கடந்த பத்து ஆண்டுகளில் வாரணாசியின் வளர்ச்சி புதிய உத்வேகத்தை பெற்றுள்ளது: பிரதமர்
பெண்கள் நலனுக்கும், அதிகாரமளித்தலுக்கும் அவர்களின் தன்னம்பிக்கைக்கும், சமூகத்தின் நலனுக்கும் மகாத்மா ஜோதிபா பூலேயும், சாவித்ரிபாய் பூலேயும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பணியாற்றினார்கள் : பிரதமர்
காசியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் செல்வாக்கையும், வாழ்க்கை நிலையையும் பனாரஸ் பால்பண்ணை மாற்றியமைத்துள்ளது
காசி தற்போது சிறப்பான ஆரோக்கியத்தின் தலைநகராக மாறிவருகிறது : பிரதமர்
காசிக்கு இன்று யார் சென்றாலும் அதன் உள்கட்டமைப்பையும்வசதிகளையும் பாராட்டுகிறார்கள் : பிரதமர்
இந்தியா இன்று வளர்ச்சியையும், பாரம்பரியத்தையும் இணைத்து முன்னோக்கி எடுத்துச் செல்கிறது, நமது காசி இதற்கு சிறந்த உதாரணமாக மாறிவருகிறது: பிரதமர்
உத்தரப்பிரதேசம் இனிமேல் வெறுமனே சாத்தியங்களின் நிலமாக இல்லாமல் போட்டித்தகுதி மற்றும் சாதனைகளின் நிலமாக இருக்கும் : பிரதமர்

நம பார்வதி பதயே, ஹர-ஹர மஹாதேவ்!

 

மேடையில் அமர்ந்துள்ள உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக்; மதிப்பிற்குரிய அமைச்சர்களே வணக்கம். தங்கள் ஆசீர்வாதங்களை வழங்க இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் எனது அன்பான குடும்ப உறுப்பினர்களான நமது காசி குடும்பத்தின் அன்புக்குரிய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் ஆசீர்வாதங்களை நான் தாழ்மையுடன் கோருகிறேன். இந்த அபரிமிதமான அன்புக்கு நான் உண்மையிலேயே கடன்பட்டிருக்கிறேன். காசி என்னுடையது, நான் காசியைச் சேர்ந்தவன்.

 

நண்பர்களே,

 

நாளை புனித தருணமான ஹனுமான் ஜன்மோத்சவமாகும்.இன்று சங்கத் மோச்சன் மகராஜுக்கு பெயர் பெற்ற புனித நகரமான காசியில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. ஹனுமான் ஜன்மோத்சவத்தை முன்னிட்டு, வளர்ச்சி உணர்வைக் கொண்டாட காசி மக்கள் இங்கு கூடியுள்ளனர்.

 

நண்பர்களே,

கடந்த பத்தாண்டுகளில் வாரணாசியின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வேகத்தைக் கண்டுள்ளது. காசி தனது வளமான பாரம்பரியத்தைப் பாதுகாத்து, பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையான அடிகளை எடுத்து வைக்கும் அதே வேளையில், நவீனத்தையும் அழகாக ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று காசி பழமையின் சின்னமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாகவும் திகழ்கிறது. இது இப்போது பூர்வாஞ்சலின் பொருளாதார வரைபடத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் பகவான் மகாதேவரால் வழிநடத்தப்பட்ட அதே காசி - இன்று, பூர்வாஞ்சல் பிராந்தியம் முழுவதற்கும் வளர்ச்சி என்ற ரதத்தை இயக்குகிறது!

