பகிர்ந்து
 
Comments

பிரதமர் திரு. நரேந்திர மோடி வாரணாசியிலுள்ள மடுவாடி ரயில் நிலையத்திற்கும் பாட்னாவிற்கும் இடையே புதிய ரயில் போக்குவரத்தை இன்று துவக்கி வைத்தார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்த அவர், வாரணாசியில் உள்ள டிஎல்டபிள்யூ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலும் உரை நிகழ்த்தினார்.

ஃப்ரெஞ்ச் நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு அன்பான வரவேற்பை அளித்தமைக்காக அவர் காசி நகர மக்களுக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டார். வாரணாசி நகரின் தொழில் வளர்ச்சியின் அறிகுறியாக விளங்கும் டிஎல்டபிள்யூவின் தொடர்ந்த வளர்ச்சி மற்றும் மேம்படுத்தல் குறித்து இந்திய அரசு உறுதிப்பாட்டுடன் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அதிகமான மக்கள் வீட்டு வசதியை பெறுவதை உறுதிப்படுத்த மாநில அரசு வீட்டுவசதித் துறையில் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

கூட்டம் நடைபெற்ற மைதானத்தில் நிறுவப்பட்டிருந்த ‘கழிவை செல்வமாக’ மாற்றுவதற்கான பல்வேறு முன்முயற்சிகள் குறித்த கண்காட்சியையும் அவர் பாராட்டினார்.

வாரணாசியில் சுற்றுலாவிற்கான வாய்ப்பு ஏராளமாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நீண்ட ஆயுள் மிக்க இந்தியா திட்டம் (ஆயுஷ்மான் பாரத் திட்டம்) சுகாதாரத் துறையை முற்றிலுமாக மாற்றவிருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அது ஏழைகளுக்கு தரம் வாய்ந்த சுகாதார வசதிகளை வழங்கவிருக்கிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இத்திட்டங்களை மிகச் சிறப்பாக அமலாக்கி வரும் உத்தரப்பிரதேச மாநில அரசையும் பிரதமர் பாராட்டினார்.

Click here to read full text speech

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
Kamala Harris thanks PM Modi for resuming Covid-19 vaccine exports

Media Coverage

Kamala Harris thanks PM Modi for resuming Covid-19 vaccine exports
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi holds fruitful talks with PM Yoshihide Suga of Japan
September 24, 2021
பகிர்ந்து
 
Comments

Prime Minister Narendra Modi and PM Yoshihide Suga of Japan had a fruitful meeting in Washington DC. Both leaders held discussions on several issues including ways to give further impetus to trade and cultural ties.