பகிர்ந்து
 
Comments
“மனஅழுத்தம் இல்லாமல் கொண்டாட்ட மனநிலையில் தேர்வுகளை எழுதுங்கள்”
“தொழில்நுட்பத்தை ஒரு சவாலாக இல்லாமல், ஒரு வாய்ப்பாகக் கருதுங்கள்”
“தேசிய கல்விக் கொள்கைக்கான கலந்தாலோசனை நிறைவடைந்தது. இந்தியா முழுவதும் உள்ள மக்களிடம் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது”
“20-ம் நூற்றாண்டின் கல்விமுறையில் சிந்தனைகளும், 21-ம் நூற்றாண்டின் வளர்ச்சிப்பாதையைத் தீர்மானிக்க முடியாது. காலத்திற்கேற்ப நாம் மாற வேண்டியுள்ளது”
“ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நிறைவேறாத கனவுகளை மாணவர்கள் மீது திணிக்கக்கூடாது. மாணவர்கள் தங்களின் சொந்தக் கனவுகளைப் பின்பற்றுவது முக்கியமானது”
“ஊக்குவித்தலுக்கு ஊசியோ, வாய்ப்பாடோ இல்லை. மாறாக நீங்களாகவே சிறந்ததைக் கண்டறியுங்கள், உங்களை எது மகிழ்ச்சிப்படுத்தும் என்பதை அறிந்து அதற்காக பாடுபடுங்கள்”
“நீங்கள் விரும்புகின்ற பணியை செய்யுங்கள், இதன் மூலம் அதிகபட்ச பயனை நீங்கள் பெற முடியும்”
“நீங்கள் தனித்துவமான தலைமுறையை சேர்ந்தவர்கள். ஆம், நிறைய போட்டிகள் இருக்கின்றன என்பதோடு நிறைய வாய்ப்புகளும் இருக்கின்றன”
குடும்பத்தின் பலம் புதல்வி. வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் நமது ம
இந்தக் கலந்துரையாடல் முழுவதும் நேர்முகமான பேச்சு, நகைச்சுவை, உரையாடல் ஆகிய நடைமுறையைப் பிரதமர் பின்பற்றினார்.
பரிட்சை குறித்த விவாதத்தின் ஐந்தாவது நிகழ்வில் புதிய நடைமுறையை பிரதமர் அறிமுகம் செய்தார். தம்மால் பதில் சொல்ல நேரம் இல்லாத கேள்விகளுக்கு நமோ செயலி மூலம் வீடியோ, ஆடியோ அல்லது செய்திகளாக பதிலளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

புதுதில்லியில் உள்ள தல்கத்தோரா விளையாட்டரங்கில் தேர்வு குறித்த விவாதத்தின் ஐந்தாவது நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலுக்கு முன் அந்த அரங்கில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் பொருட்காட்சியை அவர் பார்வையிட்டார். மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான், திருமதி அன்னப்பூர்ணா தேவி, டாக்டர் சுபாஷ் சர்க்கார், டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், திரு ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருடன் இணையம் வழியாக பங்கேற்ற ஆளுநர்கள், முதலமைச்சர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்தக் கலந்துரையாடல் முழுவதும் நேர்முகமான பேச்சு, நகைச்சுவை, உரையாடல் ஆகிய நடைமுறையைப் பிரதமர் பின்பற்றினார்.

இங்குக் கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், கடந்த ஆண்டு இணையவழி கலந்துரையாடிய நிலையில், தற்போது இளம் நண்பர்களுடன் உரையாற்றுவதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பரிட்சை குறித்த விவாதம் தமக்கு பிடித்தமான நிகழ்ச்சி என்று அவர் கூறினார். விக்ரம் சம்வாத் புத்தாண்டு நாளை தொடங்கவிருப்பதைக் குறிப்பிட்ட அவர், வரவிருக்கும் விழாக்களுக்காக மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பரிட்சை குறித்த விவாதத்தின் ஐந்தாவது நிகழ்வில் புதிய நடைமுறையை பிரதமர் அறிமுகம் செய்தார். தம்மால் பதில் சொல்ல நேரம் இல்லாத கேள்விகளுக்கு நமோ செயலி மூலம் வீடியோ, ஆடியோ  அல்லது  செய்திகளாக  பதிலளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

