நாட்டு மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்துள்ள காதி ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை உருவாக்குகிறது என்றும் வேலைவாய்ப்புகளை ஊக்குவிப்பதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு நாராயண் ரானே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காதி கிராமத் தொழில்துறை, கலைஞர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களது வருவாயைப் பெருக்குவதில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளார்.
2022 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2023 ஜனவரி 31-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம், 77,887.97 கோடிக்கு உற்பத்தி செய்து ரூ.10,8571.84 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாகவும் 1.72 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாகவும் அவர் மேலும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சரின் இந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தச் சாதனைகள் உற்சாகம் அளிக்கும் வகையில் உள்ளன! காதி, மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை உருவாக்குவதுடன் வேலைவாய்ப்பையும் ஊக்குவிக்கிறது."
ये उपलब्धियां उत्साहित करती हैं! खादी से देशवासियों का यह जुड़ाव रोजगार को बढ़ावा देने के साथ-साथ नित नए रिकॉर्ड बना रहा है। https://t.co/3kJDiRnSyi
— Narendra Modi (@narendramodi) May 9, 2023