பகிர்ந்து
 
Comments

திரு. நரேந்திர மோடியின் பயணம், வடக்கு குஜராத்தின் மேஷானா மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் சாதாரண நகரமான வாத்நகரில் உள்ள குறுகலான தெருக்களில் துவங்கியது. இந்தியா சுதந்திரம் அடைந்த மூன்றாடுகளுக்கு பின்பு, இந்தியா குடியரசான சில மாதங்களுக்குள்ளாக 1950, செப்டம்பர் 17 அன்று பிறந்த திரு.நரேந்திர மோடி, திரு. தாமோதர்தாஸ் மோடி மற்றும் திருமதி. ஹிராபா மோடி ஆகியோரின் ஆறு குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்தார்.  வாத்நகர் நகரம் வரலாற்றில் இடம்பெற்ற ஒன்றாகும். இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வராய்ச்சிகள், இந்த நகர் கற்றல் மற்றும் ஆன்மிகத்திற்கு பெயர்பெற்று விளங்கியதாக தெரிவிக்கின்றன. சீனப் பயணி ஹியுவான் சுவாங் வாத்நகருக்கு வருகை புரிந்துள்ளார். பலநூற்றாண்டுகளுக்கு முன்பாக, 10,000-க்கும் அதிகமான புத்த பிட்சுகள் இந்நகரில் வாழ்ந்துள்ள மிகப் பெரிய புத்த மத வரலாற்றை வாத்நகர் கொண்டுள்ளது.

vad1

வட்நகர் ரெயில் நிலையம். இங்கு திரு. நரேந்திர மோடியின் தந்தைக்கு சொந்தமான தேநீர் கடை இருந்தது. திரு. நரேந்திர மோடியும் இங்கு தேநீர் விற்றுள்ளார்

திரு.நரேந்திர மோடியின் ஆரம்பகால வருடங்கள் புனைக் கதைகளில் வருவதை விட அப்பாற்பட்டது.  சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவை சேர்ந்த அக்குடும்பம் தனது அன்றாடத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக போராட வேண்டியிருந்தது. மொத்த குடும்பமும் ஒற்றை தளம் கொண்ட சிறிய வீட்டில் வசித்தது (ஏறக்குறைய 40 அடிக்கு 12 அடி). அவரது தந்தை உள்ளூர் ரயில் நிலையத்தில் அமைத்திருந்த தேனீர் கடையில் தேனீர் விற்று வந்தார். அவரது சிறிய வயதில், திரு.நரேந்திர மோடியும் தனது தந்தையாரின் தேனீர் கடையில் உதவி புரிந்து வந்தார்.

இத்தகைய வளரும் பருவம், திரு.நரேந்திர மோடியிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. குழந்தையாக இருந்தபோது, திரு.நரேந்திர மோடி தனது பாடங்கள், கல்வி சாராத வாழ்க்கை, மற்றும் குடும்பத்தின் தேனீர் கடையில் பங்களிப்பு ஆகியவற்றை திறம்பட சமமாக கையாண்டு வந்தார். அவரது பள்ளித் தோழர்கள் திரு.நரேந்திராவை போட்டிகள் மற்றும் படிப்பதில் ஆர்வம் கொண்ட மாணவராக இருந்ததை நினைவு கூர்ந்தனர். அவர் படிப்பதற்காக பள்ளி நூலகத்தில் மணிக்கணக்கில் நேரத்தை செலவழித்து வந்தார். விளையாட்டில், நீச்சலின் மீது அவருக்கு ஈர்ப்பு இருந்தது. திரு.நரேந்திர மோடி அனைத்து சமூகங்களிலிருந்து பல்வேறு நண்பர்களை பெற்றிருந்தார்.  குழந்தையாக இருந்தபோது  அவர் இந்து பண்டிகைகள் மற்றும் தமது அண்டை வீடுகளில் இஸ்லாமிய நண்பர்கள் அதிகமாக இருந்ததால் இஸ்லாமிய பண்டிகைகளை கொண்டாடி மகிழ்ந்தார்.