 

நண்பர்களே,

 

சிறிது நேரத்திற்கு முன்பு, காசி மற்றும் பூர்வாஞ்சலின் பல்வேறு பகுதிகள் தொடர்பான எண்ணற்ற திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல உள்கட்டமைப்பு திட்டங்கள், ஒவ்வொரு கிராமத்திற்கும், வீட்டிற்கும் குழாய்வழிக் குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதற்கான பிரச்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் ஒவ்வொரு பிராந்தியம், ஒவ்வொரு குடும்பம் மற்றும் ஒவ்வொரு இளைஞருக்கும் வசதிகளை மேம்படுத்துவதற்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவை இதில் அடங்கும். இந்த முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் ஒவ்வொன்றும் பூர்வாஞ்சலை வளர்ச்சியடைந்த பிராந்தியமாக மாற்றுவதற்கான பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கற்களாக செயல்படும். காசியில் உள்ள ஒவ்வொருவரும் இந்த முயற்சிகளால் பெரிதும் பயனடைவார்கள். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக வாரணாசி மற்றும் பூர்வாஞ்சல் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

 

சமூக விழிப்புணர்வின் போற்றுதலுக்குரிய சின்னமான மகாத்மா ஜோதிபா பூலேவின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே ஆகியோர் பெண்களின் நலன், அவர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தனர். இன்று, நாம் அவர்களின் பாரம்பரியத்தைத் தொடர்கிறோம் - அவர்களின் பார்வை, அவர்களின் பணி மற்றும் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான அவர்களின் இயக்கம் - புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடனும் நோக்கத்துடனும் தொடர்கிறது.

 

நண்பர்களே,

 

இன்னுமொரு விஷயத்தை நான் இன்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மகாத்மா பூலே போன்ற மகத்தான ஆத்மாக்களால் ஈர்க்கப்பட்டு, தேசத்திற்கு சேவை செய்வதில் எங்களது வழிகாட்டும் கொள்கை என்பது அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்பதாகும். இந்த உள்ளடக்கிய உணர்வுடன் நாங்கள் தேசத்திற்காக பணியாற்றுகிறோம். இதற்கு நேர்மாறாக, அதிகாரத்திற்காக மட்டுமே அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் வேறு ஒரு மந்திரத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்: குடும்பத்துடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்பதன் உண்மையான சாராம்சத்தை உள்ளடக்கிய பூர்வாஞ்சலின் கால்நடை வளர்ப்பு குடும்பங்களை, குறிப்பாக கடின உழைப்பாளி சகோதரிகளை இன்று நான் பாராட்ட விரும்புகிறேன். தங்கள் மீது நம்பிக்கை வைக்கும்போது, அந்த நம்பிக்கை வரலாறு படைக்க வழிவகுக்கும் என்பதை இந்தப் பெண்கள் நிரூபித்துள்ளனர். அவர்கள் இப்போது பூர்வாஞ்சல் முழுமைக்கும் ஒரு பிரகாசமான உதாரணமாக மாறியுள்ளனர். சிறிது நேரத்திற்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாஸ் பால் பண்ணை ஆலையுடன் தொடர்புடைய அனைத்து கால்நடை வளர்ப்பு பங்குதாரர்களுக்கும் போனஸ் தொகை வழங்கப்பட்டது. இது வெறும் போனஸ் மட்டும் அல்ல; இது உங்கள் அர்ப்பணிப்புக்கான சரியான வெகுமதி.  ரூ.100 கோடிக்கும் அதிகமான இந்த போனஸ் உங்கள் கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு மரியாதையாகும்.

 

நண்பர்களே,

 

காசியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் தோற்றத்தையும், எதிர்காலத்தையும் பனாஸ் பால்பண்ணை மாற்றியமைத்துள்ளது. இந்தப் பால் பண்ணை உங்கள் கடின உழைப்பை  தகுதியான வெகுமதிகளாக மாற்றியுள்ளது. உங்கள் விருப்பங்களுக்கு சிறகுகளை வழங்கியுள்ளது. குறிப்பாக மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த முயற்சிகள் மூலம், பூர்வாஞ்சலைச் சேர்ந்த பல பெண்கள் இப்போது லட்சாதிபதி சகோதரிகளாக மாறியிருக்கிறார்கள். ஒரு காலத்தில் உயிர்வாழ்வதைப் பற்றிய கவலை இருந்தது, இன்று செழிப்பை நோக்கி ஒரு நிலையான பயணம் உள்ளது. வாரணாசி, உத்தரப்பிரதேசத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதிலும் இந்த முன்னேற்றம் காணப்படுகிறது. இன்று, பாரதம் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் நாடாக திகழ்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில், பால் உற்பத்தி சுமார் 65% அதிகரித்துள்ளது - இது இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். இந்தச் சாதனை உங்களைப் போன்ற கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு – கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள எனது சகோதர சகோதரிகளுக்குச் சொந்தமானதாகும். அத்தகைய வெற்றி ஒரே இரவில் வந்துவிடவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக நமது நாட்டின் பால்பண்ணைத் துறையை இயக்கம் சார்ந்த வகையில் முன்னெடுத்து வருகிறோம்.

 

கால்நடை வளர்ப்போருக்கு உழவர் கடன் அட்டை வசதியை கொண்டு வந்துள்ளோம், அவர்களின் கடன் வரம்பை அதிகரித்துள்ளோம், மானியங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இருப்பினும், மிக முக்கியமான ஒரு முயற்சி நமது விலங்குகள் மீதான இரக்கம். கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து பாதுகாக்க இலவச தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலவச கோவிட் தடுப்பூசியை அனைவரும் நினைவில் வைத்திருக்கும் அதே வேளையில், அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற மந்திரத்தின் கீழ், நமது விலங்குகளுக்குகூட இலவச தடுப்பூசிகளை உறுதி செய்யும் அரசாக இது உள்ளது.

 

ஒழுங்கமைக்கப்பட்ட பால் சேகரிப்பை முறைப்படுத்த நாடு முழுவதும் 20,000 க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் புத்துயிர் பெற்றுள்ளன. இச்சங்கங்களில் லட்சக்கணக்கான புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பால்வளத் துறையுடன் தொடர்புடையவர்களை ஒன்றிணைத்து வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்வதே இதன் நோக்கமாகும். நாட்டு மாடுகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நாட்டு மாடுகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. விஞ்ஞான முறை இனப்பெருக்க முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ராஷ்டிரிய கோகுல் மிஷன் தற்போது நடந்து வருகிறது.

 

இந்த அனைத்து முன்முயற்சிகளின் அடித்தளம், நமது கால்நடை வளர்ப்பு சகோதர சகோதரிகள், வளர்ச்சிக்கான ஒரு புதிய பாதையை ஏற்றுக்கொள்ள உதவுவதாகும். நம்பிக்கைக்குரிய சந்தைகள் மற்றும் வாய்ப்புகளுடன் இணைவதாகும். இன்று, பனாஸ் பால்பண்ணையின் காசி வளாகம் பூர்வாஞ்சல் முழுவதும் இந்தத் தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்கிறது. பனாஸ் பால்பண்ணை நிறுவனம் இப்பகுதியில் கிர் பசுக்களையும் விநியோகித்துள்ளது, அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், பனாஸ் பால்பண்ணை நிறுவனம் வாரணாசியில் கால்நடைகளுக்கான தீவன முறையை அறிமுகப் படுத்தியுள்ளது. தற்போது, இந்த பால் பண்ணை பூர்வாஞ்சலில் உள்ள கிட்டத்தட்ட ஒரு லட்சம் விவசாயிகளிடமிருந்து பால் சேகரிக்கிறது, இதன் மூலம் விவசாய சமூகத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

 

நண்பர்களே,

 

