பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் திரு. நிகோலஸ் சர்கோசி, புது தில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் வெற்றிக்காகவும், பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அவர் கட்சி அடைந்த வெற்றிக்கும் பிரதமர் மோடியை திரு. சர்கோசி பாராட்டினார்.
பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசியின் சமீபத்திய புத்தகமான “டோட் பவுர் ல பிரான்ஸ்“ வெற்றிகரமாக பதிப்பிக்கப்பட்டதற்கு அவருக்கு பிரதமர் திரு. மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நலன் பயக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் இரு நாடுகளின் தலைவர்களும் விவாதித்தனர்.
Former President of France, Mr. @NicolasSarkozy met PM @narendramodi in New Delhi. pic.twitter.com/oADA6oPWC3
— PMO India (@PMOIndia) March 18, 2017