Humble Beginnings: The Early Years
சிறுவனாக இருந்த போது திரு. நரேந்திர மோடி இராணுவத்தில் சேர்ந்து சேவைபுரிய கனவு கண்டார். ஆனால் விதியிடம் வேறு திட்டம் இருந்தது…

இருப்பினும் அவரது சிந்தனைகள் மற்றும் கனவுகள், வகுப்பறையில் துவங்கி, அலுவலகத்தில் முடிவடையும் பாரம்பரிய வாழ்வை தாண்டி இருந்தது. அவர் அதனை நோக்கி செல்ல விரும்பியதோடு, சமூகத்தில் மாறுபாடாக இருந்தது. மக்களின் கண்ணீரையும், துயரத்தையும் துடைக்க வேண்டும். இள வயதில், அவர் துறவு மற்றும் சந்நியாசத்தின் மீது ஈர்ப்பு கொண்டார். அவர் உப்பு, மிளகாய், எண்ணெய் மற்றும் வெல்லம் ஆகியவற்றை உண்பதை தவிர்த்தார். சுவாமி விவேகானந்தரின் புத்தகங்கள் மீதான முழுமையான வாசிப்பு, திரு.நரேந்திர மோடியை ஆன்மிக பயணத்திற்கு அழைத்து சென்றதோடு, ஜகத் குரு பாரத் என்ற சுவாமி விவேகானந்தரின் கனவை நிறைவேற்றும் அவரது குறிக்கோளுக்கு அடித்தளம் அமைத்தது.

திரு.நரேந்திர மோடியின் குழந்தைப்பருவம் மற்றும் அவருடைய வாழ்நாள் முழுவதும் இருக்கும் குணாதியசத்தை ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால், அது சேவை ஆகும். தபி ஆற்றில் வெள்ளக் கரைபுரண்டு ஓடியபோது, 9 வயதான அவரும், அவரது நண்பர்களும் உணவுக் கூடத்தை துவங்கி, அதன் வருமானத்தை நிவாரணப் பணிகளுக்கு அளித்தனர். பாகிஸ்தானுடன் போர் உச்சகட்டத்தில் நடைபெற்று வந்தபோது, அவர் ரயில் நிலையத்திற்கு சென்று, எல்லைப் பகுதிக்கு செல்லும் மற்றும் எல்லை பகுதியிலிருந்து வரும் போர் வீரர்களுக்கு தேனீர் வழங்கினார். அவரது இளம் வயதில், இது சிறிய பணியாக இருப்பினும், தாய்நாட்டின் அறைகூவலுக்கு அவர் பதில் அளிப்பதாக இருந்தது.

குழந்தையாக இருந்தபோது, திரு.நரேந்திர மோடியிடம் ஒரு கனவு இருந்தது – இந்திய இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது. அவரை போன்ற பல இளைஞர்களுக்கு, இராணுவமே தாய் இந்தியாவிற்கு சேவை புரியும் உயர்ந்ததாக கருதப்பட்டது. அதிர்ஷ்டம் இருந்திருந்தாலும், அவரது குடும்பத்தினர் இந்த யோசனையை எதிர்த்தனர். திரு.நரேந்திர மோடி, அருகில் உள்ள ஜாம்நகரில் அமைந்திருந்த சைனிக் பள்ளியில் படிக்க வேண்டும் என்று மிகவும் விரும்பியபோதும், கட்டணம் செலுத்த வேண்டிய நேரத்தில், வீட்டில் பணம் இல்லாமல் போனது. உறுதியாக, திரு. நரேந்திரா அதிருப்தியடைந்திருப்பார். ஆனால், போர் வீரனின் சீருடையை அணிய வாய்ப்பில்லாமல் போன இந்த இளம் சிறுவனுக்கு காலம் வேறு திட்டங்களை வைத்திருந்தது. பல வருடங்களுக்கு பிறகு, அவர் சென்ற உயர்பாதை, இந்தியா முழுவதும் அவரை கொண்டு சென்று, மனிதகுலநத்திற்கு பணியாற்றும் பெரிய பணியை அளித்தது.

vad4

அன்னையிடம் ஆசி பெறுகிறார்

Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
PM Modi highlights M-Yoga app in International Yoga Day address. Here's all you need to know

