பகிர்ந்து
 
Comments
It is our Constitution that binds us all together: PM Modi
What is special about Indian Constitution is that it highlights both rights and duties of citizens: PM Modi
As proud citizens of India, let us think how our actions can make our nation even stronger: PM Modi

இந்திய அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள உள்ளடக்கிய தன்மையின் வலிமையை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதில், நாம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள இதுவே நம்மை முன்னிலைப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

அரசியல் சாசன 70 ஆவது ஆண்டு தினக் கொண்டாட்டத்தையொட்டி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (26.11.2019) நடைபெற்ற இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

அரசியல் சாசன தினம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், “குறிப்பிட்ட சில நிகழ்வுகளும், சில தினங்களும், கடந்த காலத்துடனான நமது உறவுகளை வலுப்படுத்துகின்றன. சிறப்பான எதிர்காலத்திற்காக பணியாற்றுவதற்கு நம்மை அவை ஊக்கப்படுத்துகின்றன. நவம்பர் 26 ஆம் தேதியான இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். 70 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான் நாம் நமது மதிப்புமிக்க அரசியல் சாசனத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டோம்” என்று தெரிவித்தார்.

அரசியல் சாசன நிர்ணய சபையில் நடைபெற்ற பலகட்ட விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளின் விளைவாக கிடைத்ததுதான், நமது அரசியல் சாசனம் என பிரதமர் விவரித்தார். நாட்டிற்கு ஒரு அரசியல் சாசனத்தை வகுப்பதற்காக, தங்களது அரிய முயற்சிகளை வழங்கிய அனைவருக்கும் அவர் தமது பாராட்டுகளை உரித்தாக்கினார்.

“70 ஆண்டுகளுக்கு முன்பு, இதே மைய மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு பிரிவும் விரிவாக விவாதிக்கப்பட்டு, நமது எதிர்பார்ப்புகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல், பண்டித நேரு, ஆச்சாரியா கிருபளானி, மவுலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் பல்வேறு மூத்த தலைவர்கள் விவாதித்து, நமக்கு இந்த பாரம்பரியத்தை அளித்துள்ளனர். இந்த அரசியல் சாசனத்தை வகுப்பதற்கு காரணமான அனைவருக்கும் எனது பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்”.

“அரசியல் சாசன நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்தவர்களின் கனவுகள், எழுத்து வடிவமாகி, நமது அரசியல் சாசனத்தில் நன்மதிப்பை பெற்றுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

1949 நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற்ற இறுதிக்கட்ட விவாதத்தில் பேசிய பாபா சாஹேப் பீம் ராவ் அம்பேத்கர், கடந்த காலத்தில், “நாம் செய்த தவறுகளால், நமது சுதந்திரம் மற்றும் நாட்டின் குடியாட்சித் தன்மையை இழந்தோம்” என்பதை மக்களுக்கு நினைவூட்டியதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

“இப்போதாவது இந்த நாடு சுதந்திரத்தையும் அதன் ஜனநாயகத் தன்மையையும் நிலைநிறுத்த வேண்டும் என்று நாட்டு மக்களை அம்பேத்கர் எச்சரித்தார்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

“பாபா சாஹேப் அம்பேத்கர் தற்போது உயிரோடு இருந்திருந்தால், அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கக்கூடும். இந்தியா தனது நற்பண்புகளை நிலைநிறுத்தியிருப்பதோடு மட்டுமின்றி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தையும் வலிமைப்படுத்தியிருக்கிறது” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

“எனவேதான், அரசியல் சாசனத்தின் சிறகுகளாக கருதப்படும் சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறைக்கு நான் தலைவணங்குகிறேன், இந்த அமைப்புகள்தான் அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நற்பண்புகள் மற்றும் கருத்துக்களை பேணிக்காக்க உதவுகின்றன”.

அரசியல் சாசனத்தை நிலைநிறுத்த பாடுபடும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் தாம் தலைவணங்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

“இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பதோடு, அரசியல் சாசனத்தை ஒரு புதிய நூலாகவும், கலங்கரை விளக்கமாகவும் கருதும் 130 கோடி இந்தியர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.

கடந்த 70 ஆண்டுகளில் மகிழ்ச்சி, உயர்வான எண்ணம் மற்றும் மனநிறைவை அரசியல் சாசனம் ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் சாசனத்தின் சாராம்சம் மற்றும் நற்பண்புகள் மீதான தீர்க்கமான எண்ணம் காரணமாக இந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிரான எந்தவொரு முயற்சியையும் இந்த நாட்டு மக்கள் நிராகரித்துள்ளனர்”.

