இந்த ஆண்டு உலக சுகாதார கூட்டமைப்பின் கருப்பொருள் 'ஆரோக்கியத்திற்கான ஒரு உலகம்', இது உலக சுகாதாரத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையுடன் எதிரொலிக்கிறது: பிரதமர்
ஆரோக்கியமான உலகின் எதிர்காலம் உள்ளடக்கம், ஒருங்கிணைந்த பார்வை மற்றும் ஒத்துழைப்பைப் பொறுத்தது: பிரதமர்
உலகின் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நாம் எவ்வளவு சிறப்பாகக் கவனித்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது: பிரதமர்
உலகின் தென்பகுதி நாடுகள், குறிப்பாக சுகாதார சவால்களால் பாதிக்கப்படுகிறது, இந்தியாவின் அணுகுமுறை பிரதிபலிக்கக்கூடிய, அளவிடக்கூடிய, நிலையான மாதிரிகளை வழங்குகிறது: பிரதமர்
ஜூன் மாதத்தில், 11வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, இந்த ஆண்டு, 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்காக யோகா' என்ற கருப்பொருள்: பிரதமர்
ஆரோக்கியமான கிரகத்தை உருவாக்கும் அதே வேளையில், எவரும் விடுபடவில்லை என்பதை உறுதி செய்வோம்: பிரதமர்

மேன்மை தங்கியவர்களே மற்றும் பிரதிநிதிகளே, வணக்கம். உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

நண்பர்களே,

இந்த ஆண்டு உலக சுகாதார கூட்டமைப்பின் கருப்பொருள் 'ஆரோக்கியத்திற்கான ஒரு உலகம்'. இது உலக சுகாதாரத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையுடன் எதிரொலிக்கிறது. 2023-ம் ஆண்டில் நான் இந்தக் கூட்டத்தில் உரையாற்றியபோது, ​​'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' பற்றிப் பேசினேன். ஆரோக்கியமான உலகின் எதிர்காலம் உள்ளடக்கம், ஒருங்கிணைந்த தொலைநோக்கு மற்றும் ஒத்துழைப்பைப் பொறுத்தது.

நண்பர்களே,

இந்தியாவின் சுகாதார சீர்திருத்தங்களின் மையத்தில் உள்ளடக்கம் உள்ளது. உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரதத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம். இது 580 மில்லியன் மக்களை உள்ளடக்கியது மற்றும் இலவச சிகிச்சையை வழங்குகிறது. இந்தத் திட்டம் சமீபத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்தியர்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. எங்களிடம் ஆயிரக்கணக்கான சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களின் கட்டமைப்பு உள்ளது. அவை புற்றுநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களை பரிசோதித்து கண்டறிகின்றன. ஆயிரக்கணக்கான பொது மருந்தகங்கள் சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் உயர்தர மருந்துகளை வழங்குகின்றன.

நண்பர்களே,

 

சுகாதார விளைவுகளை மேம்படுத்த தொழில்நுட்பம் ஒரு முக்கியமான ஊக்கியாக செயல்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதைக் கண்காணிக்க எங்களிடம் ஒரு மின்னணு தளம் உள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் தனித்துவமான மின்னணு சுகாதார அடையாளத்தைக் கொண்டுள்ளனர். இது நன்மைகள், காப்பீடு, பதிவுகள் மற்றும் தகவல்களை ஒருங்கிணைக்க எங்களுக்கு உதவுகிறது. தொலை மருத்துவம் மூலம், எவரும் ஒரு மருத்துவரிடம் இருந்து வெகு தொலைவில் இல்லை. எங்களுடைய கட்டணமில்லா தொலை மருத்துவச் சேவை 340 மில்லியனுக்கும் அதிகமான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

நண்பர்களே,

எங்கள் முன்முயற்சிகள் காரணமாக, ஒரு மகிழ்ச்சியான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மொத்த சுகாதார செலவின சதவீதத்தில் செலவு கணிசமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், அரசின் சுகாதாரச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

உலகின் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நாம் எவ்வளவு சிறப்பாகக் கவனித்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது. உலகளாவிய தென் பகுதி நாடுகள் குறிப்பாக சுகாதார சவால்களால் பாதிக்கப்படுகிறது. இந்தியாவின் அணுகுமுறை பிரதிபலிக்கக்கூடிய, அளவிடக்கூடிய மற்றும் நிலையான மாதிரிகளை வழங்குகிறது. எங்கள் கற்றல்களையும் சிறந்த நடைமுறைகளையும் உலகத்துடன், குறிப்பாக உலகளாவிய தென் பகுதி நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

நண்பர்களே,

ஜூன் மாதம், 11வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு, 'ஒரே பூமி,  ஒரே ஆரோக்கியத்திற்கு யோகா' என்ற கருப்பொருளில் பின்பற்றப்பட உள்ளது. உலகிற்கு யோகாவை வழங்கிய நாட்டிலிருந்து, அனைத்து நாடுகளையும் பங்கேற்க அழைக்கிறேன்.

நண்பர்களே,

ஐஎன்பி ஒப்பந்தத்தின் வெற்றிகரமான பேச்சுக்களுக்காக உலக சுகாதார அமைப்பு மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளையும் நான் வாழ்த்துகிறேன். எதிர்கால தொற்றுநோய்களை அதிக ஒத்துழைப்புடன் எதிர்த்துப் போராடுவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாடாகும். ஆரோக்கியமான கிரகத்தைக் கட்டியெழுப்பும் அதே வேளையில், யாரும் பாதிக்கப்படாமல் இருப்பதில் கவனம் செலுத்துவோம். வேதங்களிலிருந்து ஒரு பிரார்த்தனையுடன் நான் முடிக்கிறேன். அனைவரும் மகிழ்ச்சியாகவும், அனைவரும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். அனைவரும் நலம் விரும்பிகளாக இருப்போம், யாரும் துன்பப்படாமல் இருப்போம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முனிவர்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், நோயின்றியும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். இந்த பார்வை உலகை ஒன்றிணைக்கட்டும்.

நன்றி!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Technical textiles critical to footwear sector

Media Coverage

Technical textiles critical to footwear sector
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 29, 2026
April 29, 2026

Leadership That Plays, Builds & Delivers: PM Modi’s Vision Igniting Youth, Women & Northeast India