இந்தியாவின் கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் சூழல் அமைப்பை வலுப்படுத்த ரூ.69,725 கோடி மதிப்பிலான விரிவடைந்த திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு திறனை வலுப்படுத்துதல், நீண்ட கால நிதியுதவியை மேம்படுத்துதல், புதிய பகுதியில் மற்றும் ஏற்கனவே செயல்படும் பகுதியில் கப்பல் கட்டும் தள மேம்பாடு, தொழில்நுட்ப திறன்களை விரிவாக்குதல் ஆகியவற்றை வலுப்படுத்த இந்த நான்கு முக்கிய அணுகுமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் கப்பல் கட்டுமான நிதியுதவி திட்டம் ரூ.24,736 கோடி தொகுநிதியத்துடன் 2036 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இந்தியாவில் கப்பல் கட்டுமானத்திற்கு ஊக்கத் தொகை வழங்குவதையும், ரூ.4001 கோடி ஒதுக்கீட்டுடன் கப்பல் உடைத்தலுக்கான கடன் குறிப்பை உள்ளடக்குவதையும் நோக்கமாக கொண்டது. அனைத்து முன்முயற்சிகளையும் மேற்பார்வையிடுவதற்கு தேசிய கப்பல் கட்டுமான இயக்கம் நிறுவப்படும்.
ஒட்டுமொத்த திட்டம் சுமார் 30 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு இந்திய கடல்சார் துறைக்கு சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார தாக்கத்திற்கு அப்பால், இந்த முன்முயற்சி எரிசக்தி, உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு முக்கியமான வழங்கல் தொடர் மற்றும் கடல்சார் வழித்தடங்களில் உறுதிப்பாட்டை கொண்டுவரும்.
In a transformative push for maritime self-reliance, the Cabinet approved a package to rejuvenate India’s shipbuilding and maritime sector. This historic move will unlock 4.5 million Gross Tonnage capacity, generate jobs, and attract investments. https://t.co/6ci5KaxNRu
— Narendra Modi (@narendramodi) September 24, 2025