 முதலாவது கேள்வி தில்லியின் கவுஷி ஜெயினிடமிருந்து வந்தது. வதோதராவின் கினி பட்டேலிடமிருந்தும், பிலாஸ்பூர், சத்தீஸ்கரில் இருந்தும் தேர்வுகளின் போது ஏற்படும் பதற்றங்கள் மற்றும் மனஅழுத்தம் குறித்த கேள்விகள் வந்தன. இது அவர்களால் எழுதப்படும் முதல் தேர்வு என்பது போல் மன அழுத்தம் கொள்ளாமல் இருங்கள் என்று பிரதமர் அவர்களை கேட்டுக்கொண்டார். “ஒருவகையில் நீங்கள் தேர்வை அறியாதவர்கள் அல்ல” என்று அவர் கூறினார். முந்தைய தேர்வுகளில் இருந்து பெற்ற அனுபவம் வரவிருக்கும் தேர்வுகளை வெல்வதற்கு உதவும். படித்ததில் சில பகுதிகள் தவறவிடப்பட்டிருக்கும், அதற்காக மனஅழுத்தம் கொள்ள வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். தேர்வுக்கான தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அன்றாட பணிகளில் நிதானமாகவும், இயல்பாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மற்றவர்களைப் போல் தாமும் இருக்க முயற்சிப்பதில் அர்த்தமில்லை. தங்களின் வழக்கமான பணிகளை விழா மனநிலையில் செயல்படுத்த வேண்டும்.

அடுத்த கேள்வி கர்நாடகாவின் மைசூருவைச் சேர்ந்த தருணிடமிருந்து வந்தது. இணையத்தில் யூடியூப் போன்ற கவனச்சிதறல்கள் இருக்கும் போதும் படிப்பில் எவ்வாறு கவனம் செலுத்துவது என்று அவர் கேட்டார். தில்லியைச் சேர்ந்த ஷாஹித் அலி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கீர்த்தனா, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்திரசூடேஸ்வரன் ஆகியோருக்கும் இதேபோன்ற கேள்வி எழுந்தது. பிரச்சனை என்பது இணையவழியா அல்லது நேரடியான கல்வியா என்பதல்ல என்று பிரதமர் கூறினார். நேரடியாக சென்று படிக்கும் போதும், அதிக மனச்சிதறல்கள் இருக்கக்கூடும். “கற்றல்முறை என்பதை விட, மனம் தான் பிரச்சனையாக இருக்கிறது” என்று அவர் கூறினார். நேரடியாக அல்ல இணையம் வழியாக என எதுவாக இருந்தாலும் மனம் கற்றலில் இருக்கும் போது மாணவர்களை மனச்சிதறல்கள் பாதிப்பதில்லை. தொழில்நுட்பங்கள் வளரும் போது அவற்றை கல்வியில் மாணவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். புதிய முறையிலான கற்றலை சவாலாகக் கொள்ளாமல் வாய்ப்பாக கொள்ள வேண்டும். உங்களின் நேரடியான கல்விமுறையை இணையவழி கற்றல் ஆக்கிரமிக்கலாம். இணையவழி கற்றல் என்பது சேகரிப்புக்கானது, நேரடியான கற்றல் என்பது  வளர்ச்சிக்கும், பணிக்குமானது என்று அவர் கூறினார்.  தோசை சுடுவதை அவர் உதாரணமாக எடுத்துரைத்தார். தோசை சுடுவதை ஒருவர் இணையவழியில் கற்றுக்கொள்ளலாம். ஆனால் சுடுவதும், சாப்பிடுவதும் வீட்டில்தான் நடைபெறும்.

