QuoteOur government’s mantra is ‘Sabka Saath, Sabka Vikas’: Prime Minister Modi
QuoteCentral Government is committed to connecting every citizen of the country with the mainstream of development: PM Modi
QuoteNo stone will be left unturned for development of Leh, Ladakh and Kargil: PM Modi

பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமது ஒருநாள் லே, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பயணத்தின் முதற்கட்டமாக இன்று (03.02.2019) லடாக் பிராந்தியத்தில் உள்ள லே வந்தடைந்தார். அங்கு அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து / புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

|

கடுங்குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் பெருமளவில் திரண்டிருந்ததை பாராட்டிய பிரதமர், “கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருபவர்கள், அனைத்து விதமான சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் காட்டும் அன்பு, நான் கடினமாக உழைப்பதற்கு பெரும் ஊக்கமளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

|

லடாக் பல்கலைக்கழகத்தை தொடங்கிவைத்துப் பேசிய அவர், “லடாக் பிராந்தியத்தின் மொத்த மக்கள் தொகையில் 40% அளவிற்கு இளம் மாணவர்கள் தான் உள்ளனர். இப்பகுதிக்கென ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாளாக இருந்து வந்தது. லடாக் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார். இந்தப் பல்கலைக்கழகம் லே, கார்கில், நுப்ரா, ஸன்ஸ்கர், திராஸ் மற்றும் கால்ட்சி ஆகிய பகுதிகளில் அமையும் பட்டப்படிப்பு கல்லூரிகளை ஒருங்கிணைப்பதாக அமைவதுடன், மாணவர்களின் வசதி கருதி, இதன் நிர்வாக அலுவலகங்கள் லே மற்றும் கார்கிலில் செயல்படும்.

|

ததாங் கிராமத்தின் அருகே உள்ள தா பகுதியில் 9 மெகாவாட் நீர்மின் திட்டம் மற்றும் ஸ்ரீநகர் – அலூஸ்டெங் – டிராஸ் – கார்கில் – லே இடையிலான 220 கிலோவோல்ட் மின் பகிர்மானத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய பிரதமர், ”தாமதப்படுத்தும் கலாச்சாரத்தை நாம் பின்தள்ளி இருக்கிறோம் என்றார்”. தம்மால் அடிக்கல் நாட்டப்படும் அனைத்து திட்டங்களையும் தாமே தொடங்கிவைப்பதை தமது அரசு உறுதி செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

|

லடாக்கில் ஐந்து புதிய சுற்றுலா மற்றும் மலையேற்றப்பாதைகளும் இன்று திறக்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒரு நகரம் அனைத்து வகைகளிலும் இணைக்கப்படும்போது, அங்குள்ள மக்களின் வாழ்க்கை எளிதாவதுடன், பொருளாதாரமும் மேம்படும் என்றார். பிலாஸ்பூர் – மணாலி – லே இடையிலான ரயில் பாதை பணிகள் நிறைவடையும் போது, தில்லி-லே இடையிலான பயண தூரமும் குறையும் என்று அவர் குறிப்பிட்டார்,,

|

லே-வில் உள்ள குஷோக் பாகுலா ரிம்போச்சி (கே.பி.ஆர்) விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கான பெயர்ப்பலகைகையையும் பிரதமர் திறந்துவைத்தார். இந்தப் புதிய முனையம், அனைத்து நவீன வசதிகளுடன், பயணிகள் எளிதாக வந்து செல்லக் கூடியதாக அமையும்.

|

இந்தப் புதிய திட்டங்கள் மூலம், மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் மேம்படுவதுடன், இந்தப் பிராந்தியத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஏராளமான கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அதிக வாய்ப்புகள் உருவாகும்.

இதுதவிர, பாதுகாக்கப்பட்ட பகுதிக்கான அனுமதி காலமும் 15 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுற்றுலாப் பயணிகள் லே பகுதியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து தங்களது பயணத்தை அனுபவிக்கலாம்.

லடாக் பிராந்திய மலைப்பகுதி மேம்பாட்டு கவுன்சில் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறிய பிரதமர், இந்த கவுன்சிலின் செலவுகளை எதிர்கொள்ள கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது இந்த சுயாட்சி கவுன்சில், இப்பகுதியின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட தொகையை விடுவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பழங்குடி வகுப்பினரின் நலனுக்கான நிதி 30%-ம், ஷெட்யூல்டு வகுப்பினரின் மேம்பாட்டுக்கான நிதி ஏறக்குறைய 35% அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Inflation Lowest In Over 6 Years, Jobs & Trade Steady As India Starts FY26 Strong, FinMin Data Shows

Media Coverage

Inflation Lowest In Over 6 Years, Jobs & Trade Steady As India Starts FY26 Strong, FinMin Data Shows
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles the the loss of lives in the road accident in Deoghar, Jharkhand
July 29, 2025

Prime Minister Shri Narendra Modi today condoled the loss of lives the road accident in Deoghar, Jharkhand.

The PMO India handle in post on X said:

“झारखंड के देवघर में हुई सड़क दुर्घटना अत्यंत दुखद है। इसमें जिन श्रद्धालुओं को अपनी जान गंवानी पड़ी है, उनके परिजनों के प्रति मेरी गहरी शोक-संवेदनाएं। ईश्वर उन्हें इस पीड़ा को सहने की शक्ति दे। इसके साथ ही मैं सभी घायलों के जल्द से जल्द स्वस्थ होने की कामना करता हूं: PM @narendramodi”