1.  இன்று, ஜெர்மன் பிரதமர் திரு.ஒலாப் ஸ்கால்ஸ் மற்றும் பிரதமர் திரு.நரேந்திரமோடி ஆகியோரது கூட்டுத் தலைமையின்கீழ், ஜெர்மனி மற்றும் இந்திய அரசுகள், அரசாங்க அளவிலான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளன.   இருநாட்டுத் தலைவர்கள் மட்டுமின்றி, இருநாடுகளையும் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் பிற முக்கியப் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழுவினரும் இதில் இடம்பெற்றனர். 
  2. இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், ஜெர்மனிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவு, பரஸ்பர நம்பிக்கை,  இரு நாடுகளின் மக்களுக்கும் சேவையாற்றுவதில் கூட்டு நலன் மற்றும் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஜனநாயக நற்பண்புகள், சட்டப்படியான ஆட்சி மற்றும் மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான பலதரப்பு நடவடிக்கைகள் அடிப்படையில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.  
  3. ஐ.நா. சபையில், வலுவான விதிமுறைகள் சார்ந்த சர்வதேச ஒழுங்குமுறையின் முக்கியத்துவத்தை இருநாட்டு அரசுகளும் சுட்டிக் காட்டியிருப்பதுடன்,   அனைத்து நாடுகளின் இறையான்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்து செயல்படுவது உள்ளிட்ட அம்சங்கள், சர்வதேச சட்டத்தின் அடிப்படைத் தத்துவங்களாக, ஐ.நா. சாசனத்தில் புனிதமானதாக இடம்பெற்றுள்ளன.  
  4. இந்த கிரகத்தைப் பாதுகாக்கும் விதமாக,  கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பிலிருநது பொருளாதாரத்தை மீட்டெடுக்க இரு தலைவர்களும் தங்களது உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டியுள்ளனர்.    
  5. ஐ.நா. சபையில், வலுவான விதிமுறைகள் சார்ந்த சர்வதேச ஒழுங்குமுறையின் முக்கியத்துவம் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படையில்,   வலுவான மற்றும் சீர்திருத்தம் செய்யப்பட்ட பன்முகத்தன்மையை ஜெர்மனியும் – இந்தியாவும் சுட்டிக்காட்டியுள்ளன.   நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு சபை சீர்திருத்த முயற்சிகளைமேலும் தீவிரப்படுத்த இரு நாட்டு அரசுகளும் உறுதி பூண்டுள்ளன.
  6. சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும்ஆசியான் அமைப்பின் மையத்தன்மையின்  முக்கியத்துவத்தை இருதரப்பும் ஒப்புஙக கொண்டுள்ளன.   
  7. மே 2021-ல் போர்டோ நகரில், இந்தியா – ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான நீடித்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதை, இரு நாடுகளும் வரவேற்றுள்ளன.  
  8. பலதரப்பு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்கக் கடல் முன்முயற்சி (BIMSTEC) போன்ற பிராந்திய மற்றும் ஜி-20 போன்ற பன்னாட்டு அமைப்புகளளுடனான ஒத்துழைப்பின் அவசியத்தை இரு தரப்பும் வலியுறுத்தியுள்ளன.  
  9. ஜி-7 அமைப்பிற்கு ஜெர்மனி தலைமை வகிக்கும் தற்போதைய காலகட்டத்தில், எரிசக்தி மாற்றம் உள்ளிட்ட அம்சங்களில், ஜி-7 அமைப்பிற்கும் இந்தியாவிற்கும் இடையான நெருங்கிய ஒத்துழைப்பையும் இரு தரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளன. 
  10. ரஷ்யப் படைகளின் உக்ரைன் மீதான கடுந் தாக்குதலுக்கு, ஜெர்மனி தனது கடும் கண்டனத்தை மீண்டும் பதிவு செய்துள்ளது.  

உக்ரைனில் காணப்படும் தற்போதைய மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து ஜெர்மனியும் இந்தியாவும் தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளன. 

  1. ஆப்கானிஸ்தான் பிரச்சினையில், மனிதாபிமான நிலவரம்,தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் மீன்டும் தலைதூக்கியிருப்பது குறித்தும், இரு நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.  

 

இதுபோன்று, பசுமை மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு,  வர்த்தகம், முதலீடு மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான ஒத்துழைப்பு, அரசியல் மற்றும் கல்வி சார்ந்த பரிமாற்றங்கள், அறிவியல் ஒத்துழைபபு, தொழிலாளர்கள் மற்றும் இருநாட்டு மக்களின் பயணம்,  சர்வதேச ஆரோக்கியத்திற்கான ஒத்துழைப்பு உட்பட மொத்தம் 56 அம்சங்கள் இந்தக் கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
How India's digital public infrastructure can push inclusive global growth

Media Coverage

How India's digital public infrastructure can push inclusive global growth
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 24, 2024
April 24, 2024

India’s Growing Economy Under the Leadership of PM Modi