மாநகராட்சி கட்டியுள்ள 448 வீடுகள், ஜாம்நகர் பகுதி மேம்பாட்டு ஆணையம் கட்டியுள்ள 1008 அடுக்குமாடி வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் வகையில் சிலருக்கு பிரதமர் சாவிகளை ஒப்படைக்கிறார்.

அங்கு பொது மக்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றுகிறார்.

ஜஸ்பூரில்…

குஜராத் மாநிலம் ஜஸ்பூரில் விஸ்வ உமியத்தம் வளாகத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

அங்கு பொது மக்கள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார்.

அகமதாபாத் வஸ்த்ரால் காம் மெட்ரோ ரயில் நிலையத்தில்…

வஸ்த்ரால் காம் மெட்ரோ ரயில் நிலையத்தில் அகமதாபாத் மெட்ரோ ரயில் சேவை பகுதி -1 ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார். மெட்ரோ ரயில் பகுதி-2 க்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

அகமதாபாத் மெட்ரோ பொது பயணத்துக்கான அட்டை வழங்கும் சேவையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் வஸ்த்ரால் காம் ரயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்கிறார்.

அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம் பகுதி 2 -க்கு மத்திய அமைச்சரவை 2019 பிப்ரவரியில் ஒப்புதல் அளித்துள்ளது. பகுதி -2 திட்டம் மொத்தம் 28.254 கிலோ மீட்டர் நீளத்துக்கான இரண்டு வழித்தடங்கள் அடங்கியதாக இருக்கும். அகமதாபாத் மற்றும் காந்திநகர் பகுதிகளில் பொது மக்களுக்கு சவுகரியமான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்து வசதிகளை அளிப்பதாக இந்தத் திட்டம் அமையும்.

அகமதாபாத் மெட்ரோ ரயில் சேவை பகுதி -1 மொத்தம் 40.03 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. அதில் 6.5 கிலோ மீட்டர் நிலத்துக்கு அடியிலும், மீதி தொலைவு மேம்பாலத்திலும் செல்வதாக இருக்கும்.

இந்த மெட்ரோ திட்டங்கள் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தித் தருவதுடன், பயண நேரத்தைக் குறைப்பதாகவும், நகர்ப்புறப் பகுதிகளில் வாழ்க்கை நிலையை எளிதாக்குவதாகவும் இருக்கும்.

அகமதாபாத் பி.ஜே. மருத்துவக் கல்லூரியில்…

பி.ஜே. மருத்துவக் கல்லூரி மைதானத்தில், சுகாதாரம் மற்றும் ரயில்வே துறைகள் தொடர்பான ஏராளமான திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

சுகாதாரம்

அகமதாபாத் பகுதியில் கட்டப்பட்டுள்ள பல மருத்துவமனைகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். மகளிர், குழந்தைகள் & பல்நோக்கு மருத்துவமனை, புற்றுநோய் மருத்துவமனை, கண் மருத்துவமனை, பல் மருத்துவமனை ஆகியன அங்கு கட்டப்பட்டுள்ளன.

அகமதாபாத்தில் சுகாதார வசதிகளை பெரிய அளவில் மேம்படுத்தும் வகையில் இந்த மருத்துவமனைகள் இருக்கும். இந்த மருத்துவமனைகள் திறக்கப்படுவதன் மூலம், அகமதாபாத் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தரமான சுகாதார வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

PM-JAY-ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், சில பயனாளிகளுக்கு தங்க அட்டைகளை பிரதமர் வழங்குவார்.

ரயில்வே

படன் – பிந்தி ரயில்பாதையை பிரதமர் திறந்து வைப்பார்.தாஹோட் ரயில்வே பணிமனையை அவர் அர்ப்பணித்து வைக்கிறார். ரயில் பெட்டிகள் POH திறனை மாதத்துக்கு 150 பெட்டிகள் என்ற அளவில் உயர்த்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் பணிகள் இதில் அடங்கும். ஆனந்த் – கோத்ரா ரயில்பாதை இரட்டிப்புத் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

பிறகு பொது மக்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றுகிறார்.