 புதிய கல்விக்கொள்கை குறிப்பாக  மாணவர்களின் வாழ்க்கையில் பொதுவாக சமூகத்திற்கு எவ்வாறு அதிகாரம் அளிக்கும் அம்சங்களை கொண்டுள்ளது என்றும், புதிய இந்தியாவுக்கு அது எவ்வாறு வழிகாட்டும் என்றும் அரியானாவின் பானிபட்டைச் சேர்ந்த ஆசிரியர் சுமன்ராணி கேள்வி எழுப்பினார். மேகாலயாவின் கிழக்கு காசி குன்றுகளைச் சேர்ந்த ஷீலாவும் இதே போன்ற கேள்வியை கேட்டார். இது  ‘தேசிய’ கல்விக் கொள்கையே தவிர, ‘புதிய’ கல்விக் கொள்கை அல்ல என்று பிரதமர் கூறினார். பல்வேறு தரப்பினருடன் ஏராளமான ஆலோசனைக்கு பின் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதுவே ஒரு சாதனை ஆகும். “தேசிய கல்விக் கொள்கைக்கான கலந்தாலோசனை நிறைவடைந்தது. இந்தியா முழுவதும் உள்ள மக்களிடம் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது” என்று அவர் கூறினார். உரையைத் தொடர்ந்த அவர், இந்தக் கொள்கை அரசால் உருவாக்கப்பட்டதல்ல, ஆனால் குடிமக்களால், மாணவர்களால், ஆசிரியர்களால் நாட்டின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. உடற்பயிற்சி கல்வியும், பயிற்சியும் ஏற்கனவே கூடுதல் செயல்பாடாக இருந்தது. ஆனால் இப்போது இது கல்வியின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. புதிய கௌரவம் கிடைக்கிறது. 20-ம் நூற்றாண்டின் கல்வி முறையில் சிந்தனைகளும், 21-ம் நூற்றாண்டின் வளர்ச்சிப்பாதையைத் தீர்மானிக்க முடியாது என்று அவர் கூறினார். மாறியுள்ள நடைமுறைகளோடு நாம் ஈடுபடுத்திக்கொள்ளாவிட்டால் நாம் அவற்றியிலிருந்து விடுபட்டு பின்னுக்கு செல்லவேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.   தேசிய கல்விக்கொள்கை ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. அறிவுடன் திறனின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இதனால் தான் தேசிய கல்விக் கொள்கையின் பகுதியாக திறன்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.  பாடங்களைத் தேர்வு செய்வதில் தேசிய கல்விக் கொள்கை நெகிழ்ச்சித்தன்மையோடு இருப்பதையும்  அவர் சுட்டிக்காட்டினார். மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்களை அமலாக்க புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள  அனைத்துப்பள்ளிகளையும்  அவர் வலியுறுத்தினார். தேர்வு முடிவுகள் பற்றி குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை கையாளும் போது பெற்றோர்கள் நினைப்பது போல் கல்வியை காத்திரமானதாக எடுத்துக்கொள்வதா அல்லது அதனை விழாமனநிலையில் கொண்டாடுவதா என்று உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தைச் சேர்ந்த ரோஷினி கேள்வி எழுப்பினார். இதே முறையில் பஞ்சாப் மாநிலம் பட்டிண்டாவைச் சேர்ந்த கிரண்ப்ரித் கௌரும் கேள்வி எழுப்பினார். “ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நிறைவேறாத கனவுகளை மாணவர்கள் மீது திணிக்கக்கூடாது. மாணவர்கள் தங்களின் சொந்தக் கனவுகளைப் பின்பற்றுவது முக்கியமானது” என்று பிரதமர் கூறி்னார். ஒவ்வொரு மாணவரும் சிறப்புத் திறனை கொண்டிருப்பார்கள் என்பதையும், அதனைக் கண்டறிய வேண்டும் என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் தங்களின் பலத்தை அங்கீகரித்து அதன் வழியில் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார்.

