இந்தியா வென்ற அதிகளவிலான பதக்கங்கள், நமது மனதை மகிழ்ச்சியால் நிறைத்துள்ளன: பிரதமர்
தனித்துவமான விருந்தோம்பலுக்காக ஜப்பான் அரசு மற்றும் மக்களுக்கு பிரதமர் பாராட்டு

இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு எப்போதும் சிறப்பான இடம் உள்ளது என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.  நமது குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் சாம்பியன் மற்றும் உற்சாகத்தின் ஊற்று என அவர் கூறினார்.

விளையாட்டு வீரர்களுக்கு நிலையான ஆதரவு அளித்ததற்காக அவர்களின் பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரை  பிரதமர் பாராட்டினார்.  தனித்துவமான விருந்தோம்பல்,  முக்கிய விஷயங்களை கவனித்தது, அதிகம் தேவையான மீள் தகவல்களை பரப்பியது,   இந்த ஒலிம்பிக் மூலம் ஒன்றாக இருந்தது ஆகியவற்றுக்காக  ஜப்பான் குறிப்பாக டோக்கியோ மக்கள், ஜப்பான் அரசை அவர் பாராட்டினார்.

இது குறித்து தொடர் சுட்டுரையில் பிரதமர் கூறியதாவது:

‘‘ இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ #Paralympics-க்கு எப்போதும் சிறப்பான இடம் உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டி, ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும்  இருக்கும் மற்றும் பல தலைமுறை விளையாட்டு வீரர்கள், விளையாட்டுகளை தொடர ஊக்குவிக்கும். நமது குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் சாம்பியன் மற்றும் உற்சாகத்தின் ஊற்று.

இந்தியா வென்ற அதிக எண்ணிக்கையிலான பதக்கங்கள், நமது மனதை மகிழ்ச்சியால் நிறைத்துள்ளன.  இதற்காக விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரை பாராட்ட விரும்புகிறேன்.  விளையாட்டுகளில்  நமது வெற்றிகள் அதிக பங்கேற்பை உறுதி செய்யும் என நம்புகிறோம்.

நான் முன்பு கூறியது போல், ஜப்பான், குறிப்பாக டோக்கியோ மக்கள் மற்றும் ஜப்பான் அரசு,  தனித்துவமான விருந்தோம்பல்,  முக்கிய விஷயங்களை கவனித்தது, அதிகம் தேவையான மீள் தகவல்களை பரப்பியது,   இந்த ஒலிம்பிக் மூலம் ஒன்றாக இருந்தது ஆகியவற்றுக்காக  பாராட்டப்பட வேண்டும்’’ என கூறியுள்ளார்.

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'Make in India' radar programme to help Tejas track targets gets Rs 2,205 crore boost

Media Coverage

'Make in India' radar programme to help Tejas track targets gets Rs 2,205 crore boost
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 01, 2026
August 01, 2026

Aatmanirbhar Bharat Delivers: Indigenous Power, Farmer Prosperity & Blue Economy