13 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு

Published By : Admin | September 7, 2021 | 09:11 IST

2021 ஆண்டின் 13 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. அந்த வகையில், செப்டம்பர் 9, 2021 அன்று நடைபெறும் மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி மெய்நிகர் வழியாக தலைமையேற்று நடத்துகிறார்.

இந்த மாநாட்டில் பிரேசில் அதிபர் திரு ஜெயிர் போல்சொனாரோ, ரஷிய அதிபர் மேதகு விளாடிமிர் புதின், சீன அதிபர் மேதகு ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் மேதகு சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், திரு. அஜித் தோவல், புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் திரு. மார்கோஸ் ட்ராய்ஜோ, பிரிக்ஸ் வணிக கவுன்சிலின் சார்பு தலைவர் திரு. ஓங்கார் கன்வார், பிரிக்ஸ் மகளிர் வணிக கூட்டமைப்பின் சார்பு தலைவர் டாக்டர். சங்கீதா ரெட்டி ஆகியோர் உச்சிமாநாட்டின் போது பிரிக்ஸ் தலைவர்களிடம் அந்தந்த துறைகளின் கீழ் இந்த ஆண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முடிவுகள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிப்பர்.

‘பிரிக்ஸ்-15: ஒத்துழைப்பு தொடா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்த கருத்துக்கான ‘பிரிக்ஸ்’ நாடுகளிடையேயான ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளைக் கொண்டு இந்த ஆண்டிற்கான மாநாடு நடத்தப்படுகிறது. இந்தியா தனது தலைமையின் கீழ் நான்கு முக்கிய முன்னுரிமை பகுதிகளை கோடிட்டுக் காட்டியுள்ளது. அவை, பல தரப்பு நடைமுறையில் சீா்திருத்தம், பயங்கரவாதத்துக்கு எதிரான தீவிர நடவடிக்கை, நிலைத்த வளா்ச்சி இலக்குகளை எட்ட டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்களை விரிவுபடுத்துவது ஆகியவை ஆகும். இதைத்தவிர, கரோனா பாதிப்பு நிலவரம், தற்போதைய சா்வதேச பிரச்னைகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும், இந்த மாநாட்டில் தலைவா்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள உள்ளனா்.

‘பிரிக்ஸ்' உச்சி மாநாட்டுக்கு பிரதமர் திரு மோடி தலைமை தாங்குவது இது 2-வது முறையாகும். முன்னதாக 2016-ம் ஆண்டு கோவாவில் நடந்த மாநாட்டுக்கு அவர் தலைமை தாங்கினார். இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்கி நடத்திவரும் உச்சி மாநாடு, பிரிக்ஸின் பதினைந்தாவது ஆண்டு விழாவுடன் ஒத்துப்போகிறது. அது இந்த ஆண்டின் கருப்பொருளிலும் காணப்படுகிறது.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s healthcare sector seeing a fundamental digital transformation: Report

Media Coverage

India’s healthcare sector seeing a fundamental digital transformation: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 11 பிப்ரவரி 2026
February 11, 2026

Empowering India: PM Modi's Policies Fueling Innovation, Jobs, and Sustainability