In the coming years, Bihar will be among those states of the country, where every house will have piped water supply: PM Modi
Urbanization has become a reality today: PM Modi
Cities should be such that everyone, especially our youth, get new and limitless possibilities to move forward: PM Modi

கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் மற்றும் ‘அம்ருத்’ திட்டங்களின் கீழ் பிகாரில் பல திட்டங்களை  பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.  பேயூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு  நிலையம், பாட்னா, சிவன், மற்றும் சாப்ரா நகரங்களில் புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்காகன அடல் திட்டம்(அம்ருத்) என நான்கு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.  இதுதவிர, முங்கர், ஜமல்பூர்  ஆகிய இடங்களில் குடிநீர் விநியோக திட்டங்கள், முசாபர்பூரில் கங்கை சுத்தப்படுத்தம் திட்டத்தின் கீழ் ஆற்றுப் படுகை மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டன.

 

கொரோனா நேரத்திலும், பிகாரில் பல வளர்ச்சிப் பணிகள் தடையின்றி நடப்பதாக பிரதமர் கூறினார்.

பிகாரில் நூற்றுக் கணக்கான கோடி செலவில் சமீபத்தில் தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களால், உள்கட்டமைப்புகள் மேம்படுவதோடு, பிகார் விவசாயிகளுக்கும் பயனளிக்கும் என பிரதமர் குறிப்பிட்டார்.

பொறியாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் வளர்ச்சிக்குப் பணியாற்றிய பொறியாளர்களை பிரதமர் பாராட்டினார். இந்தியாவின் முன்னோடியாக திகழ்ந்த நவீன  சிவில் இன்ஜினியர் சர் எம்.விஸ்வேஷ்வரய்யாவின் நினைவாக இந்த பொறியாளர் தினம் கொண்டாப்படுகிறது.  நாட்டின் வளர்ச்சிக்கு பிகார் மாநிலமும், லட்சக்கணக்கான பொறியாளர்களை வழங்கியுள்ளதாக  பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார். 

 

வரலாற்று சிறப்புமிக்க நகரங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியத்தை கொண்ட மாநிலமாக பிகார் உள்ளது என திரு.மோடி கூறினார்.  சுதந்திரத்துக்குப்பின் தொலை நோக்கு தலைவர்களால், பிகார் வழிநடத்தப்பட்டது என்றும், அடிமை கால சிதைவுகளை அகற்ற அவர்கள் தீவிர முயற்சி எடுத்தனர் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.  அதன்பிறகு பிகாரில் ஒரு மோசமான வளர்ச்சி ஏற்பட்டதால், நகர்ப்புற உள்கட்டமைப்பு,  கிராமப்புற உள்கட்டமைப்பு ஆகியவை சீரழிந்ததாக  பிரதமர்  கூறினார்.

 

சுயநலம், ஆட்சி நிர்வாகத்தை மிஞ்சும் போதும், ஓட்டு வங்கி அரசியல் தலைதூக்கும்போதும், ஏற்கனவே பின்தங்கியுள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்.  குடிநீர் மற்றும் கழிவுநீர் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதியின்றி, பிகார் மக்கள் இந்த கொடுமையை பல ஆண்டுகாலமாக பொறுத்துக் கொண்டனர்.  அசுத்தமான நீரைக் குடிப்பதால், மக்களுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது என்றும், சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதி சிகிச்சைக்கு செல்வதாகவும் பிரதமர் கூறினார். இந்த சூழ்நிலையில், பிகாரின் பெரும்பாலான மக்கள் கடன், நோய், உதவியின்மை, கல்வியின்மை போன்றவற்றை தங்களின் தலைவிதி என ஏற்றுக் கொண்டனர்.

பிகாரில் நிலைமையை மாற்றியமைக்க கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், மிகவும் பாதிக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. கல்வியில் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை  கொடுக்கப்பட்டது, பஞ்சாயத்து ராஜ் உட்பட உள்ளாட்சி அமைப்புகளில் பின்தங்கியவர்கள் பங்கேற்பு போன்றவை மக்களின் நம்பிக்கையை அதிகரித்தது . 2014ம் ஆண்டு முதல், கட்டமைப்பு தொடர்பான திட்டங்களின் கட்டுப்பாடு கிராமப் பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டன.  தற்போது, திட்டமிடுதல் முதல் அமல்படுத்துவது வரை  மற்றும் திட்டங்களைப் பராமரிப்பது போன்றவற்றில் உள்ளூர் தேவைகளை உள்ளாட்சி அமைப்புகளால் நிறைவேற்ற முடிகிறது. அதனால்தான்  பிகார் நகரங்களில் குடிநீர் மற்றும் கழிவுநீர்  கட்டமைப்பு வசதியில் தொடர்ச்சியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

 