சிறிது நேரத்திற்கு முன்பு, இங்குள்ள பல வயதான நண்பர்களுக்கு ஆயுஷ்மான் வய வந்தனா அட்டைகளை விநியோகிக்கும் கௌரவம் எனக்கு கிடைத்தது. அவர்கள் முகத்தில் நான் கண்ட திருப்தி, என்னைப் பொறுத்தவரை, இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அடையாளமாகும். மருத்துவ சிகிச்சை குறித்து நம் முதியவர்கள் எதிர்கொள்ளும் கவலைகளை நாம் அனைவரும் அறிவோம். பத்தாண்டுகளுக்கு முன்பு சுகாதாரப் பராமரிப்பைப் பொறுத்தவரை இந்தப் பிராந்தியமும், பூர்வாஞ்சலும் எதிர்கொண்ட சவால்களை நாங்கள் நன்கு அறிவோம். இன்று நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. எனது காசி வேகமாக சுகாதார தலைநகராக மாறி வருகிறது. ஒரு காலத்தில் தில்லி மற்றும் மும்பைக்கு மட்டுமே என்றிருந்த பெரிய மருத்துவமனைகள் இப்போது உங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ளன. அத்தியாவசிய சேவைகளும், வசதிகளும் மக்களைச் சென்றடையும் போது அதுதான் உண்மையான வளர்ச்சியாக இருக்கும்.

 

நண்பர்களே,

 

கடந்த பத்து ஆண்டுகளில், நாங்கள் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகரிக்கவில்லை, நோயாளிகளின் கண்ணியத்தையும் உயர்த்தியுள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டம் எனது ஏழை சகோதர சகோதரிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்தத் திட்டம் மருத்துவ சிகிச்சையை வழங்குவதை விடவும் அதிகமாகச் செயல்படுகிறது - இது கவனிப்புடன் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. உத்தரப்பிரதேசத்தில் லட்சக்கணக்கான மக்களும், வாரணாசியில் மட்டும் ஆயிரக்கணக்கானோரும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். ஒவ்வொரு சிகிச்சை நடைமுறையும், ஒவ்வொரு அறுவை சிகிச்சையும், நிவாரணத்தின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறித்துள்ளது. ஆயுஷ்மான் திட்டம் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது - ஏனென்றால் "உங்கள் சுகாதாரம் இப்போது எங்கள் பொறுப்பு" என்று அரசு அறிவித்துள்ளது.

 

நண்பர்களே,

 

நீங்கள் மூன்றாவது முறையாக எங்களை ஆசீர்வதித்தபோது, நாங்களும் உங்கள் அன்பின் பணிவான சேவகர்களாக எங்கள் கடமையை மதித்தோம். எதையாவது திருப்பித் தர வேண்டும் என்று எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம். மூத்த குடிமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்பதே எனது உத்தரவாதம். அந்த உறுதிப்பாட்டின் விளைவாக ஆயுஷ்மான் வய வந்தனா திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் முதியோருக்கான மருத்துவ சிகிச்சை பற்றியது மட்டுமல்ல; இது அவர்களின் கௌரவத்தை மீட்டெடுப்பது பற்றியதுமாகும். இப்போது, ஒவ்வொரு வீட்டிலும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த மக்கள் தங்கள் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், இலவச சிகிச்சைக்கு உரிமை பெற்றுள்ளனர்.  வாரணாசியில் மட்டும், அதிக எண்ணிக்கையிலான வயவந்தனா அட்டைகள் - சுமார் 50,000 - முதியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது வெறும் புள்ளிவிவரம் அல்ல; இது ஒரு மக்கள் சேவகரின் நேர்மையான சேவை. இப்போது மருத்துவ வசதிக்காக நிலத்தை விற்க வேண்டிய அவசியம் இல்லை! இனி சிகிச்சைக்கு கடன் வாங்க வேண்டாம்! வீடு வீடாகச் சென்று சிகிச்சை பெற உதவி கேட்க வேண்டிய நிர்க்கதியான நிலை இனி இல்லை. மருத்துவ செலவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் - ஆயுஷ்மான் அட்டை மூலம், உங்கள் சிகிச்சைக்கான செலவை அரசே இப்போது ஏற்கும்!

