பிரதமர்: நண்பர்களே, வருக! நாட்டை உற்சாகத்தாலும், கொண்டாட்டத்தாலும் நீங்கள் எவ்வாறு நிரப்பியிருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கும்போது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். நமது நாட்டு மக்கள் அனைவரின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் நீங்கள் விஞ்சிவிட்டீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! வழக்கமாக இரவு நேரத்தில் நான்  அலுவலகத்தில்  வெகுநேரம் பணியாற்றுகிறேன். ஆனால் இந்த நேரத்தில் தொலைக்காட்சி இயங்கிக்கொண்டிருந்தது. எனது கோப்புகளில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. நீங்கள் குறிப்பிடத்தக்க அணி உணர்வையும், திறமையையும், பொறுமையையும் வெளிப்படுத்தினீர்கள். நீங்கள் மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்களாக இருந்தீர்கள். எனவே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

ராகுல் டிராவிட்: முதலில், உங்களை சந்திக்க எங்களுக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நவம்பரில் அகமதாபாதில் நடந்த போட்டியில் நாங்கள் தோற்றபோது, அந்த கடினமான காலங்களில் கூட நீங்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வந்தீர்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இன்று உங்களை சந்திப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ரோஹித்தும், மற்ற வீரர்களும் பல போட்டிகளில் மிகப்பெரிய போராட்ட உணர்வையும், ஒருபோதும் மறையாத அணுகுமுறையையும் வெளிப்படுத்தியுள்ளனர். இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அவர்களின் கடின உழைப்புக்கும், நெகிழ்ச்சிக்கும் சான்றாகும். இவர்கள் இளைய தலைமுறையினரை எவ்வாறு ஊக்குவித்துள்ளனர் என்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் 2011-ம் ஆண்டு வெற்றியைப் பார்த்து வளர்ந்தவர்கள், அவர்களின் செயல்திறன் நம் நாட்டில் உள்ள பல இளைஞர்களுக்கு அனைத்து விளையாட்டுகளிலும் உத்வேகம் அளித்துள்ளது என்று நான் நம்புகிறேன். எனவே, நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

பிரதமர்: உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் காலங்களில் நம் நாட்டின் இளைஞர்களுக்கு வழங்க உங்களிடம் நிறைய உள்ளது. நீங்கள் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் அவர்களுக்கு பல வழிகளில் ஊக்கமளிக்கவும், வழிகாட்டவும் முடியும்.

ரோஹித், இந்தத் தருணத்தில் உங்கள் எண்ணங்களை அறிய விரும்புகிறேன். மைதானம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், மண் வேறு தேசமாக இருக்கலாம், ஆனால் கிரிக்கெட்டின் சாராம்சம் ஆடுகளத்தில் உள்ளது.

ரோஹித் சர்மா: அந்த ஆடுகளம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் அங்குதான் நாங்கள் எங்கள் கனவுகளை நிறைவேற்றினோம். முழு அணியும் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்தது, அந்த கடின உழைப்பு இறுதியாக அந்த நாளில் பலனளித்தது.

பிரதமர்: ரோஹித், நீங்கள் கோப்பையை எடுக்கச் சென்றபோது சம்பந்தப்பட்ட உணர்ச்சிகளையும் நடனமாடிய விதத்தையும் என்னால் பார்க்க முடிந்தது.

ரோஹித் சர்மா: ஐயா, எங்கள் அனைவருக்கும் இது ஒரு முக்கியமான தருணம் என்பதே அதற்குக் காரணம். இதற்காக நாங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக காத்திருந்தோம். வெறுமனே நடந்து செல்ல வேண்டாம், வித்தியாசமாக ஏதாவது செய்யுங்கள் என்று அணியினர் என்னிடம் சொன்னார்கள்.

பிரதமர்: எனவே, இது சாஹலின் யோசனையா?

ரோஹித் சர்மா: சாஹல் மற்றும் குல்தீப்...

ரிஷப் பண்ட்: முதலில், எங்களை இங்கு அழைத்ததற்கு நன்றி. இதன் பின்னணியில் உள்ள சிந்தனை என்னவென்றால், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது, நான் ஒரு கடினமான நேரத்தை கடந்து கொண்டிருந்தேன். நான் குணமடைந்தபோது, மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படுவேனா என்று உறுதியாக தெரியவில்லைஆனால் நானே. நான் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவும், இந்தியாவுக்கு வெற்றிகளைக் கொண்டு வரவும் என்னை அர்ப்பணிக்க வேண்டியிருந்தது.

