பகிர்ந்து
 
Comments

 

வரிசை எண்

ஆவணங்கள்

இந்தியாவின் சார்பில்

வியட்நாம் சார்பில்

1.

அமைதிவளம் மற்றும் மக்களுக்கான இந்தியவியட்நாம் கூட்டு லட்சியம்.

 

ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள், பகிர்ந்து கொள்ளும் மதிப்புகள் மற்றும் ஆர்வங்கள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதல் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு வருங்கால இந்திய–வியட்நாம் விரிவான மூலோபாயக் கூட்டுக்கு வழிகாட்டுதல்

இரு நாடுகளின் பிரதமர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

 

2.

விரிவான மூலோபாயக் கூட்டை மேலும் செயல்படுத்துவதற்காக 2021-2023 வரையிலான காலத்துக்கான செயல் திட்டம்.

 

”அமைதி, வளம் மற்றும் மக்களுக்கான கூட்டு லட்சியத்தை’ செயல்படுத்துவதற்காக 2021-2023 காலகட்டத்தில் உறுதியான நடவடிக்கைகளை செயல்படுத்துதல்

டாக்டர் எஸ் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சர்

திரு பம் பின் மின், துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்

3.

இந்திய ராணுவ தளவாடங்கள் உற்பத்தி துறைவியட்நாம் ராணுவ தொழில் துறைக்கிடையேயான ராணுவ தொழில் கூட்டை செயல்படுத்துவதற்கான ஏற்பாடு.

 

இரு நாடுகளின் ராணுவ தொழில்களுக்கிடையேயான ஒத்துழைப்பை ஊக்கப்படுத்துவதற்கான கட்டமைப்பை வழங்குதல்

 

திரு சுரேந்திர பிரசாத் யாதவ், இணை செயலாளர் (கடற்படை அமைப்புகள்)

மேஜர் ஜெனெரல் லுவோங் தன்ஹ் சுவோங்க், துணை தலைவர்

4.

வியட்நாமில் உள்ள நா திரங்கில் ராணுவ மென்பொருள் பூங்காவுக்கு இந்திய நிதியுதவியான 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்காக இந்திய தூதரகம் மற்றும் ஹனோய் மற்றும் தொலைதொடர்பு பல்கலைக்கழகம்வியட்நாம் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கிடையே

  ஒப்பந்தம்.

 

மென்பொருள் பயன்பாடுகள் துறையில் பயிற்சி மற்றும் சேவைகளை வழங்கும் விதமாக ஹனோய் மற்றும் தொலைதொடர்பு பல்கலைக்கழகத்தில் உள்ள ராணுவ மென்பொருள் பூங்காவில் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வழங்குதல்

திரு பிரணய் வெர்மா, வியட்நாமுக்கான இந்திய தூதர்

கர்னல். லே சுவான் ஹுங், கல்லூரி தலைவர்

5.

ஐக்கிய நாடுகள் அமைதிகாத்தலுக்காக  நா அமைதிகாத்தல் நடவடிக்கைகள்இந்தியா மற்றும் வியட்நாமின் அமைதிகாத்தல் செயல்பாடுகள் துறைக்கிடையே ஏற்பாட்டை செயல்படுத்துதல்,

 

ஐ நா அமைதிகாத்தலில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகளை கண்டறிதல்.

 

மேஜர் ஜெனரல் அனில் கே ஆர் காஷித், கூடுதல் தலைமை இயக்குநர்

மேஜர் ஜெனரல் ஹொஆங்க் கிம் புங்க், இயக்குநர்

6.

இந்திய அணுமின் ஒழுங்குமுறை வாரியம் மற்றும் கதிரியக்கம் மற்றும் அணு பாதுகாப்புக்கான வியட்நாம் முகமைக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

கதிரியக்கம் மற்றும் அணு பாதுகாப்பில் இரு நாடுகளின் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பை ஊக்குவித்தல்.

திரு ஜி நாகேஸ்வர ராவ், தலைவர்

பேராசிரியர் நுயென் டுவன் கய், தலைமை இயக்குநர்

7.