 

நண்பர்களே,

 

இன்று காசியைக் கடந்து செல்லும் எவரும் அதன் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளைப் பற்றி உயர்வாகப் பேசுகிறார்கள். வாரணாசிக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் பாபா விஸ்வநாதரிடம் ஆசீர்வாதம் பெறவும், அன்னை கங்கையின் புனித நீரில் நீராடவும் வருகிறார்கள். ஒவ்வொரு பார்வையாளரும் பனாரஸ் எவ்வளவு மாறிவிட்டது என்று குறிப்பிடுகிறார்கள்.

சற்று கற்பனை செய்து பாருங்கள் - காசியின் சாலைகள், ரயில்வே, விமான நிலையம் ஆகியவற்றின் நிலை பத்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இருந்திருந்தால், நகரத்தின் இன்றைய நிலை என்னவாக இருந்திருக்கும்? முன்பெல்லாம் சின்னச் சின்ன திருவிழாக்கள் கூட போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும். உதாரணத்திற்கு சுனாரிலிருந்து ஷிவ்பூருக்கு பயணிக்கும் ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள் – முடிவில்லாத நெரிசல்களில் சிக்கி, புழுதியிலும் வெப்பத்திலும் மூச்சுத் திணறி பனாரஸைச் சுற்றி வர வேண்டியிருந்தது. இன்று, புல்வாரியா மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பாதையின் தூரம் இப்போது குறுகியதாகி விட்டது. நேரம் சேமிக்கப்படுகிறது, வாழ்க்கை மிகவும் வசதியாக உள்ளது! இதேபோல், ஜான்பூர் மற்றும் காசிப்பூரின் கிராமப்புறங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் ஒரு காலத்தில் வாரணாசி நகரத்தை கடந்து செல்ல வேண்டியிருந்தது. பல்லியா, மாவ் மற்றும் காசிப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் விமான நிலையத்தை அடைய நகரின் மையப்பகுதியைக் கடக்க வேண்டியிருந்தது, பெரும்பாலும் பல மணிநேரம் போக்குவரத்தில் சிக்கித் தவித்தனர். இப்போது, சுற்றுவட்டச் சாலை மூலம், மக்கள் சில நிமிடங்களில் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் பயணிக்க முடியும்.

 

நண்பர்களே,

 

முன்பு, காசிப்பூருக்கு பயணம் செய்ய பல மணி நேரம் ஆகும். இப்போது, காசிப்பூர், ஜான்பூர், மிர்சாபூர் மற்றும் அசாம்கர் போன்ற நகரங்களை இணைக்கும் சாலைகள் கணிசமாக அகலப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் போக்குவரத்து நெரிசல் இருந்தது, இன்று வளர்ச்சியின் வேகத்தை நாம் காண்கிறோம்! கடந்த பத்தாண்டுகளில், வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் இணைப்பை மேம்படுத்த சுமார் ரூ.45,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் வெறுமனே கான்கிரீட்டுக்காக செலவிடப்படவில்லை - அது அறக்கட்டளையாக மாற்றப்பட்டுள்ளது. இன்று, காசியின் ஒட்டுமொத்த பகுதியும் அதன் அண்டை மாவட்டங்களும் இந்த முதலீட்டின் பலன்களை அனுபவித்து வருகின்றன.

 

நண்பர்களே,

 

காசியின் உள்கட்டமைப்புக்கான இந்த முதலீடு இன்றும் தொடர்கிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நமது லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் வேகமாக முன்னேறி வருகின்றன. விமான நிலையம் வளரும்போது, அதை இணைக்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் சம அளவில் முக்கியமானதாகும். எனவே, விமான நிலையம் அருகே 6 வழிச்சாலை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இன்று, பதோஹி, காசிப்பூர் மற்றும் ஜான்பூர் தொடர்பான சாலைத் திட்டங்களுக்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. பிகாரிபூர் மற்றும் மண்டுவாடிஹ் ஆகிய இடங்களில் மேம்பாலங்களுக்கு நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. அந்த கோரிக்கை தற்போது நிறைவேறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வாரணாசி நகரத்தை சாரநாத்துடன் இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்படும். விமான நிலையம் அல்லது பிற மாவட்டங்களில் இருந்து சாரநாத்தை அடைய நகரம் வழியாக செல்ல வேண்டிய அவசியத்தை இது நீக்கும்.