பிரதமர்: ரிஷப் அவர்களே, நீங்கள் குணமடைந்து கொண்டிருந்தபோது, நான் உங்கள் தாயிடம் பேசினேன், அவரிடம் இரண்டு விஷயங்களைச் சொன்னேன். முதலில் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி, உங்களுக்கு வெளிநாட்டில் சிகிச்சை தேவைப்பட்டால் தெரிவிக்குமாறு கேட்டேன். அதை பரிசீலிப்பதாக அவர்கள் எனக்கு உறுதியளித்தனர். அத்தகைய ஆதரவான தாயுடன், நீங்கள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டீர்கள் என்று நான் உணர்ந்தேன். இந்த எண்ணம் அப்போது என் மனதில் தோன்றியது, அதை நீங்கள் சரி என்று நிரூபித்துள்ளீர்கள்.

 

ரிஷப்பண்ட்: நன்றி ஐயா.

பிரதமர்: ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, ஆனால் நீடித்த விடாமுயற்சி சரியான நேரத்தில் பலனளிக்கிறது. விராட், இந்த முறை உங்கள் பயணம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருந்ததா.

விராட் கோலி: முதலில், எங்களை இங்கு அழைத்ததற்கு மிக்க நன்றி. இந்த நாள் எப்போதும் என் நினைவில் நிலைத்திருக்கும். போட்டி முழுவதும், நான் விரும்பிய அளவுக்கு என்னால் பங்களிக்க முடியவில்லை, ஒரு கட்டத்தில், நான் எனக்கோ அல்லது அணிக்கோ நியாயம் செய்யவில்லை என்று உணர்ந்தேன் என்று ராகுலிடம் கூட கூறினேன். இருப்பினும், முதல் நான்கு பந்துகளில் மூன்று பவுண்டரிகளை அடித்த பிறகு, எனக்கு நம்பிக்கை அதிகரித்தது. ஒரு சவாலான காலத்திற்குப் பிறகு அணிக்கு இதுபோன்ற ஒரு முக்கியமான நாளில் என்னால் பங்களிக்க முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். முழு நாளும் நாங்கள் வென்ற விதமும் மறக்க முடியாததாக இருக்கும். அணியின் வெற்றிக்காக பாடுபடக்கூடிய ஒரு நிலையை அடைய என்னால் உதவ முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

பிரதமர்: எல்லோரும் அதை உணர்ந்தார்கள் விராட். உங்கள் மொத்த எண்ணிக்கை 75-ல் சிக்கிக்கொண்டது, பின்னர் அது திடீரென்று 76 ஆக நகர்ந்தது. இந்த விஷயங்கள் சில நேரங்களில் நடக்கும். நீங்கள் அதைச் செய்வீர்கள் என்று எல்லோரும் நம்புகிறார்கள், அந்த நம்பிக்கை ஒரு உந்து சக்தியாக மாறும்.

விராட் கோலி: நல்ல விஷயம் ஐயா.

பிரதமர்: உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஹர்திக் பாண்டியா: முதலில், எங்களை அழைத்ததற்கு நன்றி. நான் மைதானத்திற்குச் சென்றபோது, பொதுமக்கள் சில நேரங்களில் கூச்சலிட்டனர், மேலும் பல விஷயங்கள் நடந்தன. நான் எப்போதும் எனது விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும், வார்த்தைகளால் அல்ல என்று நம்பினேன். அப்போதும் நான் பேச்சற்று இருந்தேன், இப்போதும் பேச முடியாமல் தவிக்கிறேன்.

பிரதமர்: உங்க அந்த ஓவர் சரித்திரமாக மாறியது, ஆனா சூர்யாகிட்ட என்ன சொன்னீங்க?

 

ஹர்திக் பாண்டியா: சூர்யா கேட்ச் பிடித்ததும், நாங்கள் முதலில் கொண்டாடினோம். அப்புறம் சூர்யா நலமாக இருக்கிறாரா என்று பரிசோதிக்கத் தோன்றியது. அவர் நலமாக இருப்பதை உறுதி செய்து மீண்டும் கொண்டாடினோம். ஆட்டத்தை மாற்றும் கேட்சை அவர் பிடித்தார், எங்கள் பதற்றம் மகிழ்ச்சியாக மாறியது.

பிரதமர்: ஆமாம் சூர்யா?

சூர்யகுமார் யாதவ்: ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஐயா! அந்த நேரத்தில், நான் பந்தைப் பிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.

