G20 Presidency belongs to the entire nation!
G20 Presidency presents an opportunity to showcase India to the world
There is global curiosity and attraction towards India

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் சம்பந்தமான விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்கு டிசம்பர் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.  

ஜி20 தலைமைத்துவம், ஒட்டுமொத்த நாட்டிற்கும் உரியது என்றும், உலகம் முழுவதுக்கும் இந்தியாவின் வலிமையை எடுத்துரைப்பதற்கான தனித்துவமான வாய்ப்பு இது என்றும் பிரதமர் கூறினார். இன்று இந்தியா மீது உலகளாவிய ஆர்வமும், ஈர்ப்பும் ஏற்பட்டுள்ளதாகவும், இது இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் திறனை மேலும் அதிகரிக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், ஜி20-இன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதில் சர்வதேச தலைவர்களின் ஒத்துழைப்பைக் கோரினார். வழக்கமான பெரிய பெருநகரங்களைக் கடந்து இந்தியாவின் சில பகுதிகளைக் காட்சிப்படுத்த ஜி20 தலைமைத்துவம் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இதனால் நமது நாட்டின் ஒவ்வொரு பகுதியின் தனித்துவமும் வெளிப்படுத்தப்படுகிறது என்று கூறினார்.

இந்தியாவின் ஜி20 தலைமையின் போது நம் நாட்டிற்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், ஜி20 கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் உள்ளூர் பொருளாதாரத்தையும், சுற்றுலாவையும் ஊக்குவிக்கும் சாத்திய கூறுகள் பற்றி விளக்கினார்.

பிரதமரின் உரைக்கு முன்பு, திரு மு. க. ஸ்டாலின், திரு எடப்பாடி கே. பழனிச்சாமி,  திரு ஜே.பி. நட்டா, திரு மல்லிகார்ஜுன் கார்கே, திருமிகு மம்தா பானர்ஜி, திரு நவீன் பட்நாயக், திரு அரவிந்த் கெஜ்ரிவால், திரு ஒய். எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, திரு சீதாராம் யெச்சூரி, திரு சந்திரபாபு நாயுடு, திரு பசுபதிநாத் பராஸ், திரு ஏக்நாத் ஷிண்டே மற்றும் திரு கே.எம் காதர் மொகிதீன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் குறித்த தங்களது மேலான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

உள்துறை மற்றும் நிதி அமைச்சர்களும் உரையாற்றினார்கள். இந்தியாவின் தலைமையிலான ஜி20 அமைப்பின் முன்னுரிமைகளை எடுத்துரைக்கும் விரிவான  விளக்கக் காட்சியும் இடம்பெற்றிருந்தது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் திரு ராஜ்நாத் சிங், திரு அமித் ஷா, திருமதி நிர்மலா சீதாராமன், டாக்டர் எஸ். ஜெயசங்கர், திரு பியூஷ் கோயல், திரு பிரல்ஹாத் ஜோஷி, திரு புபேந்தர் யாதவ் மற்றும் முன்னாள் பிரதமர் திரு ஹெச்.டி. தேவகவுடா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s forex reserves rise by $3.29 billion to $696.61 billion as of December 26, 2025

Media Coverage

India’s forex reserves rise by $3.29 billion to $696.61 billion as of December 26, 2025
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Pays Tribute to Rani Velu Nachiyar on Her Birth Anniversary
January 03, 2026

On the birth anniversary of Rani Velu Nachiyar, Prime Minister Shri Narendra Modi today paid heartfelt tributes to the legendary queen, remembered as one of India’s most valiant warriors who embodied courage and tactical mastery.

The Prime Minister noted that Rani Velu Nachiyar rose against colonial oppression and asserted the right of Indians to govern themselves. Her unwavering commitment to good governance and cultural pride continues to inspire the nation.

Shri Modi emphasized that her sacrifice and visionary leadership will keep motivating generations, serving as a beacon of courage and patriotism in India’s journey of progress.

PM in separate posts on X stated:
“Tributes to Rani Velu Nachiyar on her birth anniversary. She is remembered as one of India’s most valiant warriors who embodied courage and tactical mastery. She rose against colonial oppression and asserted the right of Indians govern themselves. Her commitment to good governance and cultural pride is also admirable. Her sacrifice and visionary leadership will keep motivating generations.”

“ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார். காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்.”