 

நண்பர்களே,

 

வரும் மாதங்களில், இந்தத் திட்டங்கள் நிறைவடைந்தவுடன், வாரணாசியில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்க வகையில் எளிதாகிவிடும். பயண நேரம் குறையும், வணிக நடவடிக்கைகள் அதிகரிக்கும். மேலும், வாழ்வாதாரத்திற்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் வாரணாசிக்கு வருபவர்கள் அதிக வசதிகளை அனுபவிப்பார்கள். காசியில் நகர ரோப்வே சோதனையும் தொடங்கியுள்ளது. இதுபோன்ற வசதியை வழங்க உலகின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களுடன் பனாரஸ் இப்போது சேர உள்ளது.

 

நண்பர்களே,

 

வாரணாசியில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு வளர்ச்சி அல்லது உள்கட்டமைப்புத் திட்டமும் பூர்வாஞ்சலின் அனைத்து இளைஞர்களுக்கும் பயனளிக்கும். காசியின் இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதில் எங்கள் அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் இப்போது பணியாற்றி வருகிறோம். ஆனால், ஒலிம்பிக் பதக்கங்களை வீட்டிற்கு கொண்டு வர, காசியின் இளைஞர்கள் இப்போதே தங்களைதா தயார்படுத்திக் கொள்வதைத் தொடங்க வேண்டும். அதனால்தான் இன்று வாரணாசியில் புதிய விளையாட்டு அரங்கங்கள் கட்டப்பட்டு வருகின்றன, நமது இளம் திறமைசாலிகளுக்காக உலகத்தரம் வாய்ந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய விளையாட்டு வளாகம் தொடங்கப்பட்டுள்ளது. வாரணாசியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். நாடாளுமன்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் இதே துறையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.

 

நண்பர்களே,

 

இன்று, பாரதம் வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டையும் கைகோர்த்து முன்னெடுத்துச் செல்கிறது. இந்த சமநிலைக்கு மிகச்சிறந்த உதாரணமாக காசி உருவெடுத்து வருகிறது. இங்கே, புனித கங்கை பாய்கிறது, அதனுடன் இந்திய உணர்வின் நீரோட்டமும் பாய்கிறது. பாரதத்தின் ஆத்மா அதன் பன்முகத்தன்மையில் வாழ்கிறது. காசி அந்த ஆன்மாவின் மிகத் தெளிவான பிரதிபலிப்பாகும். காசியின் ஒவ்வொரு சுற்றுப்புறமும் ஒரு தனித்துவமான கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது, மேலும் ஒவ்வொரு தெருவும் பாரதத்தின் வெவ்வேறு நிறத்தை வெளிப்படுத்துகிறது. காசி-தமிழ்ச் சங்கமம் போன்ற முயற்சிகள் இந்த ஒற்றுமையை வலுப்படுத்துகின்றன என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது, ஒரு ஒற்றுமை வளாகமும் இங்கு நிறுவப்பட உள்ளது. இந்த வளாகம் பாரதத்தின் பன்முகத்தன்மையை கொண்டாடும். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களின் தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்தும்.

