பகிர்ந்து
 
Comments
இன்று இந்தியா முன்னோக்கி செல்கிறது: நரேந்திர மோடி
நமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாக இருக்கிறது: பிரதமர்
நமது நாட்டின் மாநகரங்கள் மற்றும் கிராமங்கள் முன்னோக்கி செல்கிறது. நாங்கள் 100 ஸ்மார்ட் நகரங்களை கட்டியமைக்கிறோம்: பிரதமர்
நமது நாட்டின் உள்கட்டமைப்பு முன்னோக்கி செல்கிறது. நாங்கள் சாலைகள், விமான நிலையங்கள், மற்றும் துறைமுகங்கள் அனைத்தையும் கட்டியமைக்கிறோம்: பிரதமர் மோடி
நமது நாட்டின் உள்கட்டமைப்பு முன்னோக்கி செல்கிறது. நாங்கள் சாலைகள், விமான நிலையங்கள், மற்றும் துறைமுகங்கள் அனைத்தையும் கட்டியமைக்கிறோம்: பிரதமர் மோடி
நமது நாட்டின் சீர்திருத்தங்கள் முன்னோக்கி செல்கிறது. நமது இந்தியாவில் வர்த்தகம் சிறப்பாக நடைபெறுகிறது: பிரதமர் மோடி
"எங்களது வாழ்க்கை முன்னோக்கி நகர்கிறது, குடும்பங்கள் இப்போது வீடுகள், கழிப்பறைகள், எல்பிஜி சிலிண்டர்கள், வங்கிக் கணக்குகளை மக்கள் பெறுகிறார்கள்: பிரதம ர் "
நமது இந்தியா சிறப்பாக முன்னோக்கி செல்கிறது: நரேந்திர மோடி
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான மிஅக்வும் சக்திவாய்ந்த ஆயுதமாக தூய்மையான எரிசக்தியின் ஆதரவு பெற்ற தூய்மையான நகர்வு உள்ளது :பிரதமர் மோடி
ஆங்கில எழுத்தான சி என்பதில் தொடங்கும் பொது, இணைப்பு, வசதி, நெருக்கடியற்ற, சக்தியூட்டப்பட்ட, தூய்மையான மற்றும் நவீன என்ற சொற்களின் ஆங்கில வார்த்தைகளின் 7 சி-க்களின் அடிப்படையில் நகர்வுக்கான எதிர்காலம் உள்ளது: பிரதமர்

பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று உலகளாவிய நகர்வு உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார்.

இந்த உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, இளைஞர் மற்றும் இதர துறைகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது என்றார். நகர்வு பொருளாதாரத்தின் முக்கிய ஊக்கியாக உள்ளது என்றும் அது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

ஆங்கில எழுத்தான சி என்பதில் தொடங்கும் பொது, இணைப்பு, வசதி, நெருக்கடியற்ற, சக்தியூட்டப்பட்ட, தூய்மையான மற்றும் நவீன என்ற சொற்களின் ஆங்கில வார்த்தைகளின் 7 சி-க்களின் அடிப்படையில் நகர்வுக்கான எதிர்கால தொலைநோக்கு பார்வை உள்ளது என அவர் தெரிவித்தார்.

 

பிரதமர் உரையின் முமு விவரம் வருமாறு:

மேன்மைக்குரியோரே,

உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள பெருமைக்குரிய பிரதிநிதிகளே,

சீமான்கள், சீமாட்டிகளே,

உலகளாவிய நகர்வு உச்சிமாநாட்டிற்கு நான் உங்களை வரவேற்கிறேன்.

மூவ் – என்ற இந்த உச்சிமாநாட்டின் பெயர் இன்றைய இந்தியாவின் உணர்வை படம்பிடிக்கிறது. உண்மையில் இந்தியா முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

நமது பொருளாதாரம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலகின் வேகமாக வளரும் பெரும் பொருளாதாரமாக நாம் உள்ளோம்.