நான் மிகவும் பின்தங்கியிருக்கும் போது, எவ்வாறு ஊக்கம் அடைவது, எவ்வாறு வெற்றி பெறலாம் என்று தில்லியைச் சேர்ந்த வைபவ் கன்னோஜியா, கேள்வி எழுப்பினார். ஒடிசாவைச் சேர்ந்த பெற்றோரான சுஜித் குமார் பிரதான்,  ஜெய்ப்பூரைச் சேர்ந்த கோமல் சர்மா மற்றும் தோஹாவைச் சேர்ந்த ஆரோன் எபன், ஆகியோரும் அதே நேரத்தில் கேள்வி எழுப்பினர்.  இவர்களுக்கு பதில் அளித்த பிரதமர், “ஊக்கம் பெறுவதற்கு ஊசியோ அல்லது சூத்திரமோ கிடையாது. மாறாக, உங்களுக்கு நீங்களே மேம்பட்ட முறையைக் கண்டுபிடிப்பதோடு, எதை செய்தால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப உழைக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மாணவர்கள் இயற்கையாகவே தங்களை ஊக்கப்படுத்தக் கூடிய அம்சங்களை தாங்களாகவே கண்டறியுமாறு கேட்டுக் கொண்ட அவர், இந்த நடைமுறையில் சுதந்திரமான செயல்பாடு அவசியம் என்பதால் தங்களது பிரச்சினைகளைக் கூறி, அனுதாபம் தேட முயற்சிக்க வேண்டாம் எனவும் மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார். மேலும், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயற்கை எவ்வாறு தமது இலக்கை அடைய முயற்சிக்கின்றனர் என்பது குறித்து சுற்றுப்புறத்தைக் கூர்ந்து கவனிக்குமாறும் மாணவர்களுக்கு அவர் ஆலோசனைக் கூறினார். “நமது சுற்றுப்புறத்தின் முயற்சிகள் மற்றும் வலிமைகளை கவனித்து அவற்றிலிருந்து நாம் ஊக்கம் பெறவேண்டும்“ என்றும் அவர் கூறினார். ‘தேர்வுக்கு’ கடிதம் எழுதுவதன் மூலம் ஒருவர் எவ்வாறு ஊக்கம் பெறலாம் என்பது குறித்தும், ஒருவரின் வலிமை மூலம் எவ்வாறு தேர்வை எதிர்கொள்ளலாம் என்பது பற்றியும்  தமது தேர்வு வீரர்கள் புத்தகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

தெலங்கானாவின் கம்மம் பகுதியைச் சேர்ந்த அனுஷா பேசுகையில், ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, அந்தத் தலைப்பு தமக்கு புரிந்தாலும் சற்று நேரத்திலேயே அது மறந்து போவதைத் தடுக்க என்ன செய்யலாம். நமோ செயலி வாயிலாக பேசிய காயத்ரி சக்சேனா, ஞாபகசக்தி மற்றும் புரிந்துகொள்ளும் திறன் குறித்து  வினா எழுப்பினார். இவர்களுக்கு பதில் அளித்த பிரதமர், பாடங்களை முழு கவனத்துடன் கற்றுக் கொண்டால் எதுவும் மறந்து போகாது என்றார். மாணவர்கள் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் எனவும், அவர் கேட்டுக் கொண்டார். படிப்பில் முழு கவனத்தையும் செலுத்துவது, சிறப்பாக கற்றுக் கொள்ளவும், ஞாபகத்தில் வைத்துக் கொள்ள உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  தேர்வு நெருங்கும் நேரமான தற்போது, வகுப்புகளில் தவறாமல் பங்கேற்பதே சிறந்தது என்று குறிப்பிட்ட அவர், தற்காலத்தில் வாழ்பவர்கள், அதனை முழுமையாக புரிந்து கொண்டு வாழ்க்கையில் அதிக அளவு பயனடையலாம் என்றும் கூறினார். ஞாபகசக்தியை பொக்கிஷமாக பாதுகாப்பதோடு அதனை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மனது நிலையாக இருப்பதே, ஏற்கனவே கற்றதை நினைவு கூர்வதற்கு உகந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜார்க்கண்டைச் சேர்ந்த ஸ்வேதா குமாரி பேசுகையில், இரவு நேரத்தில் படிக்க தாம் விரும்புவதாகவும், ஆனால் பகல் நேரத்தில் படிப்பது நல்லது என்று தம்மை வற்புறுத்துவதாகவும் குறிப்பிட்டார். நமோ செயலி மூலம் பேசிய ராகவ் ஜோஷியும், படிப்பதற்கான முறையான அட்டவணை குறித்து கேள்வி எழுப்பினார். இவர்களுக்கு பதில் அளித்த பிரதமர், ஒருவரது முயற்சியின் முடிவையும் நேரம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதையும்  மதிப்பிடுவது சிறந்தது என்றும் தெரிவித்தார். ஆக்கப்பூர்வ விளைவுகள் மற்றும் முடிவுகளை மதிப்பிடும் பழக்கம் கல்வியின் ஒரு முக்கியப் பகுதி என்றும் அவர் தெரிவித்தார். எளிமையான மற்றும் நமக்கு அதிகம் பிடித்தமான பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு, ‘மனது, உள்ளம் மற்றும் உடலை ஏமாற்றுவதில்’ இருந்து வெளிவர தீர்க்கமான முயற்சிகள் தேவை என்றும் அவர் கூறினார். “நீங்கள் மகிழ்ச்சியடையக் கூடிய செயல்களை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் அதிக பலனை பெறமுடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு, காஷ்மீரின் உதம்பூரைச் சேர்ந்த எரிகா ஜார்ஜ் பேசுகையில், சிறந்த அறிவாற்றல் உடையவர்களாக இருந்தும் குறிப்பிட்ட காரணங்களால் உரிய தேர்வுக்கு வரமுடியாதவர்களுக்கு என்ன செய்யலாம் என வினவினார்.  கவுதம் புத்தா நகரைச் சேர்ந்த ஹேர் ஓம் மிஸ்ரா பேசுகையில், போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் வாரியத் தேர்வுகளுக்கு எவ்வாறு படிப்பது என்று கேள்வி எழுப்பினார். இவர்ளுக்கு பதில்அளித்த பிரதமர், தேர்வுகளுக்காக படிப்பது தவறானது என்றார். ஒருவர் பாடத்திட்டத்தை முழு மனதையும் செலுத்தி படித்தால், எத்தனை தேர்வுகளை எழுதுவது என்பது ஒரு பிரச்சினையே அல்ல என்று குறிப்பிட்டார். ஒரு பாடத்தை படித்து ஒருவர் தேர்வுகளில்  தேர்ச்சி பெறுவதற்கு பதிலாக அந்தப் பாடத்தை முழுமையாக கற்றறிய முயற்சிக்க வேண்டும் என்றார். விளையாட்டு வீரர்கள், பயிற்சி பெறவேண்டுமே தவிர போட்டிக்காக தயாராகக் கூடாது என்றார். “நீங்கள் சிறப்புமிகு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஆமாம், அதிக போட்டிகள் உள்ள அதே வேளையில், அதிக வாய்ப்புகளும் உள்ளன” என்றும் அவர் கூறினார்.  போட்டிகளை தங்களது காலத்தில் கிடைத்த மிகப் பெரிய பரிசாக கருதுமாறு மாணவர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

