“இந்த பட்ஜெட்டின் உயர் வளர்ச்சி வேகத்தை பராமரிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது”
“எம்எஸ்எம்இ-களை வலுப்படுத்த புதிய திட்டங்கள் மற்றும் பல அடிப்படை சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இந்த சீர்திருத்தங்களின் வெற்றி நிதி ஆதரவை வலுப்படுத்துவதை பொறுத்து அமையும்”
“நமது நிதித்துறை புதுமையான நிதி அளித்தல் மற்றும் புதிய வருங்கால எண்ணங்கள் மற்றும் முன்முயற்சிகளின் நீடித்த அபாய மேலாண்மையை கருத்தில் கொள்ள வேண்டும்”
“இந்தியாவின் விருப்பங்கள் இயற்கை வேளாண்மையுடன் தொடர்பு கொண்டுள்ளது”
“சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களை வேகப்படுத்துவது அவசியமாகும். பசுமை நிதி அளித்தலை ஆய்ந்து செயலாக்குதல் மற்றும் புதிய அம்சங்கள் இன்றைய காலத்தின் தேவையாகும்”

எனது அனைத்து அமைச்சரவை தோழர்கள், நிதி மற்றும் பொருளாதாரத்  துறை நிபுணர்கள், தாய்மார்கள், பெரியோர்கள் அனைவருக்கும் வணக்கம்!

முதலில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்துகள். முற்போக்கான பட்ஜெட்டை அளித்த பெண் நிதி அமைச்சரை இந்தியா பெற்றுள்ளது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயமாகும்.

நண்பர்களே, நூற்றாண்டுக்கு ஒருமுறை பாதிக்கும் பெருந்தொற்றுக்கு பின்னர் இந்திய பொருளாதாரம் மீண்டும் வேகமடைந்துள்ளது. இது நமது பொருளாதார முடிவுகள் மற்றும் பொருளாதாரத்தின் வலுவான அடிப்படையின் பிரதிபலிப்பாகும்.  இந்த பட்ஜெட்டில் உயர் வளர்ச்சி வேகத்தைப்  பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. அந்நிய முதலீட்டு வரவுகளை ஊக்குவித்தல், உள்கட்டமைப்பு முதலீட்டுக்கு வரி குறைத்தல், என்ஐஐஎஃப், கிப்ட்சிட்டி, புதிய டிஎஃப்ஐ-க்கள் போன்ற அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் நிதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த நாங்கள் முனைந்துள்ளோம். நிதித்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விரிவாகப்  பயன்படுத்தும் அரசின் முயற்சி தற்போது அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது. 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் அல்லது 75 மாவட்டங்களில் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி ஆகியவற்றில் இந்த தொலைநோக்கை பிரதிபலிக்கும்.

தற்சார்பு இந்தியா இயக்கத்துக்கு, பிரதம மந்திரி விரைவு சக்தி தேசியப்  பெருந்திட்டம் முக்கியமாகும்.  நாட்டின் சமன்பாடான வளர்ச்சியின் திசை பற்றிக்  குறிப்பிட்ட பிரதமர், முன்னேறத்  துடிக்கும் மாவட்டங்கள் திட்டம் அல்லது கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கை மேம்படுத்துதல் போன்றவை முன்னுரிமைத்  திட்டங்கள்.

நண்பர்களே, இந்தியாவின் அபிலாஷைகள் மற்றும் எம்எஸ்எம்இ-ன் வலிமை ஆகியவற்றுக்கிடையே உள்ள இணைப்பை மேம்படுத்துவது அவசியமாகும். நிதித்  தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், மருத்துவத்  தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் நாடு முன்னேறும் வரை தொழில் 4.0-வுக்கு வாய்ப்பில்லை.  இந்த துறைகளில் நிதி நிறுவனங்களின் உதவியானது இந்தியாவை தொழில் 4.0 –வின் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும்.

இந்தியப்  பொருளாதாரத்தின்  பெரிய அடிப்படை கிராமப்புறப்  பொருளாதாரம் ஆகும். சுய உதவிக் குழுக்கள், உழவர் கடன் அட்டைகள், விவசாயி உற்பத்தி அமைப்புகள், பொதுச்  சேவை மையங்கள் ஆகியவற்றை வலுப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   கிராமப்புறப்  பொருளாதாரம் கொள்கைகளின்  மையமாக இருக்க வேண்டும்.

நண்பர்களே, இந்தியாவின் விருப்பங்கள் இயற்கை வேளாண்மையுடன் தொடர்பு கொண்டுள்ளது. இவற்றில் புதிய பணியை மேற்கொள்ள யாராவது முன்வந்தால், அவருக்கு நமது நிதி நிறுவனங்கள் எவ்வாறு உதவும் என்பதைச்  சிந்திப்பது அவசியமாகும்.2070-ம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வு என்னும் இந்தியாவின் இலக்கை எட்டுவது அவசியமாகும். இதற்கான பணி தொடங்கிவிட்டது. இந்தப் பணிகளை விரைவுப்படுத்துவதற்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களை விரைவுபடுத்துவது அவசியமாகும். பசுமை நிதி அளித்தலை ஆய்ந்து செயலாக்குதல் மற்றும் புதிய அம்சங்கள் இன்றைய காலத்தின் தேவையாகும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian public relations industry pegged to reach ₹4,500 cr by 2030: Report

Media Coverage

Indian public relations industry pegged to reach ₹4,500 cr by 2030: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam greeting all the devotees of Lord Shiva on the commencement of the sacred Shri Amarnath Yatra
July 03, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam, greeting all the devotees of Lord Shiva on the commencement of the sacred Shri Amarnath Yatra from today:

“वाग्बुद्धिचित्तकरणैश्च तपोभिरुग्रैः
शक्यं समाकलयितुं न यदीयरूपम्।

तं भक्तिभावसुलभं शरणं नतानां
नित्यं भजाम्यऽमरनाथमहं दयालुम्॥"

The Subhashitam says, "I daily worship the merciful Lord Amarnath, whose nature cannot be comprehended through speech, intellect, mind, the senses, or even through severe finances, who is easily attainable through devotion, and who is the refuge of those who bow before him."

The Prime Minister wrote on X;

समस्त शिवभक्तों को पावन-पुनीत श्री अमरनाथ यात्रा के शुभारंभ की अनंत शुभकामनाएं! बाबा बर्फानी के दिव्य दर्शन की यह यात्रा आप सभी के जीवन में सुख-समृद्धि, सौभाग्य और उत्तम स्वास्थ्य लेकर आए।

जय बाबा बर्फानी!

वाग्बुद्धिचित्तकरणैश्च तपोभिरुग्रैः
शक्यं समाकलयितुं न यदीयरूपम्।

तं भक्तिभावसुलभं शरणं नतानां
नित्यं भजाम्यऽमरनाथमहं दयालुम्॥