நமது ஊர்கள் மற்றும் நகரங்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. நூறு அதிநவீன நகரங்களை நாம் உருவாக்கி கொண்டிருக்கிறோம்.

நமது உள்கட்டமைப்புகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. நாம் சாலைகள், விமான நிலையங்கள், ரயில்பாதைகள் மற்றும் துறைமுகங்களை விரைவாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நமது பொருட்கள் முன்னேற்றத்தை சந்தித்து வருகின்றன. சரக்குகள் மற்றும் சேவை வரி நமது விநியோக சங்கிலிகள் மற்றும் கிடங்கு கட்டமைப்புகளை பகுத்தறிய உதவியுள்ளது. நமது சீர்திருத்தங்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றது. இந்தியாவை எளிதாக வர்த்தகம் செய்யும் இடமாக நாம் ஆக்கியிருக்கிறோம்.

நமது வாழ்க்கை முன்னேற்றம் அடைந்து வருகிறது. நமது குடும்பங்கள் வீடுகளையும், கழிவறைகளையும், புகையில்லா சமையல் எரிவாய் சிலிண்டர்களையும் வங்கிக் கணக்குகளையும் கடன்களையும் பெறுகின்றன.

நமது இளைஞர்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். உலகத்தின் புதிய தொழில்களின் தொகுப்பாக நாம் விரைவாக உருவாகி வருகிறோம். புதிய சக்தி,அவசரம் மற்றும் நோக்கத்துடன் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது.

நண்பர்களே,

மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு நகர்வு முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இந்த உலகம் தற்போது புதிய நகர்வு புரட்சியின் மையப் பகுதியில் உள்ளது. எனவே நகர்வு பற்றி பரவலாக புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும்.

நகர்வு என்பது பொருளாதாரத்தின் முக்கிய ஊக்கியாகும். சிறந்த நகர்வு பயணம் மற்றும் போக்குவரத்தின் சுமையை குறைப்பதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும். ஏற்கெனவே பெரும் வேலைகளை அளித்து வரும் இது, அடுத்த தலைமுறை வேலைகளை உருவாக்கும்.

நகர்ப்புறமாதலின் மையப் புள்ளியாக நகர்வு உள்ளது. இயந்திரமயமான தனிநபர் வாகனங்களுக்கு எப்போதும் வளர்ச்சி காணும் சாலைகள், நிறுத்தும் இடங்கள் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் தேவைப்படுகிறது.

எளிதான வாழ்க்கையின் முக்கிய அம்சமாக நகர்வு உள்ளது. ஒவ்வொரு நபரின் சிந்தனையையும் இது ஆக்கிரமித்துள்ளது. பள்ளிக்கும் பணிக்கும் செல்ல செலவிடும் நேரத்தையும் இது ஆக்கிரமிக்கிறது. போக்குவரத்து காரணமாக விரக்தியை ஏற்படுத்துகிறது. குடும்பத்தைக் காணப்போகும் போது அல்லது சரக்குகளை கொண்டு செல்லும்போது செலவை அதிகரிக்கிறது. பொது போக்குவரத்தை அணுகுவதிலும் நமது குழந்தைகள் சுவாசிக்கும் காற்றின் தரத்திலும் பயண பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நமது கோளைப் பாதுகாப்பதிலும் நகர்வு முக்கியமாக திகழ்கிறது. உலக அளவில் கரியமிலவாயு கசிவில் ஐந்தில் ஒரு பகுதியாக சாலை போக்குவரத்து உள்ளது. இது நகரங்களை தொந்தரவு செய்யவும் புவி வெப்பத்தை அதிகரிக்கவும் அச்சுறுத்துகிறது.

இயற்கையுடன் ஒத்திசைந்த நகர்வு சூழலை உருவாக்குவது இந்த தருணத்தின் தேவையாகும்.