பிரதமர்: இப்படிப் பந்தைப் பிடிக்க பயிற்சி செய்கிறீர்களா?

ராகுல் டிராவிட்: சூர்யா 185, 160 கேட்ச்களைப் பிடித்து பயிற்சி செய்துள்ளார்.

பிரதமர்: உண்மையாகவா?

சூர்யகுமார் யாதவ்: ஆமாம் ஐயா. ஐபிஎல் தொடரில் இருந்து திரும்பிய பிறகு, போட்டி தொடங்கியதில் இருந்து, இதுபோன்ற பல கேட்ச்களை பயிற்சி செய்துள்ளேன்.

பிரதமர்: உன்னை நான் பாராட்டியே ஆக வேண்டும்... ஏற்ற இறக்கங்களால் நாடே பதற்றத்தில் இருந்தது, பின்னர் திடீர் நிகழ்வுகள்! நிலைமை முற்றிலுமாக மாறியது. இது குறிப்பிடத்தக்கது, இது உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறினால், நீங்கள் உண்மையில் மிகவும் அதிர்ஷ்டசாலி, என் நண்பர்.

சூர்யகுமார் யாதவ்: இன்னொரு ஸ்டார் வாங்கியது போல் இருக்கிறது  ஐயா, நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

பிரதமர்: உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

சூர்யகுமார் யாதவ்: நன்றி ஐயா!

அர்ஷ்தீப் சிங்: ஐயா, தங்களை சந்திக்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. இந்தப் போட்டியை வென்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மற்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர், அதன் விளைவாக நான் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் நான் அதை ரசித்தேன். எனவே இதற்கான பெருமை ஒட்டுமொத்த அணிக்கே செல்கிறது என்று நான் நினைக்கிறேன்.

பிரதமர்: அக்சர் பள்ளியில் விளையாடியபோது, அவருக்கு ஒரு பரிசு கொடுக்கும் வாய்ப்பு எனக்கு ஒரு முறை கிடைத்தது.

அக்சர் படேல்: அது எட்டாம் வகுப்பு.

பிரதமர்: விளையாட்டு உலகத்துடன் எனக்கு தனிப்பட்ட தொடர்பு இல்லை, ஆனால் விளையாட்டில் ஏதேனும் குறிப்பிடத்தக்க நிகழ்வு நடக்கும்போதெல்லாம், நான் ஈடுபடுவதைக் காண்கிறேன்.

அக்சர் படேல்: குல்தீப் பந்து வீசும்போது, நான் நின்று கொண்டிருந்த திசையை நோக்கி காற்று வீசியது. இது எளிதான கேட்ச் என்று நான் நினைத்தேன், ஆனால் பந்து காற்றுடன் வேகமாக நகரத் தொடங்கியது. ஆரம்பத்தில், நான் அதை என் இடது கையால் பிடிக்க திட்டமிட்டேன், ஆனால் பின்னர் அது என் வலது கைக்கு செல்கிறது என்பதை உணர்ந்தேன். நான் குதித்தேன், என் கையில் பந்தை உணர்ந்தபோது, நான் அதைப் பிடித்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். பெரும்பாலான நேரங்களில், இதுபோன்ற கேட்சுகள் தவறவிடப்படுகின்றன, ஆனால் உலகக் கோப்பையில் அந்த முக்கியமான தருணத்தில், அணிக்கு அது தேவைப்பட்டபோது அதைப் பெற நான் அதிர்ஷ்டசாலி.

பிரதமர்: அமுல் பால் வேலை செய்கிறது போலிருக்கிறதே? (சிரிப்பு)

குல்தீப் யாதவ்: மிக்க நன்றி ஐயா.

பிரதமர்: ரோஹித், நீங்கள் எப்போதும் ரொம்ப சீரியஸாக இருக்கிறீர்களா?

ரோஹித் சர்மா: ஐயா, உண்மையில், அணியினர் மட்டுமே அதைச் சொல்ல முடியும்.

