பகிர்ந்து
 
Comments
PLI Auto Scheme will incentivize emergence of Advanced Automotive Technologies global supply chain in India
Help create additional employment of over 7.6 lakh people
Incentives worth ₹ 26,058 crore will be provided to industry over five years
PLI Scheme for auto sector will bring fresh investments of over₹42,500 crore in five years and incremental production of over ₹ 2.3 lakh crore
PLI Scheme for Drones will bring fresh investments of over₹5,000 crore in three years and incremental production of over ₹ 1,500 crore
PLI Scheme for automotive sector along with already launched PLI for Advanced Chemistry Cell (₹18,100 crore) and Faster Adaption of Manufacturing of Electric Vehicles (FAME) Scheme (₹10,000 crore) will give a big boost to manufacture of Electric Vehicles
Will enable India to leapfrog to environmentally cleaner, Electric Vehicles and Hydrogen Fuel Cell Vehicles

தற்சார்பு இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், வாகனத் துறை மற்றும் ஆளில்லா குறு விமானம் (ட்ரோன்) துறைக்கு ரூ. 26,058 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு அனுமதி அளித்துள்ளது. வாகன துறைக்கான இந்தத் திட்டம், உயர் மதிப்பு கொண்ட மேம்பட்ட வாகன தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை ஊக்குவிக்கும். உயர் தொழில்நுட்பம், மேலும் திறமையான மற்றும் பசுமை வாகன உற்பத்தியில் ஒரு புது யுகத்திற்கு இந்தத் திட்டம் வழிவகுக்கும்.

மத்திய அரசின் 2021-22-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.1.97 லட்சம் கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்ட 13 துறைகளுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாக வாகனம் மற்றும் ட்ரோன் துறைகளுக்கு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 13 துறைகளுக்கு அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் குறைந்தபட்சம் ரூ.37.5 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தி இருக்கும் என்றும், 5 ஆண்டுகளில் கூடுதலாக சுமார் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள மேம்பட்ட வாகன தொழில்நுட்பத் தயாரிப்புகளின் உற்பத்திக்கான கட்டண குறைபாடுகளை எதிர்கொள்ள வாகன துறைக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் உறுதுணையாக இருக்கும். இந்தத் திட்டத்தின் ஊக்குவிப்பு கட்டமைப்பு, மேம்பட்ட வாகன தொழில்நுட்பத் தயாரிப்புகளின் உள்நாட்டு உலகளாவிய விநியோக சங்கிலிக்கு புதிய முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் தொழில் துறையை ஊக்குவிக்கும். ஐந்து ஆண்டுகளில் வாகன துறைக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் புதிதாக சுமார் ரூ. 42,500 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளும், ரூ. 2.3 லட்சம் கோடி அளவில் உற்பத்தியும், கூடுதலாக சுமார் 7.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சர்வதேச வாகன வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பையும் இது அதிகரிக்கும்.

தற்போது இயங்கி வரும் வாகன நிறுவனங்களுக்கும், வாகனம் அல்லது வாகன உதிரி பாகங்களின் உற்பத்தி வர்த்தகத்தில் தற்போது ஈடுபடாத புதிய முதலீட்டாளர்களுக்கும் வாகன துறைக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் பயனளிக்கும். சாம்பியன் அசல் வாகன உபகரண உற்பத்தியாளர்கள் ஊக்குவிப்புத் திட்டம் மற்றும் உபகரணங்கள் சாம்பியன் ஊக்குவிப்புத் திட்டம் ஆகிய இரண்டு பாகங்களை இந்தத் திட்டம் கொண்டுள்ளது. சாம்பியன் அசல் வாகன உபகரண உற்பத்தியாளர்கள் ஊக்குவிப்புத் திட்டம் என்பது மின்கல மின்சார வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிவாயு மின்கல வாகனங்களுக்கான விற்பனை மதிப்பு சார்ந்த திட்டமாகும். உபகரணங்கள் சாம்பியன் ஊக்குவிப்புத் திட்டம் என்பது, மேம்பட்ட வாகன தொழில்நுட்ப உபகரணங்கள், முழுவதும் பிரித்து சேர்க்கக்கூடிய/ சில பகுதிகளை பிரித்து சேர்க்கக் கூடிய கருவிகள், இரண்டு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், வணிக வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் போன்றவற்றின் விற்பனை மதிப்பு சார்ந்த திட்டமாகும்.

வாகன துறைக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் மற்றும் மேம்பட்ட வேதியியல் மின்கலன் (ரூ. 18,100 கோடி) மற்றும் மின்சார வாகனங்களின் உற்பத்திக்கு விரைவாக மாறுதல் (ரூ. 10,000 கோடி) ஆகியவற்றிற்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் வாயிலாக பாரம்பரிய புதைபடிம எரிபொருட்களை அடிப்படையாகக் கொண்ட வாகன போக்குவரத்து அமைப்புமுறையிலிருந்து, சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான, நிலையான, சிறந்த மற்றும் அதிக பயனளிக்கும் மின்சார வாகனங்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்புமுறைக்கு இந்தியா மாறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் உதிரிபாகங்கள் தொழிலுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம், இந்த சீரிய தொழில்நுட்பத்தின் கேந்திர, திட்டமிட்ட மற்றும் இயக்க பயன்பாட்டிற்கு ஏதுவாக இருக்கும். தெளிவான வருவாய் இலக்குகள் மற்றும் உள்நாட்டு மதிப்புக் கூட்டலில் கவனம் செலுத்தும் ட்ரோன்களுக்கான குறிப்பிட்ட உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம், திறன் மேம்பாட்டில் முக்கிய அம்சமாக விளங்குவதுடன்,  இந்தியாவின் வளர்ச்சி உத்திகளின் குறிப்பிடத்தகுந்த உந்து சக்தியாகவும் திகழும். ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரிபாகங்கள் துறைக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் மூன்று ஆண்டுகளில் ரூ. 5000 கோடி மதிப்பிலான முதலீடுகள், ரூ. 1500 கோடி அளவிலான வர்த்தகம் மற்றும் கூடுதலாக சுமார் 10,000 வேலைவாய்ப்புகள் ஏற்படும்.

 

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேராவில் தீபாவளி பண்டிகையின்போது இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேராவில் தீபாவளி பண்டிகையின்போது இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
How does PM Modi take decisions? JP Nadda reveals at Agenda Aaj Tak

Media Coverage

How does PM Modi take decisions? JP Nadda reveals at Agenda Aaj Tak
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Social Media Corner 5th December 2021
December 05, 2021
பகிர்ந்து
 
Comments

India congratulates on achieving yet another milestone as Himachal Pradesh becomes the first fully vaccinated state.

Citizens express trust as Govt. actively brings reforms to improve the infrastructure and economy.