சி எஸ்  ஆர் இந்திய பெட்ரோலிய நிறுவனம் மற்றும் வியட்நாம் பெட்ரோலிய நிறுவனத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

பெட்ரோலிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல்

 

டாக்டர் அஞ்சன் ராய், இயக்குநர்

திரு நுயென் அன்ஹ் டுவோ, இயக்குநர்

8.

இந்தியாவின் டாட்டா நினைவு மையம் மற்றும் வியட்நாம் புற்று நோய் மருத்துவமனைகிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

பயிற்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி, சுகாதார சேவைகள், புற்று நோய் நோயாளிகளின் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை உள்ளிட்டவற்றில் பரிமாற்றங்களை ஊக்குவித்தல்

 

 

டாக்டர் ராஜேந்திர ஏ பாட்வே, இயக்குநர்

திரு. லே வான் குவாங்க், இயக்குநர்

9.

இந்தியாவின் தேசிய சூரிய சக்தி கூட்டமைப்பு மற்றும் வியட்நாம் தூய்மையான எரிசக்தி சங்கத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

இந்திய மற்றும் வியட்நாம் சூரிய சக்தி தொழில்களுக்கிடையே அறிவுசார் தகவல்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் தகவல்களை பறிமாறிக் கொள்ளுதலை ஊக்குவித்தல், இந்தியா மற்றும் வியட்நாமில் சூரிய சக்தியை ஊக்குவிப்பதற்காக புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிதல்

திரு பிரணவ் ஆர் மேத்தா, தலைவர்

திரு டாவோ டு டுவோங்க், தலைவர்

 

செய்யப்பட்ட அறிவிப்புகள்:

  1. வியட்நாமுக்கு இந்திய அரசு வழங்கிய 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ராணுவ கடனுதவியின் கீழ் வியட்நாம் எல்லையோர பாதுகாப்பு ஆணையத்திற்காக அதி வேக பாதுகாப்பு படகு தயாரிப்பு திட்டத்தை செயல்படுத்துதல்; தயாரித்து முடிக்கப்பட்ட ஒரு அதி வேக பாதுகாப்பு படகை வியட்நாமுக்கு வழங்குதல்; இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு அதி வேக பாதுகாப்பு படகுகளை அறிமுகப்படுத்துதல்; மற்றும் வியட்நாமில் தயாரிக்கப்படவுள்ள 7 அதி வேக பாதுகாப்பு படகுகளுக்கான பணிகளை தொடங்குதல்.
  2. வியட்நாமின் நிஹ் துவான் மாகாணத்தில் உள்ள உள்ளூர் மக்களின் நலனுக்காக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட ஏழு வளர்ச்சி திட்டங்களை நிறைவு செய்து ஒப்படைத்தல்.
  3. வருடாந்திர துரித தாக்க திட்டங்களின் எண்ணிக்கையை ஐந்தில் இருந்து பத்தாக 2021-22-ஆம் நிதி ஆண்டில் இருந்து உயர்த்துதல்.
  4. வியட்நாமின் பாரம்பரிய பாதுகாப்புக்காக மூன்று புதிய வளர்ச்சிக் கூட்டு திட்டங்கள் (மை சன்னில் எஃப் பிரிவு கோயில்; குவாங் நாம் மாகாணத்தில் டாங்க் டுவாங் புத்த மடம், பு யென் மாகாணத்தில் நான் சாம் கோபுரம்).
  5.  இந்திய–வியட்நாம் பண்பாடு மற்றும் கலாச்சார உறவுகள் குறித்த கலைக் களஞ்சியத்தை தயாரிப்பதற்கான இருதரப்பு திட்டத்தின் தொடக்கம்.
Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
India's economic juggernaut is unstoppable

Media Coverage

India's economic juggernaut is unstoppable
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 10, 2023
June 10, 2023
பகிர்ந்து
 
Comments

New India Appreciates PM Modi's Call to Popularise Khadi – Making Swadeshi Become Global

Celebrating the Modi Government’s Efforts & Policies to Empower and Enable India’s Hardworking Middle Class