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போரில் நகர்வு நமது அடுத்த எல்லையாக உள்ளது. சிறந்த நகர்வு என்பது நல்ல வேலைகளை, நவீன உள்கட்டமைப்புகளை அளிப்பதுடன் வாழ்க்கையில் தரத்தை மேம்படுத்தலாம். அது செலவுகளை குறைப்பதுடன் பொருளாதார செயல்பாடுகளை விரிவுபடுத்தி இந்த கோளை பாதுகாக்கலாம். அந்த வகையில் நகர்வு பெரிய அளவில் பொது வெளிப்பாடுகளில் தாக்கம் ஏற்படுத்துகிறது.

நகர்வு, குறிப்பாக டிஜிட்டல் மயமான நகர்வு சீர்குலைவை ஏற்படுத்தும். அதில் புதுமைக்கான பெரும் வாய்ப்பு இருப்பதுடன் அது சீரான வேகத்தை அமைக்கிறது.

ஏற்கெனவே மக்கள் டாக்சிகளை தங்கள் போனில் அழைக்கின்றனர், நகரங்களில் மிதிவண்டிகளை பகிர்ந்து கொள்கின்றனர், பேருந்துகள் தூய்மையான எரிசக்தியில் ஓடுகின்றன, கார்கள் மின்சாரத்தில் இயங்குகின்றன.

இந்தியாவில் நாங்கள் நகர்வுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். நெடுஞ்சாலைகள் கட்டும் வேகத்தை நாங்கள் இரட்டிப்பாக்கி இருக்கிறோம்.

ஊரக சாலைகள் அமைக்கும் திட்டத்திற்கு நாங்கள் மறு ஊக்கம் அளித்திருக்கிறோம். எரிபொருள் திறன் கொண்ட மற்றும் தூய்மையான எரிபொருள் வாகனங்களை நாங்கள் ஊக்கமளிக்கிறோம். விமான சேவை இல்லாத பகுதிகளில் குறைந்த கட்டண வான் இணைப்பை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். நூறு புதிய வான் வழிகளில் நாங்கள் செயல்பாடுகளை தொடங்கி உள்ளோம்.

சாலை மற்றும் ரயில் போன்ற பாரம்பரியமான முறைகளுடன் நாங்கள் நீர் வழித்தடங்களையும் ஊக்குவித்து வருகிறோம்.

வீடுகள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை சிறந்த முறையில் அடையாளப்படுத்துவதன் மூலம் நாங்கள் பயணத் தொலைவைக் குறைக்கிறோம்.

புத்திகூர்மையான போக்குவரத்து நிர்வாக முறைகள் போன்ற தரவுகளால் இயக்கப்படும் தலையீடுகளையும் நாங்கள் தொடங்கி உள்ளோம்.

எனினும் பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுவோருக்கும் அவர்களது பாதுகாப்பு மற்றும் முன்னுரிமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

நண்பர்களே,

வேகமாக மாறிவரும் நகர்வு முன்னுதாரணத்தில் இந்தியாவில் சில உள்ளார்ந்த பலம் மற்றும் ஒப்பீட்டுப் பயன்களும் உள்ளன. நமது தொடக்கப் புள்ளி புதிதாக உள்ளது. ஆதாரம் இல்லாத நகர்வுக்கான மரபு நம்மிடம் குறைவாக உள்ளது.

இதர பெரும் பொருளாதாரங்களை விட நம்மிடம் குறைவான வாகனங்கள் உள்ளன. இதன் மூலம் தனியார் கார் உரிமை பின்னணியில் உருவாக்கப்பட்ட இதர பொருளாதாரங்களின் சுமையை நாம் சுமந்து செல்வதில்லை. அந்த வகையில் இது முற்றிலும் புதிய தடையற்ற நகர்வுச் சூழலை உருவாக்கும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது.

தொழில்நுட்ப முன்னணியில் நமது பலம் தகவல் தொழில்நுட்பம், பெரிய தரவுகள், டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் இணையதளம் சார்ந்த பகிரப்பட்ட பொருளாதாரம் ஆகியவற்றில் உள்ளது. உலகளாவிய எதிர்கால நகர்வுக்கான ஊக்கியாக இவை அதிகரித்து வருகின்றன.