கடந்த 4-5 ஆண்டுகளில் அம்ருத் திட்டம் மற்றும் மாநில அரசின் திட்டங்களால், பிகார்  நகரங்களில் லட்டசக்கணக்கான மக்களுக்கு குடிநீர் வசதி கிடைத்துள்ளது என பிரதமர் கூறினார். வரும் ஆண்டுகளில், பிகாரில் ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் இணைப்பு இருக்கும்.  இந்த பெரிய இலக்கை அடைய, கொரோன நேரத்திலும், பிகார் மக்கள் தொடர்ந்து பணியாற்றியுள்ளனர் என்று பிரதமர் கூறினார்.  கடந்த சில மாதங்களில் 57 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டதில், பிரதமரின் ஏழைகள் நலன் வேலை வாய்ப்புத் திட்டம் முக்கிய பங்காற்றியது என பிரதமர் கூறினார்.  பல மாநிலங்களில் இருந்து பிகாருக்கு திரும்பிய தொழிலாளர்கள்  இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக பிரதமர் கூறினார்.

பிகாரின் தொழிலாளர்களுக்காகவே, ஜல் ஜீவன் திட்டம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.  ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் கடந்த ஓராண்டில், 2 கோடிக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள்  வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். தற்போது, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் உள்ளது. சுத்தமான குடிநீர் ஏழைகளின் வாழ்க்கையை மட்டும் மேம்படுத்தவில்லை, அவர்களை பல நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. பிகாரின் நகர்புறங்களிலும், 12 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் பணி அம்ருத் திட்டத்தின் கீழ் வேகமாக நடைபெற்று வருவதாகவும், இவர்களில் 6 லட்சம் குடும்பங்களுக்கு ஏற்கனவே, குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர்  கூறினார்.

நகரங்களில் குடியேறுவோர் அதிகரித்து வருவதாகவும், நகரமயமாக்கலை டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் ஆதரித்ததாகவும், இதை அவர் ஒரு பிரச்சனையாகக் கருதவில்லை என்றும் பிரதமர் கூறினார். நகரங்களில் ஏழைகளுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் அம்பேத்கர் நினைத்ததாக பிரதமர் கூறினார். நகரங்களில் ஒவ்வொரு குடும்பமும் வளமுடன் வாழ முடியும என்றும், நகரங்களில் ஏழைகள், தலித், பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள் என அனைவருக்கும் மதிப்பு மிக்க வாழ்க்கை கிடைக்கும் என பிரதமர் கூறினார். 

நாட்டில் தற்போது புதிய நகரமயமாக்கலை நாம் பார்க்கிறோம் எனவும் பிரதமர் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நகரமயமாக்கல் என்பது குறிப்பிட்ட சில நகரங்களில் சில பகுதிகளை மட்டும் மேம்படுத்துவதாக இருந்தது. தற்போது அந்த நிலை  மாறிவிட்டது. நாட்டின் புதிய நகரமயமாக்கலுக்கு பிகார் மக்கள் முழு பங்களிப்பை அளிக்கின்றனர். அவர்களின் எதிர்கால தேவைக்கேற்ப, நகரத்தை தயார்படுத்தி, தற்சார்பு இந்தியாவுக்கு ஊக்கம் அளிப்பது முக்கியம் என பிரதமர் கூறினார். இந்த சிந்தனையுடன், அம்ருத் திட்டத்தின் கீழ் பிகாரின் நகரங்களில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

 

பிகாரில் 100க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட எல்இடி தெரு விளக்குகள் பொருத்தப்பட்டன  என திரு. நரேந்திர மோடி கூறினார்.  கங்கை நதியில் சுமார் 20 பெரிய மற்றும் முக்கிய நகரங்கள்  அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார். கங்கை நதியின் சுத்தம், இந்த நகரங்களில் வாழும் மக்களுக்கு நேரடிப் பயனை அளிக்கும். இதை மனதில் வைத்துதான், பிகாரில் 50  மேற்பட்ட திட்டங்களை ரூ.6,000 கோடியில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது என பிரதமர் கூறினார்.  அனைத்து நகரங்களில் உள்ள கங்கைக் கரைகளில், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவும், கழிவு நீர் ஆற்றில் நேரடியாகக் கலப்பதை தடுக்கவும்  அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

பாட்னா மற்றும் பேயூரில் தொடங்கப்பட்ட திட்டங்கள் லட்சக்கணக்கான மக்களுக்குப் பயனளிக்கும் என பிரதமர் கூறினார். இத்துடன் கங்கை நதிக் கரையில்  உள்ள கிராமங்களும், ‘கங்கா கிராமமாக’ மேம்படுத்தப்படுகின்றன என பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Jan Dhan accounts hold Rs 2.75 lakh crore in banks: Official

Media Coverage

Jan Dhan accounts hold Rs 2.75 lakh crore in banks: Official
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 7, 2025
December 07, 2025

National Resolve in Action: PM Modi's Policies Driving Economic Dynamism and Inclusivity