குஜராத்தின் நவ்சாரியைச் சேர்ந்த ஒரு மாணவரின் பெற்றோரான சீமா சேத்தன் தேசாய், கிராமப்புற பெண்களின் மேம்பாட்டிற்கு சமுதாயம் எவ்வாறு பங்களிப்பை வழங்க முடியும் என பிரதமரிடம் கேள்வி எழுப்பினார். அவருக்கு பதில் அளித்த திரு மோடி, பெண் கல்வி புறக்கணிக்கப்பட்ட காலக்கட்டத்தில் இருந்ததைவிட தற்போது நிலைமை பெருமளவு மாறிவிட்டது என்றார். பெண்களுக்கு முறையான கல்வி அளிப்பதை உறுதி செய்யாமல் எந்த சமுதாயமும் முன்னேற முடியாது என்பதை அவர் உறுதிபட தெரிவித்தார். பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகள் மற்றும் அதிகாரமளித்தலை நி்றுவனமயமாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். பெண்கள் மிகவும் மதிக்கத்தக்க சொத்துக்களாக மாறியிருப்பதாகவும், இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார். சுதந்திரப் பெருவிழா கொண்டாடப்படும் ஆண்டில், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் அதிக அளவிலான பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இடம் பெற்றிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். “புதல்விகள் குடும்பத்தின் வலிமை. வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் நமது பெண்களின் வலிமையை பார்ப்பதைவிட சிறந்தது வேறு எதுவாக இருக்கமுடியும்” என்று பிரதமர் வினவினார்.

