பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் பருவநிலை நீதி அவசியம் என பிரதமர் வலியுறுத்தல்
உமிழ்வு அடர்த்தியை 2005 அளவிலிருந்து 33 ஜிடிபியிலிருந்து 35 சதவீதமாக்க உறுதி பூண்டுள்ளோம்- பிரதமர்

உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாடு 2021-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலி மூலம் தொடங்கி வைத்தார். ‘ நமது பொது எதிர்காலத்தை மறுவரையறை செய்தல்: அனைவருக்கும் பாதுகாப்பான சுற்றுச்சூழல்’ என்பது உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும்.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த தருணத்தையேற்படுத்தி கொடுத்த ‘தெரி’ எரிசக்தி வளங்கள் நிறுவனத்தைப் பாராட்டினார். நமது தற்காலத்துக்கும், எதிர் காலத்துக்கும் இது போன்ற உலக தளங்கள் மிகவும் முக்கியமானவை என்று அவர் கூறினார். வருங்காலத்துக்கு முக்கியமான, மனித குலத்தின் பயண முன்னேற்றத்தை வரையறுப்பதில் இரண்டு அம்சங்கள் உள்ளதாக அவர் கூறினார். முதல் அம்சம் நமது மக்களின் சுகாதாரம், இரண்டாவது நமது கோளத்தின் சுகாதாரம் என்று கூறிய அவர், இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றார்.

நமது கோளத்தின் ஆரோக்கியம் குறித்து பேசுவதற்காக நாம் இங்கே கூடியிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார். நாம் சந்திக்கும் சவாலின் அளவு என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த சவாலை மரபு அடிப்படையிலான அணுகுமுறையால் சமாளிக்க முடியாது. நீடித்த வளர்ச்சிக்கு உழைப்பதும், இளைஞர்கள் குறித்து சிந்திப்பதும் தான் இப்போதைய அவசியத் தேவையாகும்.

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் பருவநிலை நீதி அவசியம் என பிரதமர் வலியுறுத்தினார். இதற்கு நம்பிக்கையான தொலைநோக்கும், ஏழைகள் மீதான பெரும் கருணையும் தேவை. வளரும் நாடுகள் முன்னேறுவதற்கு அதிக கவனம் செலுத்துவதும் பருவநிலை நீதியில் அடங்கும். நாம் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, கடமைகளை கூட்டாக செய்தால், பருவநிலை நீதியை அடைய முடியும்.

உறுதியான நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்க இந்தியா தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார். பாரிசில் தெரிவித்த இலக்குகள், உறுதிப்பாட்டை விட மிஞ்சி நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உமிழ்வு அடர்த்தியை 2005 அளவிலிருந்து 33 ஜிடிபியிலிருந்து 35 சதவீதமாக்க உறுதி பூண்டுள்ளோம். நில தரம் குறித்த விஷயத்தில் இந்தியா உறுதியான முன்னேற்றம் அடைந்து வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். 2030-ல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஐம்பது ஜிகாவாட் திறனை உருவாக்கும் பாதையில் நாங்கள் பயணித்து வருகிறோம்.

சமமான அணுகுமுறை இல்லாவிட்டால், நீடித்த வளர்ச்சி முழுமையடையாது என்று பிரதமர் தெரிவித்தார். இந்த விஷயத்திலும் இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. 2019 மார்ச்சில், இந்தியா அநேகமாக 100 சதவீத மின்மயமாக்கலை எட்டியது. நீடித்த தொழில்நுட்பம், புதுமையான மாதிரிகளால், இந்த இலக்கை இந்தியா அடைந்தது. உஜாலா திட்டத்தின் மூலம், 367 மில்லியன் எல்இடி பல்புகள் மக்களின் வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது ஆண்டுக்கு 38 மில்லியன் டன் கரியமில வாயுவைக் குறைத்துள்ளது. ஜல் ஜீவன் இயக்கம் மூலம் 34 மில்லியன் வீடுகளுக்கு 18 மாதத்தில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் மூலம், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 80 மில்லியன் வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எரிசக்தி தொகுப்பில் இயற்கை வாயுவின் பங்கை 6 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக்க நாங்கள் உழைத்து வருகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

பேரிடர் மேலாண்மை திறன்கள் குறித்து பிரதமர் சிறப்பு முக்கியத்துவம் அளித்து குறிப்பிட்டார். மனிதவள மேம்பாடு மற்றும் தொழில்நுட்பம் குறித்த கவனம் இதற்கு அவசியமாகும் என அவர் கூறினார். குறிப்பாக, இளைஞர்களின் ஆற்றல் இதற்கு பெரும் பலனை அளிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். பேரிடர் விரிதிறன் உள்கட்டமைப்புக்கான கூட்டுறவின் ஒரு பகுதியாக, நாம் இந்தத் திசையில் பாடுபட்டு வருகிறோம். மேலும் நீடித்த வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்ய இந்தியா தயாராக உள்ளது என அவர் உறுதியளித்தார். எங்களது மனித நலன் சார்ந்த அணுகுமுறை, உலக நலனுக்கு பல மடங்கு ஆற்றலை வழங்கக்கூடும் என பிரதமர் கூறினார்.

கயானா குடியரசின் அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி, பப்புவா நியு கினியா பிரதமர் திரு ஜேம்ஸ் மராப்பே, மாலத்தீவுகள் நாடாளுமன்ற சபாநாயகர் திரு. முகமது நஷீத், ஐ.நா தலைமை துணை செயலர் திருமிகு அமினா ஜே முகமது, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian coffee exports reach 140 countries in FY2025–26

Media Coverage

Indian coffee exports reach 140 countries in FY2025–26
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சுயநலமற்ற சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 07, 2026

எந்தவொரு பலனையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களின் நலனுக்காகப் பணியாற்றும் உன்னத லட்சியத்தையும், சுயநலமற்ற சேவையின் நற்பண்பையும் வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்த சமஸ்கிருத நீதிமொழியை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்