பிரதமர் நரேந்திர மோடி தனது அரசு ஜன் தன், வன் தன் மற்றும் கோபர் தன் போன்ற திட்டங்களில் கவனம் செலுத்துகிறது என்றார்
சர்தார் பட்டேலின் முதல் பாதையை வழிநடத்தி, அகமதாபாத்தில் கூட்டுறவு அமைப்புகளில் மிகுந்த சிறந்த இடங்களில் பணிபுரிந்தார். இந்த முயற்சிகள் பல மக்களின் எதிர்பார்ப்புகளை வழங்கின: பிரதமர்
அமுல் என்ற நிறுவனம் பால் உற்பத்திக்கு மட்டுமல்ல, அதிகாரமயமாக்கலுக்கும் அமுல் ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது என்று பிரதமர் மோடி கூறுகிறார்
சர்தார் படேல் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றினார்: பிரதமர் மோடி
புதிய கருத்துக்கள் மற்றும் மதிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நிலைமை: பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்திற்குச் சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, அமுல் நிறுவனத்தின் அதிநவீன சாக்லேட் உற்பத்தி ஆலை உள்ளிட்ட உணவுப் பதப்படுத்தும் தொழிற்கூடங்களை இன்று (30.09.18) திறந்து வைத்தார். சாக்லேட் ஆலையைப் பார்வையிட்ட அவருக்கு, அதில் பயன்படுத்தப்படும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

 

விழாவில் பேசிய பிரதமர், அங்கு திரளாக கூடியிருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்கள், கூட்டுறவுத் துறைக்கு மேலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று திரு. நரேந்திர மோடி கூறினார். அமுல் என்ற விளம்பர அடையாளம் உலக அளவில் பிரபலமானது என்றும், உலகெங்கும் அதற்கான உத்வேகம் அதிகமாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  பால் உற்பத்திக்கு மட்டுமல்ல, அதிகாரமயமாக்கலுக்கும் அமுல் ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்வதாகவும் திரு. மோடி சுட்டிக்காட்டினார். அரசோ அல்லது தொழிலதிபர்களோ சாதிக்கமுடியாதவற்றை, கூட்டுறவுகள் மூலம் சாதிக்கலாம் என்பதற்கு சர்தார் வல்லபாய் பட்டேல் வழிவகுத்திருப்பதாகவும் அவர் கூறினார். மக்கள் விருப்பத்திற்கேற்ப  இதுவொரு முன்மாதிரி திட்டம் என்று குறிப்பிட்ட பிரதமர், குஜராத்தில் கூட்டுறவுத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், மக்களுக்கு – குறிப்பாக விவசாயிகளுக்கு பெரிதும் உதவியிருப்பதாக கூறினார். சர்தார் பட்டேலின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தையும் அப்போது பிரதமர்  நினைவுகூர்ந்தார்.

2022-ஆம் ஆண்டில் கொண்டாடப்படும் இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டுவிழாவை குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, பால் பதப்படுத்தும் தொழிலில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், மேலும் அதில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புதிய கண்டுபிடிப்புகளுக்கும், மதிப்புக் கூட்டுதலுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நேரம் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச்  சூழலில் தேன் உற்பத்தி பற்றியும் பிரதமர் திரு. நரேந்திர மோடி விளக்கமாக எடுத்துரைத்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Political stability helped India seal major trade deals: PM Narendra Modi

Media Coverage

Political stability helped India seal major trade deals: PM Narendra Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister meets the former President of India
February 16, 2026

Prime Minister Shri Narendra Modi met the former President Shri Ram Nath Kovind Ji today.

In a post on X, Shri Modi wrote:

“Wonderful meeting former President Shri Ram Nath Kovind Ji. His insights on various subjects are always thoughtful and enriching.”