தேசியக் கவி ராம்தாரி சிங் தின்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். இந்திய இலக்கியம் மற்றும் தேசிய உணர்வுக்கு அவர் ஆற்றிய காலத்தால் அழியாத பங்களிப்புகளை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“தேசியக் கவி ராம்தாரி சிங் தின்கரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது கவிதைகள் பீகார் மக்களிடமும் நாடு முழுவதும் உள்ள மக்களிடமும் அற்புதமான தேசபக்தி உணர்வுகளை ஊட்டியுள்ளன. அவரது பல வரிகள் இன்னும் மக்களின் மனதில் பதிந்துள்ளன. வீரமும் மனிதநேயமும் நிறைந்த அவரது துடிப்பான மற்றும் காலத்தால் அழியாத படைப்புகள், ஒவ்வொரு தலைமுறையினரையும் பாரதத் தாய்க்கு சேவை செய்ய தொடர்ந்து ஊக்கமளிக்கும்."
राष्ट्रकवि रामधारी सिंह दिनकर जी को उनकी जयंती पर कोटि-कोटि नमन। उनकी कविताएं बिहार के साथ-साथ देशभर के लोगों में राष्ट्रभक्ति की अद्भुत भावनाएं भरती आई हैं। उनकी कई पंक्तियां आज भी जनमानस में रची-बसी हैं। वीरता और मानवता से ओतप्रोत उनकी ओजस्वी और कालजयी रचनाएं हर पीढ़ी को मां…
— Narendra Modi (@narendramodi) September 23, 2025


