குஜராத் மாநிலம் அகமதாபாத் - டோலேரா இடையே பகுதி அதிவிரைவு இரட்டை வழி ரயில் பாதைத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் மொத்த செலவு சுமார் 20,667 கோடி ரூபாயாகும். உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்திய ரயில்வேயின் முதலாவது பகுதி அதிவிரைவு திட்டம் இதுவாகும்.
இத்திட்டம், அகமதாபாத், டோலேரா எஸ்ஐஆர், விரைவில் அமையவுள்ள டோலேரா விமான நிலையம் மற்றும் லோத்தல் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் ஆகியவை இடையே விரைவான போக்குவரத்து இணைப்பை வழங்கும். அகமதாபாதை டோலேராவுடன் இணைப்பது மூலம் பயணிகளின் பயண நேரம் குறையும். இது வசதியான தினசரி பயணங்களுக்கும், ஒரே நாளில் சென்று திரும்பும் பயணங்களுக்கும் வழி வகுக்கும்.
இந்தப் புதிய ரயில்வழித்தடத்திற்கான பரிந்துரை நேரடி இணைப்பை வழங்குவதுடன் இந்திய ரயில்வேயின் செயல் திறனையும் சேவை நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும். அப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கும். இப்பிராந்தியத்தில் முழு வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை தற்சார்புடையவர்களாக மாற்றும்.
Today’s Cabinet decision on the Ahmedabad (Sarkhej) - Dholera Semi High-Speed Double Line project is a landmark in India’s rail modernisation journey. Built with indigenously developed technology, this first-of-its-kind project will boost connectivity, reduce travel time and…
— Narendra Modi (@narendramodi) May 13, 2026


