ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும் பிரபல தடகள வீராங்கனையுமான கர்ணம் மல்லேஸ்வரி யமுனா நகரில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார். இளம் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டும் அவரது முயற்சியை பிரதமர் பாராட்டினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
"ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும் பிரபல தடகள வீராங்கனையுமான கர்ணம் மல்லேஸ்வரியை நேற்று யமுனா நகரில் சந்தித்தேன். விளையாட்டு வீராங்கனையாக அவரது வெற்றியால் இந்தியா பெருமை கொள்கிறது. இளம் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டும் அவரது முயற்சி பாராட்டுக்குரியது" என்றார்.
Met Olympic medalist and noted athlete, Karnam Malleswari in Yamunanagar yesterday. India is proud of her success as a sportswoman. Equally commendable is her effort to mentor young athletes. pic.twitter.com/9BcM8iKENr
— Narendra Modi (@narendramodi) April 15, 2025


