பிரதமர் திரு நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு பிப்ரவரி 17 அன்று பயணம் மேற்கொண்டார். அங்கு அவர், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் திருமிகு திரவுபதி மர்மு, முதல்வர் திரு ரகுவர்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபக்கில் உரையாற்றிய பிரதமர், ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தில்தான் துவக்கப்பட்டதாகவும், தற்போது இத்திட்டத்தால் நாடெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கான ஜார்க்கண்ட் மக்கள் உட்பட, பயனடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டமான ஆயுஷ்மான் பாரத்தை ராஞ்சியில் துவக்கி வைத்து, ஏழை மக்களுக்கு பெரிதும் பலனளிக்கும் முக்கியமான திட்டம் என்று குறிப்பிட்டார்.

ஏழை மக்களுக்கு, பெரும் மருத்துவமனை சிகிச்சை செலவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களது நிதிச் சுமையை பெருமளவு குறைப்பதும், தரமான மருத்துவ வசதியை அவர்களுக்கு கிடைக்கச் செய்வதும்தான் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின்கீழ், ஓராண்டுக்கு குடும்பம் ஒன்றுக்கு ஐந்துலட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது. இதனால், சுமார் ஐந்து கோடி மக்கள் பயனடைவார்கள். இது உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்ட பயனாளிகளின் எண்ணிக்கையானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகைக்கோ, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகியவை சேர்ந்த மக்கள் தொகைக்கோ சமமானது ஆகும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s healthcare sector seeing a fundamental digital transformation: Report

Media Coverage

India’s healthcare sector seeing a fundamental digital transformation: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 11 பிப்ரவரி 2026
February 11, 2026

Empowering India: PM Modi's Policies Fueling Innovation, Jobs, and Sustainability