புதிய சிவில் மருத்துவமனையைப் பார்வையிடும் பிரதமர், 1200 படுக்கை வசதிகள் கொண்ட புதிய சிவில் மருத்துவமனையைத் திறந்து வைக்கும் வகையில் அவர் ரிப்பன் வெட்டுகிறார். அகமதாபாத்தில் புதிய புற்றுநோய் மருத்துவமனை மற்றும் கண் மருத்துவமனையை அவர் பார்வையிடுகிறார்.

5 மார்ச் 2019

காந்தி நகர், அடாலஜ்ஜில்

மார்ச் 5 ஆம் தேதி காந்தி நகர், அடலையில் அன்னபூர்ணா தாம் அறக்கட்டளையை பிரதமர் பார்வையிடுகிறார். அங்கு சிக்ஷான் பவன் மற்றும் வித்யார்த்தி பவன் ஆகியவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

அங்கு பொது மக்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றுகிறார்.

பிரதமரின் ஷ்ரம் யோகி மன்-தான் திட்டத்தை (PM-SYM) பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

பிரதமரின் ஷ்ரம் யோகி மன்-தான் திட்டத்தை PM-SYM ஓய்வூதிய அட்டைகள் பயனாளிகள் சிலருக்கு அவர் வழங்குவார்.

பிரதமரின் ஷ்ரம் யோகி மன்-தான் திட்டத்தை PM-SYM திட்டம் பற்றி

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் – பிரதமரின் ஷ்ரம் யோகி மன்-தான் திட்டத்தை அடையாளபூர்வமாக வஸ்த்ராலில் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மாத வருமானம் ரூ.15,000 அல்லது அதற்கும் கீழாக உள்ள தொழிலாளர்களில் முதியவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பிரதமரின் ஷ்ரம் யோகி மன்-தான் (PM-SYM) திட்டம் என்ற மெகா திட்டம் 2019-20 பட்ஜெட்டில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.

இது விருப்ப அடிப்படையிலான, பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டமாகும். PMSYM திட்டத்தின் கீழ் சந்தாதாரர்கள் 60 வயதை எட்டியதும் மாதம் ரூ.3000 என்ற அளவில் குறைந்தபட்ச உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கும்.
வயதின் அடிப்படையில் தொழிலாளரின் பங்களிப்புக்கு இணையான பங்களிப்பை பயனாளிக்கு மத்திய அரசு வழங்கும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிரதமரின் ஷ்ரம் யோகி மன்-தான் திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் பத்து கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியளவு, பெரும்பாலும் தெருவோரக் கடைகள், ரிக்சா இழுப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், குப்பை பொறுக்குபவர்கள், வேளாண் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், தோல் தொழிலாளர்கள் மற்றும் இதுபோன்ற எண்ணற்ற தொழில்களில் பெரும்பகுதியாக ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் 40 கோடி பேரின் மூலமாகக் கிடைக்கிறது.

PM-SYM திட்டமும், `ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் மூலமாக அளிக்கப்படும் சுகாதாரப் பாதுகாப்பு திட்டமும், `பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டம்’ மற்றும் `பிரதமரின் சுரக்சா பீம திட்டம்’ மூலமும் அளிக்கப்படும் ஆயுள் & ஊனமுறுதல் பாதுகாப்புத் திட்டங்களும், அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, வயதான காலத்தில் விரிவான, சமூகப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்பவையாக இருக்கின்றன.

 
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
How Swachh Bharat Mission advanced progress on safety and dignity, health and economy - Parameswaran Iyer

Media Coverage

How Swachh Bharat Mission advanced progress on safety and dignity, health and economy - Parameswaran Iyer
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister, Shri Narendra Modi welcomes Crown Prince of Abu Dhabi
September 09, 2024
Two leaders held productive talks to Strengthen India-UAE Ties

The Prime Minister, Shri Narendra Modi today welcomed His Highness Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan, Crown Prince of Abu Dhabi in New Delhi. Both leaders held fruitful talks on wide range of issues.

Shri Modi lauded Sheikh Khaled’s passion to enhance the India-UAE friendship.

The Prime Minister posted on X;

“It was a delight to welcome HH Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan, Crown Prince of Abu Dhabi. We had fruitful talks on a wide range of issues. His passion towards strong India-UAE friendship is clearly visible.”