மக்களவையில் இன்று உள்துறை அமைச்சரால் நிகழ்த்தப்பட்ட சிறப்பான உரைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்
உள்துறை அமைச்சர் தமது உரையில், இந்தியத் தேர்தல் நடைமுறையின் பன்முகப்பட்ட அம்சங்களையும், நாட்டின் நீடித்த ஜனநாயக வலிமையையும் சுட்டிக்காட்டும் உறுதியான உண்மைகளை முன்வைத்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவால் நிகழ்த்தப்பட்ட மிகச் சிறப்பான உரை. உறுதியான உண்மைகளுடன், தேர்தல் நடைமுறையின் பன்முக அம்சங்களையும், நமது ஜனநாயக வலிமையையும் எடுத்துரைத்த அவர், எதிர்க்கட்சியினரின் பொய்களையும் அம்பலப்படுத்தினார்.”
An outstanding speech by Home Minister Shri Amit Shah Ji. With concrete facts, he has highlighted diverse aspects of our electoral process, the strength of our democracy and also exposed the lies of the Opposition. https://t.co/oRI21Eij8H
— Narendra Modi (@narendramodi) December 10, 2025


