உலக வங்கியின் உதவியுடன் “சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல்” திட்டத்திற்கு 808 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ரூ. 6,062.45 கோடி வழங்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்த புதிய திட்டம் 2022-23-ம் நிதியாண்டில் தொடங்கும்.

 

தொடர்புடைய செலவு:

திட்டத்திற்கான மொத்த செலவு ரூ 6,062.45 கோடி அல்லது 808 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில் ரூ 3750 கோடி அல்லது 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உலக வங்கியின் கடனாக பெறப்பட்டு, மீதமுள்ள ரூ 2312.45 கோடி அல்லது 308 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய அரசால் நிதியளிக்கப்படும்.

 

விரிவான விவரங்கள்:

"சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல்" என்பது உலக வங்கியின் உதவியுடனான மத்தியத் துறைத் திட்டமாகும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கொரோனா வைரஸ் மீட்பு நடவடிக்கைகளை இது ஆதரிக்கிறது.

 

சந்தை மற்றும் கடனுக்கான அணுகலை மேம்படுத்துதல், மத்தியிலும் மாநிலத்திலும் அமைப்புகள் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், மத்திய-மாநில இணைப்புகள் மற்றும் கூட்டுகளை மேம்படுத்துதல், தாமதமான பணம் செலுத்துதல் குறித்த சிக்கல்களை களைதல் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் பசுமைப்படுத்துதல் போன்றவற்றை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் திறனை தேசிய அளவில் கட்டியெழுப்புவதுடன், மாநிலங்களில் செயல்படுத்தும் திறன் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் பரப்பை அதிகரிக்க இத்திட்டம் முயற்சிக்கும்.

 

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியம் உள்ளிட்ட முக்கிய தாக்கம்:

தற்போதுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் திட்டங்களின் தாக்கத்தை இத்திட்டம் மேம்படுத்துவதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையில் பொதுவான மற்றும் கொவிட் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும்,

குறிப்பாக, போட்டித்திறன், திறன் மேம்பாடு, தர செறிவூட்டல், தொழில்நுட்ப மேம்பாடு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சந்தைப்படுத்தல் ஊக்குவிப்பு போன்றவற்றை இந்த திட்டம் மேம்படுத்தும்.

மாநிலங்களுடனான மேம்பட்ட ஒத்துழைப்பின் மூலம் வேலைவாய்ப்பு-உருவாக்குபவராகவும், சந்தை ஊக்குவிப்பாளராகவும், நிதி வசதியாளராகவும் இத்திட்டம் இருக்கும், மேலும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள் மற்றும் பசுமையாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Defence ministry inks Rs 2,312-crore deal with HALfor 8 Dornier aircraft for Coast Guard

Media Coverage

Defence ministry inks Rs 2,312-crore deal with HALfor 8 Dornier aircraft for Coast Guard
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam emphasising the importance of remaining active for progression
February 13, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam emphasising the importance of remaining active for progression, like the ever-dynamic sun.

"चरन् वै मधु विन्दति चरन् स्वादुमुम्बरम्

सूर्यस्य पश्य श्रेमाणं यो न तन्द्रयते चरंश्चरैवेति॥"

The Subhashitam conveys, "It is the one who keeps progressing who gains the best rewards in the world, just like the ever-dynamic sun earns glory. Hence, one should always be active."

Shri Modi stated that, the PM Surya Ghar-Free Electricity Scheme, which began today, is also illuminated by Lord Sun who infuses energy and enthusiasm into the lives of all of us.

The Prime Minister posted on X:

"भगवान सूर्य हम सबके जीवन में ऊर्जा और उत्साह का संचार करते हैं। आज के दिन शुरू हुई पीएम सूर्य घर: मुफ्त बिजली योजना भी उन्हीं से रोशन है। यह देशवासियों को स्वच्छ ऊर्जा अपनाने के लिए निरंतर प्रेरित कर रही है।

चरन् वै मधु विन्दति चरन् स्वादुमुम्बरम्

सूर्यस्य पश्य श्रेमाणं यो न तन्द्रयते चरंश्चरैवेति॥"