
பாரத் மாதா கி ஜெ!
பாரத் மாதா கி ஜெ!
பாரத் மாதா கி ஜெ!
பீகார் ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான் அவர்களே, அர்ப்பணிப்புடன் செயல்படும் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் ஜிதன் ராம் மஞ்சி அவர்களே, கிரிராஜ் சிங் அவர்களே, லல்லன் சிங் அவர்களே, சிராக் பாஸ்வான் அவர்களே, ராம்நாத் தாக்கூர் அவர்களே, நித்யானந்த் ராய் அவர்களே, சதீஷ் சந்திர துபே அவர்களே, ராஜ்பூஷன் சௌத்ரி அவர்களே, பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி அவர்களே, பீகாரின் எனது அன்பான சகோதர சகோதரிகளே!
வணக்கம்
சிவான் பூமி நமது சுதந்திரப் போராட்டத்திற்கு எழுச்சியூட்டிய இடம். இது நமது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் வலிமை அளிக்கும் பூமி. சிவான், நாட்டிற்கு ராஜேந்திர பாபு போன்ற ஒரு சிறந்த மகனைக் கொடுத்துள்ளது. அரசியலமைப்பை உருவாக்குவதிலும் நாட்டிற்கு வழிகாட்டுவதிலும் ராஜேந்திர பாபு மிக முக்கியப் பங்கு வகித்தார்.
நண்பர்களே,
இந்த இரட்டை இன்ஜின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதியுடன் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைய திட்டங்கள் இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இப்போது, இந்த மேடையில் இருந்து, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் பீகாரை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும். இந்தத் திட்டங்கள் சிவான், சசாரம், பக்சர், மோதிஹாரி, பெட்டியா, ஆரா போன்ற பீகாரின் அனைத்து பகுதிகளையும் செழிக்கச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும்.
சகோதர சகோதரிகளே,
உங்கள் அனைவருக்கும் தெரியும், நான் நேற்றுதான் வெளிநாட்டிலிருந்து திரும்பினேன். அந்தப் பயணத்தின் போது, உலகின் முக்கியமான வளமான நாடுகளின் தலைவர்களுடன் நான் பேசினேன். இந்தியாவின் விரைவான முன்னேற்றத்தில் அனைத்து தலைவர்களும் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
நண்பர்களே,
பீகார் மக்களாகிய உங்கள் அனைவரின் பலமே எனது நம்பிக்கைக்குக் காரணம். முந்தைய ஆட்சிகளில் பீகார் மிகவும் பின் தங்கியிருந்தது.
நண்பர்களே,
பீகாரில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான விஷயம் அவர்களது சுயமரியாதை. எனது பிஹார் சகோதர சகோதரிகள் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் பணி செய்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் தங்கள் சுயமரியாதையுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். பல சவால்களைத் தாண்டி, நிதிஷ் குமார் அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பீகாரை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்துள்ளது. பீகார் மக்களுக்கு நாங்கள் நிறைய செய்துள்ளோம், செய்து வருகிறோம், தொடர்ந்து செய்வோம். கடந்த 10-11 ஆண்டுகளைப் பற்றி மட்டும் நான் பேசினால், இந்த 10 ஆண்டுகளில், பீகாரில் சுமார் 55 ஆயிரம் கிலோமீட்டர் கிராமப்புறச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.5 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 1.5 கோடி மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது பீகாரின் சிறிய நகரங்களில் புதிய புத்தொழில் நிறுவனங்கள் திறக்கப்படுகின்றன.
நண்பர்களே,
பீகாரில் முன்னேற்றத்தின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பீகாரின் என் அன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்காக, உங்கள் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்தில், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வளமான பீகாரை நோக்கிய பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுபவர்களை தொலைவில் வைக்க வேண்டும்.
நண்பர்களே,
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தபோது, வறுமையை குறைக்க முடியும் என்பதை இந்த அரசு காட்டியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், சாதனை அளவாக 25 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில், பீகாரில் மட்டும் சுமார் 3.75 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்.
நண்பர்களே,
கடந்த 11 ஆண்டுகளாக, ஏழைகளின் வளர்ச்சிப் பாதையில் உள்ள ஒவ்வொரு சிரமத்தையும் நீக்குவதற்கு நமது அரசு செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் அதைத் தொடர்ந்து செய்யும். இவ்வளவு கடின உழைப்பிற்கு நாம் நல்ல பலன்களைக் காணலாம். இப்போது ஏழைகளுக்கு வீடுகள் உள்ளன. அவர்களின் முகங்களில் மிகுந்த திருப்தி உள்ளது.
நண்பர்களே,
எங்கள் அரசு வீடுகளுடன் இலவச உணவு தானியங்கள், மின்சாரம், குடிநீர் வசதிகளையும் வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், நாடு முழுவதும் 12 கோடிக்கும் மேற்பட்ட புதிய குடும்பங்களின் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சென்றடைந்துள்ளது. இதில், சிவானின் நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களும் முதல் முறையாக குழாய் நீரைப் பெற்றுள்ளன.
நண்பர்களே,
பீகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன உள்கட்டமைப்புத் திட்டங்கள், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது, பீகாரில், சாலை, ரயில், விமானப் பயணம் மற்றும் நீர்வழிகள் போன்ற அனைத்து வகையான உள்கட்டமைப்புகளிலும் அதிக முதலீடு செய்யப்படுகிறது. பீகார் தொடர்ந்து புதிய ரயில்களைப் பெறுகிறது. வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள் இங்கு ஓடுகின்றன.
நண்பர்களே,
இத்தகைய முயற்சிகள் பீகாரில் உள்ள தொழில்களுக்கு ஊக்கமளிப்பது மட்டுமல்லாமல், சுற்றுலாவையும் ஊக்குவிக்கும். இதன் மூலம், உலக சுற்றுலா வரைபடத்தில் பீகார் இன்னும் முக்கியமாக வெளிப்படும். பீகார் இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
நண்பர்களே,
நாட்டில் உள்ள அனைவரும் இணைந்து முன்னேற வேண்டும். யாருக்கும் எதிராக எந்தப் பாகுபாடும் இருக்கக்கூடாது. இதுதான் நமது அரசியலமைப்பின் சாராம்சம். நாங்களும் அதே மனப்பான்மையுடன் சொல்கிறோம் – அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்.
நண்பர்களே,
பீகாரின் விரைவான முன்னேற்றத்திற்குத் தேவையான செயல்திட்டம் நிதிஷ் குமார் அவர்களின் முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ளது. பீகாரை வளர்ந்த இந்தியாவின் வலுவான இயந்திரமாக மாற்றுவோம். இந்த நம்பிக்கையுடன், வளர்ச்சிப் பணிகளுக்கு உங்கள் அனைவருக்கும் பல நல்வாழ்த்துக்கள்.
நண்பர்களே,
பீகாரின் விரைவான முன்னேற்றத்திற்குத் தேவையான செயல்திட்டம் நிதிஷ் குமார் அவர்களின் முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ளது. பீகாரை வளர்ந்த இந்தியாவின் வலுவான இயந்திரமாக மாற்றுவோம். இந்த நம்பிக்கையுடன், வளர்ச்சிப் பணிகளுக்கு உங்கள் அனைவருக்கும் பல நல்வாழ்த்துக்கள்.
பாரத் மாதா கி ஜெ!
பாரத் மாதா கி ஜெ!
பாரத் மாதா கி ஜெ!
மிக்க நன்றி!