Time has come for the whole world to take concrete steps and stand united against all forms of terrorism and its perpetrators: PM
India and Argentina have decided to elevate our ties to a strategic partnership and to promote peace, stability, economic progress and prosperity: PM
India and Argentina are complementary to each other in many ways and both the countries must take advantage of the shared ties: PM

அர்ஜென்டினாவிலிருந்து வந்துள்ள எனது நண்பர் அதிபர் மெக்ரி அவர்களுக்கும், மதிப்புமிகுந்த விருந்தினர்கள் அனைவருக்கும்

வணக்கம்,

அதிபர், அவரது குடும்பத்தினர் மற்றும் பிரதிநிதிகள் குழுவை அன்புடன் நான் வரவேற்கிறேன். பியூனோஸ் அயர்ஸ் நகரில் நாம் சந்தித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவில் உங்களை இன்று வரவேற்பதற்கு வாய்ப்பு கிடைத்ததை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். இந்தச் சூழலில், 2018-ம் ஆண்டில் ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாகவும், திறமையாகவும் நடத்தி முடித்ததற்காக அதிபர் மெக்ரி மற்றும் அவரது குழுவினருக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் அதிபர் மெக்ரியின் தலைமை, முக்கியப் பங்கு வகித்தது. பியூனோஸ் அயர்ஸில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது, அதிபர் மெக்ரி மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, இந்தியா சுதந்திரமடைந்ததன் 75-வது ஆண்டை கொண்டாடும் 2022-ம் ஆண்டில், ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தும் என்று அறிவித்தார். இதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

அதிபர் மெக்ரியுடன் இன்று நான் நடத்திய ஐந்தாவது சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு வேகமாக வளர்ந்துவருவதை வெளிப்படுத்துகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான 15,000 கிலோமீட்டர் தொலைவு என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே என்பதை நாம் நிருபித்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே தூதரக நல்லுறவு ஏற்பட்டு 70-ம் ஆண்டை கொண்டாடிவரும் இந்த சிறப்பான ஆண்டில் அதிபர் மெக்ரியின் பயணம் அமைந்துள்ளது. எனினும், நமது மக்களுக்கு இடையேயான பரஸ்பர நல்லுறவு, அதைவிட மிகவும் பழமையானது. அர்ஜென்டினாவுக்கு குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், 1924-ம் ஆண்டிலேயே பயணம் மேற்கொண்டார். அவரது படைப்புகளால், அந்தப் பயணத்தின் வலிமை அழியாத ஒன்றாக திகழ்கிறது. நமது இரு நாடுகளிலும் ஒரே மாதிரியான தன்மை இருப்பது மற்றும் அமைதி, நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி, வளம் ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும் என்ற விருப்பம் ஆகியவற்றின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை பாதுகாப்பு ஒத்துழைப்பு அளவுக்கு உயர்த்தியுள்ளோம். உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக தீவிரவாதம் இருப்பதை நானும், அதிபர் மெக்ரியும் ஒப்புக் கொண்டோம். புல்வாமாவில் நடத்தப்பட்ட கொடுமையான தீவிரவாதத் தாக்குதல், பேச்சுவார்த்தைக்கான நேரம் தற்போது முடிந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. தீவிரவாதம் மற்றும் அதனை ஆதரிப்பவர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் ஒருங்கிணைந்து வலுவான நடவடிக்கையை தற்போது எடுக்கத் வேண்டியது அவசியம். தீவிரவாதிகளுக்கும், மனிதநேயமற்ற முறையில் அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க தயங்குவதும் கூட, தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்கு சமமாகும். ஜி20 நாடுகள் என்ற முறையில், தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்காக ஹாம்பர்க் தலைவர்கள் அறிக்கையில் குறிப்பிட்ட 11 அம்சத் திட்டத்தை நாம் செயல்படுத்த வேண்டியதும் அவசியமாகும். இந்தச் சூழலில், இன்று நமது பேச்சுவார்த்தை முடிந்தபிறகு, தீவிரவாதத்துக்கு எதிராக சிறப்புப் பிரகடனத்தை வெளியிடுகிறோம். விண்வெளித் துறை மற்றும் அணுசக்தியை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது ஆகியவற்றுக்கான நமது ஒத்துழைப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இன்று கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், பாதுகாப்புத் துறைக்கான நமது ஒத்துழைப்பில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும்.

 

நண்பர்களே,

 