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க புதிய தலைமுறையினர் எத்தகைய பங்களிப்பை வழங்க வேண்டும் என தில்லியைச் சேர்ந்த பவித்ரா ராவ் கேள்வி எழுப்பினார். தமது வகுப்பறையையும், சுற்றுச்சூழலையும், தூய்மையானதாகவும் பசுமையானதாகவும் மாற்றுவது எப்படி என சைதன்யா வினவினார். இந்த நாட்டை தூய்மையானதாகவும், பசுமையானதாகவும் மாற்றியதற்காக மாணவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டார். எதிர்கருத்து தெரிவிப்போரையும் மீறி குழந்தைகள் தூய்மைப்பணி குறித்த பிரதமரின் உறுதிப்பாடு  உண்மையானது என்பதை உணர்ந்துள்ளனர். நமது முன்னோர்களின் பங்களிப்புதான் நாம் தற்போது அனுபவிக்கும் சுற்றுச்சூழலுக்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதே போன்று, வருங்கால தலைமுறையினருக்காக நாமும், சிறந்த சுற்றுச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார். நாட்டு மக்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று அவர் கூறினார். “P-3 இயக்கம்” - Pro Plannet People (பூமிக்கு உகந்த மக்கள்) மற்றும் சுற்றுச்சூழல் – வாழ்க்கைக்கான  வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். ‘பயன்படுத்திவிட்டு வீசி எறியும்’ கலாச்சாரத்திலிருந்து நாம் விடுபட்டு சுற்றுப் பொருளாதாரத்தி்ற்கான வாழ்க்கை முறையை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்களுக்கான சிறந்த ஆண்டும், அமிர்த காலமும், ஒன்றாக வருவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒருவரின் கடமையை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் மூலம் தங்களது கடமையை நிறைவேற்றியதற்காக மாணவர்களை அவர் பாராட்டினார்.

வாழ்க்கைக்கான  வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். ‘பயன்படுத்திவிட்டு வீசி எறியும்’ கலாச்சாரத்திலிருந்து நாம் விடுபட்டு சுற்றுப் பொருளாதாரத்தி்ற்கான வாழ்க்கை முறையை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்களுக்கான சிறந்த ஆண்டும், அமிர்த காலமும், ஒன்றாக வருவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒருவரின் கடமையை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் மூலம் தங்களது கடமையை நிறைவேற்றியதற்காக மாணவர்களை அவர் பாராட்டினார்.

நிறைவாக, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மாணவர்களை அழைத்த பிரதமர், அவர்களது திறன் மற்றும் நம்பிக்கையை வெகுவாக பாராட்டினார். மற்றவர்களின் நற்பண்புகளை பாராட்டும் திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று  உறுதிபட தெரிவித்த அவர், அத்தகைய நபர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.  மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுவதற்கு பதிலாக கற்றுக் கொள்ளும் போக்கை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற இந்தத் திறமை மிகவும் முக்கியம்.

தம்மைப் பொறுத்தவரை தேர்வு பற்றிய விவாதத்தின் முக்கியத்துவத்தை ஆமோதிப்பதாக கூறி தமது உரையை பிரதமர் நிறைவு செய்தார். இளம் மாணவர்களுடன் கலந்துரையாடும் போது ஐம்பது வயது குறைந்தது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் அவர் கூறினார். “உங்களது தலைமுறையினருடன் இணைந்து உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள நான் முயற்சிக்கிறேன்.  நான் உங்களுடன் தொடர்பில் இருந்தால், உங்களது எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகளை நொடிப் பொழுதில் அறிந்து கொள்வதோடு அதற்கேற்ப எனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சிப்பேன். எனவே இந்த நிகழ்ச்சி எனது வளர்ச்சிக்கு உதவும். எனக்கு நானே உதவிக் கொள்வதற்கும், வளர்ச்சி அடைவதற்கும் வாய்ப்பு அளித்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் மகிழ்ச்சிப்பெருக்குடன் கூறி தமது உரையை நிறைவு செய்தார்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
PM Modi shares 'breathtaking' images of Gujarat taken by EOS-06 satellite

Media Coverage

PM Modi shares 'breathtaking' images of Gujarat taken by EOS-06 satellite
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 3, 2022
December 03, 2022
பகிர்ந்து
 
Comments

India’s G20 Presidency: A Moment of Pride For All Indians

India Witnessing Transformative Change With The Modi Govt’s Thrust Towards Good Governance