பகிர்ந்து
 
Comments
The nation is now moving towards Gas Based Economy, says PM Modi
City Gas Distribution network will play a major role in achieving Clean Energy solutions: PM Modi
Government would strive to fulfil the targets for Clean Energy and Gas Based Economy: PM Modi

புதுதில்லி விஞ்ஞான் பவனில் 9-ஆவது நகர்ப்புற சமையல் எரிவாயு விநியோக (சி.ஜி.டி.) ஏலச்சுற்றின் கீழ் சி.ஜி.டி. பணித் தொடக்கத்தை குறிக்கும் வகையில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (22.11.2018) அடிக்கல் நாட்டினார். 10-ஆவது சி.ஜி.டி. ஏலச்சுற்றினையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சி.ஜி.டி. ஏலத்தின் 9-ஆவது சுற்றின் கீழ், 129 மாவட்டங்களில் நகர்ப்புற சமையல் எரிவாயு விநியோக கட்டமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாகக் கூறினார். சி.ஜி.டி.-யின் 10-ஆவது ஏலச்சுற்றுக்குப் பின்னால், நகர்ப்புற சமையல் எரிவாயு விநியோகக் கட்டமைப்பில் 400-க்கும் அதிகமான மாவட்டங்கள் இணையும் என்றும், இது மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதமாகும் என்றும் அவர் கூறினார்.

நாடு தற்போது எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், மத்திய அரசு எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் நோக்கி கவனத்தை செலுத்தி வருகிறது என்றார். நாட்டில் எரிவாயுக் கட்டமைப்பை வலுப்படுத்த குறிப்பாக திரவ எரிவாயு முனையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், தேச அளவிலான எரிவாயு தொகுப்பை உருவாக்குதல், நகர்ப்புற எரிவாயு விநியோகக் கட்டமைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக திரு மோடி குறிப்பிட்டார்.

தூய்மையான எரிசக்தி என்பதை நோக்கி செல்வதில், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தின் பங்கு பற்றி விவரித்த பிரதமர், சி.ஜி.டி. கட்டமைப்பு, தூய்மை எரிசக்தி என்பதை சாதிப்பதில் இது பெரும் பங்கு வகிக்கும் என்றார். தூய்மை எரிசக்தியை நோக்கிய மத்திய அரசின் முயற்சிகள் மிகவும் விரிவானவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சூழலில் தூய எரிசக்தி என்பதற்கு எத்தனால் கலப்பு, அழுத்தம் ஊட்டப்பட்ட சாண எரிவாயுக் கூடங்கள், திரவ எரிவாயு இணைப்புகளை அதிகப்படுத்துதல், மோட்டார் வாகனங்களுக்கு பி.எஸ்-6 எரிபொருள்களை அறிமுகம் செய்தல் போன்ற மத்திய அரசின் பல்வேறு முன்முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.

கடந்த நான்காண்டுகளில் 12 கோடிக்கும் அதிகமான எல்.பி.ஜி. இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். நகரங்களில் எரிவாயு கட்டமைப்பை உருவாக்குவது புதிய சுற்றுச்சூழல் முறையை ஏற்படுத்தும் என்றும், இதன்மூலம் எரிவாயு அடிப்படையிலான தொழில்கள் உருவாகி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்றும் அவர் கூறினார்.

தூய்மை எரிசக்தி மற்றும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம் என்பதற்கான இலக்குகளை அடைவதற்கு அரசு பாடுபடும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இத்தகைய இலக்குகளை நிறைவு செய்வது நமக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்திற்காகவும், எதிர்காலத் தலைமுறைகளுக்காகவும் என்று அவர் கூறினார். 

Click here to read PM's speech

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
In 100-crore Vaccine Run, a Victory for CoWIN and Narendra Modi’s Digital India Dream

Media Coverage

In 100-crore Vaccine Run, a Victory for CoWIN and Narendra Modi’s Digital India Dream
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை அக்டோபர் 22, 2021
October 22, 2021
பகிர்ந்து
 
Comments

A proud moment for Indian citizens as the world hails India on crossing 100 crore doses in COVID-19 vaccination

Good governance of the Modi Govt gets praise from citizens