“இந்த இணையவழிக் கருத்தரங்குகள் பட்ஜெட்டின் போது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் ஊக்க சக்தியாக செயல்படும்”
“சுற்றுலாத் துறையில் புதிய உயரங்களை எட்ட முன்னோக்கிய சிந்தனைகளுடன் யோசித்து திட்டமிட வேண்டும்”
“சுற்றுலா என்பது பணக்காரர்கள் தொடர்பான உயர் ஆடம்பர வார்த்தை அல்ல”
“சுற்றுலாத் தலங்களின் முழுமையான மேம்பாட்டுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது”
“வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் காசி விஸ்வநாதர் ஆலயம், கேதார்தாம், பாவகத் ஆகிய இடங்களுக்கு பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது”
“ஒவ்வொரு சுற்றுலாத் தலமும் தனது சொந்த வருவாய் ஆதாரங்களை உருவாக்க முடியும்”
“உள்கட்டமைப்பு மேம்பாடுகள் காரணமாக நமது கிராமங்கள் சுற்றுலா மையங்களாக மாறி வருகின்றன”
“கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 2 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு 8 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர்”
“அதிகம் செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்தியா ஏராளமான சலுகைகளை வழங்குகிறது”
“வேளாண்மை, ரியல் எஸ்டேட் மேம்பாடு, உள்கட்டமைப்பு, ஜவுளி போன்ற துறைகளைப் போலவே சுற்றுலாத் துறையும் அதே அளவு ஆற்றல் கொண்டது”

வணக்கம்,

இன்றைய புதிய இந்தியா புதிய வேலை முறையுடன் முன்னேறி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளதுடன்நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். பழைய வேலை முறை தொடர்ந்திருந்தால்இதுபோன்ற பட்ஜெட்டை யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இன்று நாட்டின் சுற்றுலாத் துறையின் மாற்றத்திற்காக இந்த  இணையவழிக் கருத்தரங்கை நடத்துகிறோம்.

நண்பர்களே,

சுற்றுலாவைப் பற்றி நாம் பேசும்போது​​சிலர் இது ஒரு ஆடம்பரமான வார்த்தை என்றும் அது சமூகத்தின் உயர் வருமானம் உள்ளவர்களை மட்டுமே குறிக்கும் என்றும் நினைக்கின்றனர். ஆனால் நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக யாத்திரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் மேம்படும்போது பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் தாம் புனரமைக்கப்படுவதற்கு முன்பு ஆண்டுதோறும் சுமார் 70-80 லட்சம் மக்கள் வந்து செல்வார்கள். ஆனால்புனரமைக்கப்பட்ட பிறகுகடந்த ஆண்டு வாரணாசிக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டியது. உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமைச் சிலை கட்டப்பட்ட ஓராண்டுக்குள் சுமார் 27 லட்சம் பேர் அதனைப் பார்வையிட்டுள்ளனர்.

நண்பர்களே,

உலக அளவில் இந்தியா மீதான ஈர்ப்பு அதிகரித்து வருவதால்இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் இரண்டு லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இந்தியாவுக்கு வந்தனர். இந்த ஆண்டு ஜனவரியில் எட்டு லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

நண்பர்களே,

நம் நாட்டில் தொழில்முறை சுற்றுலா வழிகாட்டிகள் இல்லை. வழிகாட்டிகளுக்கு உள்ளூர் கல்லூரிகளில் சான்றிதழ் படிப்பு இருக்க வேண்டும்.இதனால்திறமையான இளைஞர்கள் இந்தத் தொழிலிலுக்கு முன்வருவார்கள்.

அதேபோலஇப்போதெல்லாம்திருமணங்களும் முக்கிய வணிகமாகிவிட்டன. குஜராத் மக்கள் தமிழ்நாட்டை திருமணத் தலமாக கருதிதமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தும் சூழலை நாம் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருந்தால்அவர்கள் ஒரு திருமணத்தை அசாமிய பாரம்பரியத்திலும்மற்றொன்றை பஞ்சாபி பாரம்பரியத்திலும் நடத்த முடிவு செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட சுற்றுலாத் தலத்தைப் பற்றி ஐநா மற்றும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஆப்ஸ் (செயலி) இருக்க வேண்டும்

விவசாயம்ரியல் எஸ்டேட்உள்கட்டமைப்பு மற்றும் ஜவுளித் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருப்பதைப் போன்று சுற்றுலாத் துறையிலும் பெரிய வாய்ப்புகள் உள்ளன. இன்றைய கலந்துரையாடலில் நீங்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.

இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian economy navigated well external uncertainties: RBI Bulletin

Media Coverage

Indian economy navigated well external uncertainties: RBI Bulletin
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 23, 2026
July 23, 2026

Digital Rails, PLI Jobs & Swift Justice: How PM Modi’s Governance is Rewiring India’s Future