 

நண்பர்களே,

 

சமீபத்திய ஆண்டுகளில், உத்தரப்பிரதேசம் அதன் பொருளாதார நிலப்பரப்பையும் முன்னோக்கையும் மாற்றியுள்ளது. உ.பி. என்பது வெறுமனே சாத்தியக்கூறுகளின் நிலம் மட்டுமல்ல; இது இப்போது உறுதிப்பாடு, வலிமை மற்றும் சாதனைகள் நிறைந்த பூமியாக மாறி வருகிறது. இன்று, "இந்தியாவில் தயாரியுங்கள்"என்ற சொற்றொடர் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இப்போது சர்வதேச பிராண்டுகளாக உருவாகி வருகின்றன. பல உள்ளூர் தயாரிப்புகள் புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளன. புவிசார் குறியீடு என்பது வெறும் முத்திரை அல்ல; இது ஒரு பிராந்தியத்தின் தனித்துவமான அடையாளத்தின் சான்றிதழாகும். ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு ஒரு குறிப்பிட்ட நிலத்தில் வேரூன்றியுள்ளது என்பதை இது குறிக்கிறது. புவிசார் குறியீடு எங்கு பயணித்தாலும், அது உலகளாவிய சந்தைகளுக்கான நுழைவாயிலைத் திறக்கிறது.

 

நண்பர்களே,

 

இன்று, புவிசார் குறியீடு வழங்குவதில் உத்தரப்பிரதேசம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது! இது நமது கலை, நமது தயாரிப்புகள் மற்றும் நமது கைவினைத்திறன் ஆகியவற்றின் வளர்ந்து வரும் சர்வதேச அங்கீகாரத்தைப் பிரதிபலிக்கிறது. வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. வாரணாசியின் தபேலா மற்றும் ஷெனாய் முதல், அதன் சுவர் ஓவியங்கள், தண்டாய், சிவப்பு மிளகாய், சிவப்பு பேடா மற்றும் மூவர்ண பர்பி - ஒவ்வொன்றும் இப்போது புவிசார் குறியீடு மூலம் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளன. இன்றும், ஜான்பூரின் இமார்டி, மதுராவின் சஞ்சி கலை, புந்தேல்கண்டின் கதியா கோதுமை, பிலிபித்தின் புல்லாங்குழல், பிரயாக்ராஜின் முன்ஜ் கைவினை, பரேலியின் ஜர்தோசி, சித்ரகூட்டின் மர வேலைப்பாடு மற்றும் லக்கிம்பூர் கேரியின் தாரு ஜர்தோஸி போன்ற மாநிலம் முழுவதிலுமிருந்து வரும் பல தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. உ.பி.யின் மண்ணின் நறுமணம் இனி காற்றில் பரவுவதுடன் இப்போது எல்லைகளைக் கடக்கும் என்பதையும் இது குறிக்கிறது.

 

நண்பர்களே,

 

காசியைப் பாதுகாப்பவன் பாரதத்தின் ஆன்மாவைப் பாதுகாக்கிறான். காசிக்கு நாம் தொடர்ந்து அதிகாரம் அளிக்க வேண்டும். நாம் காசியை அழகாகவும், துடிப்பாகவும், கனவு போலவும் வைத்திருக்க வேண்டும். காசியின் பண்டைய உணர்வை அதன் நவீன வடிவத்துடன் நாம் தொடர்ந்து இணைக்க வேண்டும். இந்தத் தீர்மானத்துடன், உங்கள் கைகளை உயர்த்தி, மீண்டும் ஒரு முறை சொல்வதில் என்னுடன் சேருங்கள்:

 

நம பார்வதி பதயே, ஹர ஹர மஹாதேவ்.

 

மிகவும் நன்றி.

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
BSNL’s global tech tie-ups put Jabalpur at the heart of India’s 5G and AI future

Media Coverage

BSNL’s global tech tie-ups put Jabalpur at the heart of India’s 5G and AI future
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi congratulates people of Assam on establishment of IIM in the State
August 20, 2025

The Prime Minister, Shri Narendra Modi has congratulated the people of Assam on the establishment of an Indian Institute of Management (IIM) in the State.

Shri Modi said that the establishment of the IIM will enhance education infrastructure and draw students as well as researchers from all over India.

Responding to the X post of Union Minister of Education, Shri Dharmendra Pradhan about establishment of the IIM in Assam, Shri Modi said;

“Congratulations to the people of Assam! The establishment of an IIM in the state will enhance education infrastructure and draw students as well as researchers from all over India.”