நமது தனித்தன்மையான அடையாள திட்டமான ஆதார் மற்றும் அதன் இந்திய அடுக்கு சூழல் முறை, முழுமையான பொது டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு வகை செய்துள்ளது. அது நமது 850 மில்லியன் குடிமக்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் அளித்துள்ளது. இத்தகைய டிஜிட்டல் உள்கட்டமைப்பு புதிய நகர்வு வர்த்தக மாதிரிகளுடன் எவ்வாறு இணைக்கப்படலாம் என்பதை இந்தியா விளக்கலாம்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு நமது ஊக்கம் மின்சார நகர்வு முழுமையான நிஜமாவதை உறுதி செய்யும். 2022க்குள் 175 கிகாவாட்களை உருவாக்க நாம் திட்டமிட்டுள்ளோம். நாம் ஏற்கெனவே உலகின் ஐந்தாவது பெரிய சூரிய மின் உற்பத்தி உற்பத்தியாளராக திகழ்கிறோம். புதுப்பிக்கதக்க எரிசக்தி உற்பத்தியில் நாம் ஆறாவது பெரிய நாடாக இருக்கிறோம். சர்வதேச சூரிய மின் கூட்டணி மூலம் உலகளாவிய அளவில் சூரிய மின்சக்தியில் நாம் முன்னணியில் இருக்கிறோம்.

நாம் வேகமாக வளரும் உற்பத்தி அடித்தளத்தை குறிப்பாக வாகனத் துறையில் கொண்டிருக்கிறொம்.

டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற இளம் மக்கள் தொகையை நாம் பெரிய அளவில் கொண்டிருக்கிறோம். இது எதிர்காலத்திற்கு சக்தியளிக்கும் லட்சக்கணக்கான கல்வியறிவு பெற்ற சிந்தனைகளையும், திறன் பெற்ற கரங்களையும் விருப்பம் கொண்ட கனவுகளையும் அளிக்கிறது.

எனவே நகர்வு பொருளாதாரத்தில் விரைவாக முன்னேற உலகளாவிய அளவில் சிறந்த இடமாக இந்தியா திகழும் என்பதில் நான் திருப்தியடைபவனாக இருக்கிறேன்.

ஆங்கில எழுத்தான சி என்பதில் தொடங்கும் பொது, இணைப்பு, வசதி, நெருக்கடியற்ற, சக்தியூட்டப்பட்ட, தூய்மையான மற்றும் நவீன என்ற சொற்களின் ஆங்கில வார்த்தைகளின் 7 சி-க்களின் அடிப்படையில் நகர்வுக்கான எனது எதிர்கால தொலைநோக்கு பார்வை.

1, பொது: நமது நகர்வு முயற்சிகளுக்கான மைல்கல்லாக பொது போக்குவரத்து இருக்க வேண்டும். டிஜிட்டல்மயத்தால் ஊக்குவிக்கப்பட்ட புதிய வர்த்தக மாதிரிகள் தற்போதைய முன்னுதாரணத்தில் மறு முதலீடு செய்கின்றன. பெரும் தரவுகள் நமது வடிவங்கள் மற்றும் தேவைகளை புரிந்துகொண்டு நவீன முடிவுகள் எடுப்பதை சாத்தியமாக்குகின்றன.

நமது கண்ணோட்டம் கார்களுக்கு அப்பாற்பட்ட இதர வாகனங்களான ஸ்கூட்டர்கள் மற்றும் ரிக்‌ஷாக்கள் மீது செல்ல வேண்டும். வளர்ந்து வரும் உலகின் பெரும் பிரிவுகள் நகர்வுக்கு இந்த வாகனங்களை சார்ந்துள்ளன.

2. இணைக்கப்பட்ட நகர்வு என்பது பூகோளங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் போக்குவரத்து முறைகளை குறிக்கிறது. இணையதளம் சார்ந்த இணைந்த பகிரப்பட்ட பொருளாதாரம் நகர்வுக்கான ஆதாரமாக உருவெடுத்து வருகிறது.