Media Coverage

PM Modi highlights M-Yoga app in International Yoga Day address. Here's all you need to know
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
ஏழு ஆண்டு கால மோடி அரசு இந்தியாவை எவ்வாறு மாற்றியுள்ளது: அகிலேஷ் மிஷ்ரா
May 31, 2021
பகிர்ந்து
 
Comments

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாம் அரசு தனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக, பிரதமர் பதவியில் ஏழு ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார். பதவியில் உள்ள அரசின் தலைவர் என்ற முறையில், அவரது சாதனைகள் மற்றும் குறைபாடுகளை மதிப்பிடுவதற்கு  இது நீண்ட காலம்தான். பிரதமர் மோடியின் பதவிக்காலம் குறித்து நாம் எவ்வாறு மதிப்பிட வேண்டும்? 

 

அளவிடக்கூடிய சாதனைகளின் பட்டியல் மூலம் இதனை மதிப்பிடுவது ஒரு முறை. உதாரணமாக, முதன்மையான திட்டங்களின் எண்ணிக்கை மிகவும் அசாதாரணமானது. வங்கிகளுக்கு செல்லாதவர்களுக்கு, 42 கோடி ஜன்தன் திட்ட வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பங்களும் நிதிப்பரவலில் சேர்கப்பட்டுள்ளன. நிதியுதவி கிட்டாதவர்களுக்கு நிதி அளிக்கும் முத்ரா திட்டத்தின் மூலம் 29 கோடி பேருக்கு ரூ.15 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொழில் முனைவோர் புரட்சிக்கு வித்திட்டுள்ளது. டிஜிடல் என்றால் என்னவென்று தெரியாதவர்களை யுபிஐ மூலம் டிஜிடல் பரிவர்த்தனையில் சேர்த்து, 2020-ல் 25 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் உலகிலேயே அதிக அளவுக்கு டிஜிடல் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 

 

இருப்பினும், இந்த குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு அப்பால், வெற்றிகளை மதிப்பிட மற்றொரு வழியும் உண்டு. அதுதான், நமது தேசிய தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். அத்தகைய சில மாற்றங்கள் எவை?

 

முதலாவதாக, மத்திய அரசுகள் பொருளாதார கொள்கை வகுப்பதை புரிந்துகொண்டு வந்த வழிமுறையின் அடிப்படையிலேயே  பிரதமர் மோடி மாற்றம் செய்தார். பிரதமர் மோடிக்கு முன்பு  இருந்த அரசுகள், கவர்ச்சி மிகுந்த விரிநிலைப் பொருளாதாரத்தின் மீது  மிகுந்த கவனம் செலுத்தின. அதன் பின்புலத்தில் மாநில அரசுகள் இருந்தன. அதனால் தான் சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் கடந்த நிலையிலும் (2014-ல் மோடி பதவி ஏற்பதற்கு முன்பு வரை) நாடு அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்க முடியாமல், வீடுகள் தனித்து விடப்பட்டன, ஒவ்வொரு கிராமத்திலும் சுகாதார வசதி செய்து கொடுக்க முடியாமலும், அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை வழங்க முடியாமலும் அரசுகள் தவித்து வந்தன.  

 

சமச்சீரற்ற இந்த நிலையை மோடி சரிப்படுத்தினார். அதனால், இன்று ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் மயமாக்கலுக்கு முன்னுரிமை அளிப்பதிலும், புதிய வேளாண் சட்டங்கள் மூலமும் வேளாண் துறைக்கு புதிய முன்னுதாரணமாக கொள்கை வகுக்கப்பட்டது. இந்த துறைகளில்,  பிரதமர் மோடி சிறப்பான  முன்னேற்றத்தை அடைவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இரண்டாவதாக, மத்திய அரசுகளிடம் இருந்து, சிறப்பானவற்றை எதிர்பார்க்கும் மனப்போக்கை பிரதமர் மோடி மாற்றினார். இந்த நாட்டு மக்கள்  பின்தங்கிய நிலையிலோ அல்லது பின்பற்றி நடப்பவர்களாக இருப்பதில் இனியும் திருப்தி அடைய மாட்டார்கள். கொவிட்-19 தொற்றை முறியடிக்கும் திறன் மிக்க தடுப்பூசியை ஓராண்டுக்குள் உலகம் உருவாக்கியுள்ளதென்றால், உள்நாட்டு தடுப்பூசிகளை உருவாக்குவதுடன், அவற்றை உலகிலேயே அதிவேகத்தில் மக்களுக்கு செலுத்தும் இந்தப் போட்டியிலும் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்மிடம் உள்ளது.  