“ஒரே பாரதம் – உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கி நாம் செல்வதற்கு அரசியல் சாசனத்தில் உள்ள நற்பண்புகள் மீதான உயர்வான எண்ணமே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மிகப்பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்த நாடு, தனது விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னேற்றத்திற்கு அரசியல் சாசனமே காரணம் என்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம்”.

அரசியல் சாசனம் ஒரு புனித நூல் என்றும், பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

“நமது வாழ்க்கை, நமது சமுதாயம், நமது பாரம்பரியம், நமது பண்புகள் மற்றும் நாம் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களுக்கும் தீர்வு காணும் திரட்டாக கருதப்படும் அரசியல் சாசனம் நமக்கு மிகவும் புனிதமான நூல்”.

கண்ணியம் மற்றும் ஒற்றுமை என்ற இரட்டை தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் சட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “அரசியல் சாசனத்தின் இரண்டு தாரக மந்திரங்கள் ‘இந்தியர்களுக்கு கண்ணியம்’ மற்றும் ‘இந்தியாவின் ஒற்றுமை’ என்பதே என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்கும் அதேவேளையில் நமது குடிமக்களின் கண்ணியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது” என்று அவர் கூறினார்.

உலக ஜனநாயகத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு நமது அரசியல் சாசனம் என்று குறிப்பிட்ட பிரதமர், நமது உரிமைகள் மட்டுமின்றி, நமது கடமைகளையும் அறிந்து கொள்ள இது உதவுகிறது என்றும் தெரிவித்தார்.

“குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை இந்திய அரசியல் சாசனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுவே நமது அரசியல் சாசனத்தின் சிறப்பு அம்சம். உரிமைகளுக்கும், கடமைகளுக்கும் உள்ள உறவு மற்றும் நடுநிலைமையை தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் மிக நன்றாகவே அறிந்திருந்தார்”.

இந்த உணர்வை வளர்த்து, அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கடமைகளை பின்பற்றுமாறு நாட்டுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

“நமது அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கடமைகளை நாம் எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சேவைக்கும், கடமைக்கும் இடையேயான வித்தியாசத்தை நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். சேவை என்பது நாமாக முன்வந்து பணியாற்றுவது, அதாவது தெருவில் செல்வோருக்கு உதவுவதாகும். ஆனால், வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது உங்களது கடமைகளை நிறைவேற்றுவதாகும்.

மக்களுடனான கலந்துரையாடல்களின்போது, கடமையை வலியுறுத்த நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் கவுரவமான குடிமக்கள் என்ற முறையில், நமது செயல்பாடுகள் நாட்டை எந்த அளவுக்கு மேலும் வலுப்படுத்த உதவுகிறது என்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்”.

“ “இந்திய மக்களாகிய நாம்” என்ற வார்த்தையுடன் நமது அரசியல் சாசனம் தொடங்குகிறது” என்று அவர் தெரிவித்தார். மக்களாகிய நாம்தான் அரசியல் சாசனத்தின் வலிமை, உத்வேகம் மற்றும் நோக்கம் என்பதை நாம் உணர வேண்டும்”.

2008 ஆம் ஆண்டு இதேநாளில்தான் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர் என்பதை நினைவுகூர்ந்த பிரதமர், அந்த கொடிய நாளில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியையும் செலுத்தினார்.

“உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்படும் உயரிய தத்துவத்தை அழிக்க, மும்பையில் தீவிரவாதிகள் முயற்சித்த நவம்பர் 26 ஆம் தேதி மிகுந்த மனவேதனையை ஏற்படுத்திய தினமும் இன்று தான். உயிரிழந்த ஆன்மாக்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்”.

 

Click here to read full text speech

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
Rs 1,780 Cr & Counting: How PM Modi’s Constituency Varanasi is Scaling New Heights of Development

Media Coverage

Rs 1,780 Cr & Counting: How PM Modi’s Constituency Varanasi is Scaling New Heights of Development
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM congratulates boxer, Lovlina Borgohain for winning gold medal at Boxing World Championships
March 26, 2023
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has congratulated boxer, Lovlina Borgohain for winning gold medal at Boxing World Championships.

In a tweet Prime Minister said;

“Congratulations @LovlinaBorgohai for her stupendous feat at the Boxing World Championships. She showed great skill. India is delighted by her winning the Gold medal.”