தனியார் வாகன பயன்பாட்டை மேம்படுத்த வாகன தொகுப்பு மற்றும் இதர புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும். கிராம மக்கள் தங்கள் தயாரிப்புகளை நகரங்களுக்கு எளிமையாக கொண்டு வர வேண்டும்.

3. வசதியான நகர்வு என்பதற்கு பாதுகாப்பான, கட்டுபடியாகக்கூடிய மற்றும் அனைத்து சமூகத்தினருக்கும் அணுகத்தக்கது என பொருள். முதியவர்கள், மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இதில் அடங்கும். பொதுப் போக்குவரத்து என்பது தனியார் முறை பயணத்தை விரும்புவதாக இருக்க வேண்டும்.

4. நெரிசலற்ற நகர்வு என்பது பொருளாதாரம் மற்றும் நெரிசலைன் சுற்றுச்சூழல் செலவுகளை கட்டுப்படுத்துவதில் முக்கியமாகும். எனவே கட்டமைப்புகளின் தடைகளை எளிதாக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இது போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன் பயணிகளின் அழுத்தத்தைக் குறைக்கும். இது சரக்கு போக்குவரத்திலும் பெரும் திறனை அளிக்கும்.

5. சார்ஜிங் செய்யும் நகர்வு என்பது முன்னோக்கிய பாதை. பேட்டரிகளில் இருந்து நவீன சார்ஜிங் வரை, மின்சார வாகன உற்பத்தி வரை மதிப்பு சங்கிலியில் நாம் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவின் வர்த்தக தலைவர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஊருடுவிச் செல்லும் பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்கி பயன்படுத்த ஆர்வம் கொண்டுள்ளனர்.

செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு சிறந்த பேட்டரி முறைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பயன்படுத்துகிறது. மின்சார கார்களுக்கான செலவு குறைவான மற்றும் சிறந்த செயல்திறன் கொண்ட பேட்டரி முறைகளை உருவாக்க இதர அமைப்புகள் இஸ்ரோவுடன் கூட்டு சேரலாம். மின்சார வாகனங்களுக்கான ஊக்கியாக இந்தியாவை உருவாக்க நாம் விரும்புகிறோம்.

மின்சார மற்றும் இதர மாற்று எரிபொருள் வாகனங்களுக்கான கொள்கைகளை நாம் விரைவில் உருவாக்க உள்ளோம். அனைவருக்கும் வெற்றி தரக்கூடியதாகவும் வாகனத் துறையில் பெரும் வாய்ப்புகளை சாத்தியமாக்கவும் கொள்கைகள் உருவாக்கப்படும்.

6. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான மிஅக்வும் சக்திவாய்ந்த ஆயுதமாக தூய்மையான எரிசக்தியின் ஆதரவு பெற்ற தூய்மையான நகர்வு உள்ளது. மாசு அற்ற தூய்மையான இயக்கம் என்பது இதன் பொருள். இது நமது மக்களின் சிறந்த் வாழ்க்கை தரத்தையும் தூயமையாக காற்றையும் அளிக்கும்.

தூய்மையான கிலோமீட்டர்கள் என்ற யோசனையின் சாம்பியன்களாக நாம் இருக்க வேண்டும். உயிரி எரிபொருள், மின்சாரம் அல்லது சூரிய மின் சார்ஜிங் மூலம் இதனை எட்ட முடியும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் நமது முதலீடுகளை மின்சார வாகனங்கள் உதவும்.

இது நமது பாரம்பரியத்தின் மீதான் உறுதி மற்றும் நமது எதிர்கால தலைமுறைக்கான வாக்குறுதி என்பதால் இதற்காக நாம் எதுவேண்டுமானாலும் செய்வோம்.