பிரதமர்: அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்! இந்த முறை, பங்கேற்பாளர்கள் கூட அதிகமாக இருந்தனர், பல புதிய நாடுகள் சேர்ந்தன. ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு தனித்துவமான குணாதிசயம் உள்ளது. இந்தியாவின் கிரிக்கெட் பயணம் நம்பமுடியாத அளவிற்கு வெற்றிகரமாக உள்ளது, மேலும் இது மற்ற விளையாட்டுகளுக்கும் ஊக்கமளிக்கத் தொடங்கியுள்ளது. நம்மையும் நாட்டையும் முன்னேற்ற வேண்டுமானால், உலகெங்கும் நமது கொடியின் பெருமையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, அனைத்து விளையாட்டுகளிலும் ஒரே உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று நாடு முழுவதிலும் சிறிய கிராமங்களிலிருந்து, இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து திறமைசாலிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். முன்னதாக, திறமை பெரும்பாலும் பெரிய நகரங்கள் மற்றும் பெரிய கிளபுகளிலிருந்து வந்தது, ஆனால் இப்போது, உங்கள் குழு உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிறிய இடங்களிலிருந்து வந்தவர்கள். இது வெற்றியின் உண்மையான தாக்கம், அதன் விளைவுகள் நீண்ட காலம் நீடிக்கும். ஆப்கானிஸ்தான் அமைச்சரின் அறிக்கை மிகவும் சுவாரஸ்யமானது. தென்னாப்பிரிக்காவுடன் விளையாடும் வாய்ப்பு ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்தது. இது அவர்களுக்கு ஒரு வெற்றிகரமான பயணமாக இருந்தது, ஆனால் அவர்கள் இந்தியாவுக்கு பெருமை அளித்தனர். ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் முன்னேற்றத்திற்கு இந்தியாவை பாராட்டிய ஆப்கானிஸ்தான் அமைச்சர், இந்தியர்கள் தங்கள் வீரர்களை தயார் செய்தனர் என்று கூறினார்.

பிரதமர்: நீங்கள் அனைவரும் ராகுலை 20 வயது இளையவராக மாற்றியுள்ளீர்கள்.

ராகுல் டிராவிட்: இல்லை, இதற்கான பெருமை இந்த அணியினரையே சாரும். நான் ஒரு வீரனாகவும், பயிற்சியாளராகவும் இருந்துள்ளேன். எனவே, நாங்கள் அவர்களை மட்டுமே ஆதரிக்க முடியும் என்று நான் எப்போதும் கூறுகிறேன். இந்தத் தொடரில் நான் ஒரு ரன் கூட எடுக்கவில்லை, ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை, ஒரு கேட்ச் கூட பிடிக்கவில்லை. எங்களிடம் மற்ற பயிற்சியாளர்கள் உட்பட ஒரு முழு ஆதரவு ஊழியர்கள் குழு உள்ளது, அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். நாங்கள் அனைவரும் அணியை ஆதரிக்க மட்டுமே முடியும். அழுத்தமான சூழ்நிலைகளில், விராட், பும்ரா, ஹர்திக் அல்லது ரோஹித் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியிருக்கும்போது, நாங்கள் அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களுக்கு தேவையானதை மட்டுமே வழங்க முடியும். ஆனால் அவர்கள்தான் உண்மையில் களத்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள். இதற்கான பெருமை முழுக்க அவர்களையே சாரும். இதுபோன்ற ஓர் அற்புதமான அனுபவத்தை அவர்கள் எனக்கு வழங்கியதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக  இருக்கிறேன். இந்தப் போட்டியில் அணி உணர்வு சிறப்பாக இருந்தது. விளையாடிய பதினோரு வீரர்களில் கூட நான்கு வீரர்கள் வெளியே அமர்ந்திருந்தனர். முகமது சிராஜ் முதல் மூன்று போட்டிகளில் விளையாடினார், ஆனால் அமெரிக்காவில், நாங்கள் கூடுதல் வேகப்பந்து வீச்சாளருடன் விளையாடினோம். எனவே, அவர் இந்த தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார். எங்கள் அணியில் மூன்று வீரர்கள் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை: சஞ்சு, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால். விளையாடவில்லை என்றாலும், அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர், இருப்பினும், அவர்கள் ஒருபோதும் மனச்சோர்வை உணர்ந்ததில்லை. இது எங்களுக்கும் எங்கள் அணிக்கும் மிகவும் முக்கியமானது. எனவே, இந்த அணுகுமுறை எங்கள் அணிக்கு முக்கியமானது, அவர்களின் உணர்வை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.

