இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள திரு செர்ஜியோ கோர், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்தார்.
திரு கோரின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், அவரது பதவிக்காலம் இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள திரு செர்ஜியோ கோரை வரவேற்பதில் மகிழ்ச்சி. அவரது பதவிக்காலம் இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். @SergioGor”
Glad to receive Mr. Sergio Gor, Ambassador-designate of the US to India. I’m confident that his tenure will further strengthen the India–US Comprehensive Global Strategic Partnership.@SergioGor pic.twitter.com/WSzsPxrJXv
— Narendra Modi (@narendramodi) October 11, 2025


