பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சிறப்பு தகவல் இதுவாகும். ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலாங்கில் பாராகிளைடிங்கிற்கு நரேந்திர மோடி சென்ற இரண்டு தசாப்தங்கள் பழமையான நிகழ்வு இதுவாகும். சோலாங்கின் சரிவான பகுதிகளில் நரேந்திர மோடி காட்டிய அலாதியான தைரியத்தை பாராகிளைடிங் பயிற்சியாளர் ரோஷன் தாக்கூர் நினைவு கூர்ந்தார்.
“மோடி அவர்கள் பாராகிளைடிங்கிற்கு செல்ல விரும்பினார். ஆனால் மழையின் காரணமாக நாங்கள் அந்த நேரத்தில் பாராகிளைடிங்கை நிறுத்திவிட்டோம். ஆனால் மோடி அவர்கள் அதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரால் அதை செய்ய முடியுமா இல்லையா என்று நான் சற்று பதட்டமாக இருந்தேன். எனவே, எனது முழு குழுவையும் பாராகிளைடர்களுடன் அனுப்பினேன். ஆனால் மோடி அவர்கள் எந்த பயமோ தயக்கமோ இல்லாமல் அதைச் செய்தது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரது சாகசப் பக்கத்தைப் பார்த்து நான் ஈர்க்கப்பட்டேன்,” என்று ரோஷன் கூறினர்.
பிரதமர் மோடியின் இந்த சாகசப் பக்கமே சவால்களை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு அவற்றைச் சமாளிக்க அவரைத் தூண்டியது என்று ரோஷன் மேலும் கூறினார்.
A #ModiStory unlike any other!
— Modi Story (@themodistory) April 24, 2022
Roshan Thakur is a paragliding coach from Manali. He reminisces Modi’s paragliding flights from the slopes of Solang, Himachal Pradesh 2 decades ago! https://t.co/EdWZ1iScoN
Follow: @themodistory pic.twitter.com/A9kxHkBGL9
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மக்களின் வாழ்வில் அவர் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய மக்களின் நினைவுகள்/கருத்து/பகுப்பாய்வு ஆகியவற்றை சேகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது உள்ளது.