இந்தியாவும், அர்ஜென்டினாவும் பல்வேறு வழிகளிலும் பரஸ்பரம் உதவி வருகிறோம். இதன் முழுப்பயனையும் நமது பரஸ்பர நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதே நமது விருப்பம். வேளாண்மையில் சக்திவாய்ந்த தளமாக அர்ஜென்டினா திகழ்கிறது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை நிறைவேற்றுவதில் முக்கிய கூட்டாளியாக அர்ஜென்டினாவை இந்தியா கருதுகிறது. இந்த விவகாரத்தில், வேளாண்-தொழில் ஒத்துழைப்புக்காக நாம் இன்று மேற்கொண்ட செயல் திட்டம், ஒரு முக்கிய நடவடிக்கையாக திகழ்கிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் வெற்றியை, குறிப்பாக மக்கள் நிதி – ஆதார் – மொபைல் இணைப்பு மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான கட்டமைப்பை, அர்ஜென்டினாவுடன் பகிர்ந்துகொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். இந்தியாவில் 2030-ம் ஆண்டில் பயன்பாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த வாகனங்களில் 30 சதவீதமாவது மின்சார பேட்டரியில் இயங்கும் வகையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். லித்தியத்தை அதிகம் உற்பத்தி செய்யும் முக்கோண நாடுகளில் ஒன்றாக அர்ஜென்டினா உள்ளது. உலகின் ஒட்டுமொத்த லித்தியம் இருப்பில், இந்த மூன்று நாடுகளும் சேர்ந்து 54 சதவீதத்தைக் கொண்டுள்ளன. சுரங்கத் துறையில் ஒத்துழைப்பை மேற்கொள்வதற்காக அர்ஜென்டினாவுடனான பேச்சுவார்த்தையை நமது கூட்டு நிறுவனமான “KABIL” தொடங்கியுள்ளது.

நண்பர்களே,

கடந்த 10 ஆண்டுகளில், நமது இருதரப்பு வர்த்தகம், இரண்டு மடங்கு அதிகமாகியுள்ளது. அதன் மதிப்பு 300 கோடி அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. வேளாண்மை, உலோகங்கள் மற்றும் தாதுக்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, மருந்துப் பொருட்கள், ரசாயனங்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வர்த்தகம்  அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. நமது வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு குறிப்பிட்ட வழிமுறைகளை நாம் இன்று அடையாளம் கண்டுள்ளோம். அதிபர் மெக்ரியுடன் அர்ஜென்டினாவில் உள்ள பல்வேறு முக்கிய நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. டெல்லி மற்றும் மும்பையில் தொழிலதிபர்களுடன் அவர் நடத்தும் பேச்சுவார்த்தை பயனுள்ள வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 2004-ம் ஆண்டில் மெர்கோசா MERCOSUR வர்த்தக அமைப்புடன் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு இந்தியா. அந்த அமைப்பின் தற்போதைய தலைவராக அர்ஜென்டினா அதிபர் உள்ள நிலையில், இந்தியா-மெர்கோசா இடையேயான வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நாங்கள் இன்று விவாதித்தோம்.

நண்பர்களே,

அர்ஜென்டினாவில் உள்ள மக்களில் கோடிக்கணக்கானோர் இந்திய கலை, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை விரும்புகின்றனர். அர்ஜென்டினாவின் டாங்கோ நடனம் மற்றும் கால்பந்து ஆகியவை இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளன. மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தவும், ஒத்துழைப்புக்காகவும், கலாச்சார திட்டங்கள் பரிமாற்றத்துக்காகவும் சுற்றுலா மற்றும் பொது ஒலிபரப்பு அமைப்புகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நண்பர்களே,

சர்வதேச அமைப்புகளில் இந்தியாவும், அர்ஜென்டினாவும் சிறந்த ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. உலக அமைதி, பாதுகாப்பு, அனைத்து மக்களுக்குமான பொருளாதார, சமூக முன்னேற்றம் ஆகியவற்றுக்காக பன்முக அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பு, வசேனார் ஏற்பாடு (Wassenaar Arrangement), ஆஸ்திரேலியா குழு மற்றும் அணு எரிபொருள் விநியோக நாடுகள் குழு ஆகிய அமைப்புகளில் இந்தியாவை உறுப்பினராக சேர்க்க அர்ஜென்டினா வலுவான ஆதரவைத் தெரிவிக்கிறது. தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. 2019-ம் ஆண்டில் பியூனோஸ் அயர்ஸில் நடைபெற உள்ள தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான ஐநா அமைப்பு நாடுகளின் இரண்டாவது உயர்மட்ட கருத்தரங்கில் இந்தியா ஆர்வத்துடன் பங்கேற்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வானிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் நமது கருத்துக்கள் ஒரே மாதிரியானவை. சர்வதேச சூரிய கூட்டமைப்பில் புதிய உறுப்பினராகச் சேர்ந்துள்ள அர்ஜென்டினாவை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மேதகு அதிபரே,

இந்தியாவுக்கு வருமாறு நான் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டதற்காக மீண்டும் ஒரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பயணம், உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமையும் என்று நான் நம்புகிறேன்.

நன்றி.

 

 

 

 

 

 

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s PC exports double in a year, US among top buyers

Media Coverage

India’s PC exports double in a year, US among top buyers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister speaks with President of USA
December 11, 2025

The Prime Minister, Shri Narendra Modi, spoke with President of the United States of America, H.E. Mr. Donald Trump today.

Both leaders reviewed the steady progress in India–U.S. bilateral relations and exchanged views on key regional and global developments.

Prime Minister Modi and President Trump reiterated that India and the United States will continue to work closely together to advance global peace, stability, and prosperity.

In a post on X, Shri Modi stated:

“Had a very warm and engaging conversation with President Trump. We reviewed the progress in our bilateral relations and discussed regional and international developments. India and the U.S. will continue to work together for global peace, stability and prosperity.

@realDonaldTrump

@POTUS”