பிரதமர்: ஒரு பயிற்சியாளராக, நீங்கள் முழு அணியின் மீதும் கவனம் செலுத்துகிறீர்கள் என்பதை நான் பாராட்டுகிறேன். களத்தில் காணாதவர்களும் கணிசமான பங்களிப்பை வழங்குகிறார்கள் என்பதை உங்கள் வார்த்தைகளைக் கேட்கும் எவரும் உணர்வார்கள். வெற்றிக்கு இத்தகைய வலுவான குழு உணர்வு அவசியம். ஆனால் ராகுல், 2028 அமெரிக்காவில் கிரிக்கெட்டை உள்ளடக்கிய ஒலிம்பிக் குறித்து உங்கள் எண்ணங்களை அறிய விரும்புகிறேன். உலகக் கோப்பையை விட ஒலிம்பிக் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்று நான் நம்புகிறேன். இந்திய அரசோ, கிரிக்கெட் வாரியமோ அல்லது தனிநபர்களாக நீங்களோ ஒலிம்பிக்கிற்குத் தயாராக வேண்டும் என்றால், உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்?

ராகுல் டிராவிட்: நிச்சயமாக, ஒலிம்பிக்கில் விளையாடுவது கிரிக்கெட் வீரர்களுக்கு பாரம்பரியமாக கிடைத்த வாய்ப்பு அல்ல, ஏனெனில் கிரிக்கெட் 2028-ல் முதல் முறையாக ஒலிம்பிக்கில் சேர்க்கப்படும். இது நாட்டிற்கும், கிரிக்கெட் வாரியத்திற்கும், வீரர்களுக்கும் ஒரு பெருமித நிகழ்வாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். நீங்கள் முன்பு குறிப்பிட்டது போல், பல சிறந்த விளையாட்டு வீரர்கள் நம் நாட்டிற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் மற்ற விளையாட்டுகளுடன் இணைந்து நிற்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஒலிம்பிக் அத்தகைய மதிப்புமிக்க நிகழ்வாகும், மேலும் கிரிக்கெட்டை உள்ளடக்கியிருப்பது விளையாட்டுக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயம். அந்த நேரத்தில் வாரியத்தில் யார் இருந்தாலும், எங்கள் போட்டிக்கு முழுமையான தயாரிப்புகளை செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். ரோஹித், விராட் போன்ற இளம் வீரர்கள் உட்பட இந்த அணியின் பல வீரர்கள் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன்.

பிரதமர்: ஆம், 2028-ல் பல புதிய முகங்கள் இருப்பார்கள்!

ராகுல் டிராவிட்: உண்மையில், 2028 வாக்கில், பல புதிய வீரர்களைக் காண்போம். எங்கள் அணி கடினமாக உழைத்து, தங்கத்தை இலக்காகக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன், இது அளவற்ற மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தரும்.

 

பிரதமர்: ஒரு வெற்றிக்குப் பின் ஆனந்தக் கண்ணீரைப் பார்க்கும்போது, தோல்வியின் தருணங்கள் எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதை ஒருவர் உணர முடிகிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இழப்பின் அந்த தருணங்களில் ஒரு வீரர் தாங்கும் வலியை மக்களால் பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியாது, இவ்வளவு தூரம் வந்து, பின்னர் வீழ்ச்சியடைந்தார். தோல்வியின் ஊடான பயணம் எவ்வளவு கடினமானதாக இருந்திருக்க வேண்டும் என்பதை வெற்றியின் மகிழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இதையெல்லாம் நான் நேரில் பார்த்தேன், நீங்கள் இதிலிருந்து மீண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. இன்று நீங்கள் உண்மையாகவே அதைச் செய்திருக்கிறீர்கள் என்று நான் காண்கிறேன். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India leads globally in renewable energy; records highest-ever 31.25 GW non-fossil addition in FY 25-26: Pralhad Joshi.

Media Coverage

India leads globally in renewable energy; records highest-ever 31.25 GW non-fossil addition in FY 25-26: Pralhad Joshi.
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister expresses joy on the commencement of 20th Session of UNESCO’s Committee on Intangible Cultural Heritage in India
December 08, 2025

The Prime Minister has expressed immense joy on the commencement of the 20th Session of the Committee on Intangible Cultural Heritage of UNESCO in India. He said that the forum has brought together delegates from over 150 nations with a shared vision to protect and popularise living traditions across the world.

The Prime Minister stated that India is glad to host this important gathering, especially at the historic Red Fort. He added that the occasion reflects India’s commitment to harnessing the power of culture to connect societies and generations.

The Prime Minister wrote on X;

“It is a matter of immense joy that the 20th Session of UNESCO’s Committee on Intangible Cultural Heritage has commenced in India. This forum has brought together delegates from over 150 nations with a vision to protect and popularise our shared living traditions. India is glad to host this gathering, and that too at the Red Fort. It also reflects our commitment to harnessing the power of culture to connect societies and generations.

@UNESCO”