7. நவீனம்: நகர்வு என்பது இணையதளத்தின் தொடக்க நாட்கள் போன்றது. இது நவீனமானது. இதுதான் அடுத்த புதுமைக்கான பெரிய துறை. கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்ட மூவ் ஹாக் மற்றும் பிட்ச் டு மூவ் நிகழ்ச்சிகள் புதுமையான தீர்வுகளுடன் இளம் சிந்தனைகள் எவ்வாறு வருகின்றன என்பதை நமது காட்டியுள்ளன.

புதுமைக்கும் வளர்ச்சிக்கும் அதிக வாய்ப்புகள் கொண்ட துறையாக நகர்வை தொழில் முனைவோர் பார்க்க வேண்டும். பொது மக்களின் நன்மைக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் புதுமைகள் உதவும் துறையாக இது உள்ளது.

நண்பர்களே,

நகர்வு புரட்சி நமது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை சாத்தியமாக்கும் என்பதில் நான் திருப்தியடைகிறேன். நகர்வில் முன்னேற்றத்தை இந்தியா ஏற்படுத்தும்போது, அது மனிதகுலத்தில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கு பயன் அளிக்கும். மற்றவர்களும் பின்பற்றுவதற்கு உயர்வான வெற்றியாகவும் இது ஆகும்.

உலகம் ஏற்பதற்கான மாதிரியை நாம் உருவாக்குவோம்.

நிறைவாக, இந்திய இளைஞர்களுக்காக நான் ஒரு வேண்டுகோளை குறிப்பாக வைக்கிறேன்.

எனது அருமை இளம், மாற்றத்தை ஏற்படுத்தும் நண்பர்களே, புதுமைக்கான ஒரு புதிய சகாப்தத்தை முன்னெடுத்துச் செல்ல உங்களூக்கான வாய்ப்பாகும். இதுதான் எதிர்காலம், இந்த துறை மருத்துவர்கள், பொறியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் மெக்கானிக்குகள் என அனைவரிடம் இருந்து அனைத்தையும் ஈர்க்கும் துறையாகும். இந்த புரட்சியை முன்னதாகவே நாம் ஏற்றுக் கொண்டு நமது வலிமைகளைப் பயன்படுத்திக் கொண்டு நக்ர்வு புதுமை சூழலை நமக்காவும் மற்றவர்களுக்காகவும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இன்று இங்கு கூடியிருக்கும் திறன் மற்றும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கும் உலகுக்கும் முன்னேற்றத்திற்கான நகர்வை அளிக்கும் திறன் கொண்டதாகும்.

மற்றவர்களுக்காக கவனம் அளிப்பது மற்றும் மற்றவர்களுடன் இணைந்து ஒளிர்வது என்பதை அடிப்படையாக கொண்டுஇந்த மாற்றம் இருக்கும்.

நமது பண்டைய நூல்களில் கூறப்பட்டுள்ளபடி

நாம் அனைவரும் பாதுகாக்கப்படுவோம்,

நாம் அனைவரும் ஊட்டம் பெறுவோம்,

பெரும் சக்தியுடன் நாம் இணைந்து செயல்படுவோம்,

நமது அறிவாற்றல் கூர்மையாகட்டும்

நண்பர்களே,

நாம் இணைந்து என்ன செய்ய முடியும் என பார்க்க விரும்புகிறேன்.

இந்த உச்சி மாநாடு தொடக்கமாகும். நாம் முன்னேறுவோம்.

நன்றி,

மிக்க நன்றி!

நன்கொடைகள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
I-T dept issues tax refunds of Rs 1.57 trillion, up by 27.2% in 2019

Media Coverage

I-T dept issues tax refunds of Rs 1.57 trillion, up by 27.2% in 2019
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 14, 2019
December 14, 2019
பகிர்ந்து
 
Comments

#NamamiGange: PM Modi visits Kanpur to embark the first National Ganga Council meeting with CMs of Uttar Pradesh, Bihar and Uttarakhand

PM Modi meets the President and Foreign Minister of Maldives to discuss various aspects of the strong friendship between the two nations

India’s foreign reserves exchange touches a new life-time high of $453.422 billion

Modi Govt’s efforts to transform lives across the country has instilled confidence in citizens