உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா கண்காட்சி அரங்கில், பெட்ரோடேக்  2019ஐ  பிரதமர்  திரு நரேந்திர மோடி 11 பிப்ரவரி 2019 அன்று துவக்கி வைக்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் அவர் உரையாற்றுவார்.  

பெட்ரோடேக்  2019, இந்தியாவின் முன்னோடி ஹைட்ரோகார்பன் மாநாடாக கருதப்படுகிறது. பெட்ரோடேக்  2019, மத்திய அரசின், மத்திய பெட்ரோலியம்மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள 13-வது சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாடு மற்றும் கண்காட்சியாகும்.

2019 பிப்ரவரி 10 முதல்  12  வரை நடைபெற உள்ள இந்த 3 நாள் மாநாடு, இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் சமீபத்திய சந்தை  மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த மாற்றங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. பங்குதாரர் நாடுகளைச் சேர்ந்த 95-க்கும் மேற்பட்ட எரிசக்தித் துறை அமைச்சர்கள் மற்றும் சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த 7000 பிரதிநிதிகள் பெட்ரோடெக் – 2019-ல் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

     இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்திய கண்காட்சி அரங்கில், சுமார் 20,000 சதுரமீட்டருக்கு மேற்பட்ட பரப்பளவில் கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட உள்ளது. பெட்ரோடெக் 2019 கண்காட்சியில்     13-க்கும் மேற்பட்ட நாடுகளின் அரங்குகளும், 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 750 நிறுவனங்களும் பங்குபெறவுள்ளன.  இந்தியாவில் உற்பத்தி செய்வோம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பதை மையக் கருத்தாகக் கொண்டு இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

     கடந்த காலத்தில், 12-ஆவது பெட்ரோடெக் – 2016 மாநாட்டை, 2016 டிசம்பர் 5 அன்று பிரதமர் தொடங்கிவைத்தார்.

     இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்திற்கான எனது தொலைநோக்கு நான்கு தூண்களைக் கொண்டது என்று அவர் தெரிவித்துள்ளார்:

      எரிசக்தி கிடைக்கச் செய்தல், எரிசக்தி சிக்கனம், நீடித்த எரிசக்தி & எரிசக்தி பாதுகாப்பு.”

     பன்னாட்டு ஹைட்ரோகார்பன் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்து, இந்தியாவில் உற்பத்தி செய்யுமாறு அழைப்பு விடுத்த பிரதமர், ஊழல் மற்றும் ஊழல்வாதிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதை மாற்றியமைப்பதே தமது லட்சியம் என்றும் தெரிவித்துள்ளார்.     

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Around 8 million jobs created under the PMEGP, says MSME ministry

Media Coverage

Around 8 million jobs created under the PMEGP, says MSME ministry
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 23, 2024
July 23, 2024

Budget 2024-25 sets the tone for an all-inclusive, high growth era under Modi 3.0