மூன்றாவதாக, மிகக் கடுமையான துன்பத்தை எதிர்கொள்ளும் போது பின்தங்கி விடும் வகையிலான கடந்த 70 ஆண்டுகளாக நம்மிடம் இருந்த மனப்போக்கை மோடி மாற்றினார். தோக்லாமிலிருந்து பாங்காங் ஏரி வரை குறிவைத்ததுடன், தென்சீனக்கடல் வரை ஒரே பகுதி ஒரே சாலை என்னும் முயற்சியை சீனா முன்னெடுத்துள்ளது. பருவநிலை மாற்ற பேச்சு வார்த்தைகள், தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி என எந்த விஷயமாக இருந்தாலும், இன்றைய 2021 இந்தியா, 2014-க்கு முந்தைய இந்தியா இல்லை என்பதை வெளிநாடுகளை உணர வைத்தவர் பிரதமர் மோடி. 

நான்காவதாக, நமது வெளியுறவு கொள்கையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம். அவை நீதி போதிக்கும் சொற்பொழிவுகளாக இனி இருக்காது. முற்றிலும் தேசிய நலனுக்கு ஏற்ற வகையிலேயே அவை இருக்கும்.

ஐந்தாவதாக, தனியார் துறைக்கு மதிப்பு அளித்தல். முறையான லாபம் இயற்றுவதற்கு இனி தடையிருக்காது. தொழில் முனைவோர் நாட்டு நிர்மானத்தின் தூண்கள் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். அதை கொள்கையாக மாற்றும் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. இந்த வகையில், மிகவும் முக்கியமான பொருளாதார பங்களிப்பு இனிமேல்தான் வரவுள்ளது. 

ஆறாவதாக, பெண்களை சமுதாயக் கட்டுப்பாட்டு பிடியிலிருந்து மீட்டு அவர்களுக்கு அதிகாரமளித்தல். இத்தருணத்தில் மோடியின் முக்கியமான சமூகப் பங்களிப்பாக அது உள்ளது. மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்கள் முதல் ஆயுதப்படைகளில் பெண்களுக்கு நிரந்தர ஆணையம் அமைத்தது, சிறு, குறு தொழில்களின் நிர்வாகக் குழுக்களில் இடம் பெற வைத்தது, முத்தலாக் என்னும் கொடுமையிலிருந்து விடுவித்தது, மூதாதையரின் சொத்தில் சட்டப்பூர்வ உரிமை என அனைத்து தளைகளும் உடைக்கப்பட்டுள்ளன. 

ஏழாவதாக, மோடியின் முக்கியமான, நிலைத்து நிற்கும் பங்களிப்பாக நமது பெருமைக்குரிய கலாச்சார பாரம்பரியத்தை நவீன வசதிகளுடன் மாற்றுவது இடம் பெறும். ராமர் கோயில் கட்டுமானத்தைக் கொண்டாடும் நாடு, செயற்கைக்கோளைத் தாக்கும் ஆயுத இயக்கத்தின் வெற்றியிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ககன்யான் தொடங்கப்படுவதையும் அது எதிர்பார்த்துள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான் கடந்த பல தசாப்தங்களில் முழுப்பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாடு தற்போது கொவிட்-19 இரண்டாம் அலையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டின் மக்களுக்கு சேவை புரியும் வகையில் உறுதி ஏற்று மோடி அரசு தனது ஏழாவது ஆண்டை உரிய முறையில் கொண்டாடுகிறது. தற்போதைய தேசிய கட்டாயத்துக்கிடையில் மட்டுமல்லாமல், இந்த அரசுக்கு வாக்களித்த மக்களுக்கு உரிய முறையில் பெருமை அளிக்கும் வகையிலும் அது நடை போடுகிறது. ஆட்சி என்பதிலிருந்து சேவையாக அரசை மாற்றியிருக்கும் பிரதமர் மோடியின் செயல்பாடுதான் என்றென்றும் மின்னும் சாதனையாக இருக்கும்.