பகிர்ந்து
 
Comments
“நீடித்த எரிசக்தி வளங்கள் மூலம் மட்டுமே நீடித்த வளர்ச்சிக்கு வாய்ப்பு”
“இந்தியா எத்தகைய இலக்குகளையும் தனக்காக நிர்ணயித்துக்கொண்ட போதிலும், அவற்றை சவால்களாக நான் பார்ப்பதில்லை, மாறாக அதை வாய்ப்பாகக் கருதுகிறேன்”
“சூரியசக்தி மற்றும் அது தொடர்பான பொருட்கள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு உலக மையமாக இந்தியாவை உருவாக்க, உயர்திறன் மிக்க சூரியசக்தி தொகுப்புக்கு பட்ஜெட்டில் ரூ.19.5 ஆயிரம் கோடி அறிவிக்கப்பட்டிருப்பது பெரிதும் உதவும்”
“மின்னூக்கி மாற்றக் கொள்கை மற்றும் உள்ளியக்கத் தரங்கள் தொடர்பாக இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இது இந்தியாவின் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் குறைக்கும்”
“எரிசக்தி சேமிப்பு சவால் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது”
“அனைத்து விதமான இயற்கை வளங்களும் குறைந்து வருவதை உலகம் பார்த்து வருகிறது. இத்தகைய சூழலில் சுழற்சி பொருளாதாரத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதை நமது வாழ்க்கையின் கட்டாயத் தேவையாக மாற்றிக் கொள்ள வேண்டும்”

நமஸ்காரம்!

நீடித்த வளர்ச்சிக்கான எரிசக்தி இந்திய பாரம்பரியத்தை எதிரொலிப்பதுடன், வருங்காலத் தேவைகள் மற்றும் விருப்பங்களை எட்டுவதற்கு ஒரு வழியாகவும் உள்ளது. நீடித்த  எரிசக்தி  வளங்கள்  மூலம் மட்டுமே நீடித்த வளர்ச்சியை அடைய முடியும்.  2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வை அடைய கிளாஸ்கோ மாநாடு உறுதி  பூண்டது. 

சர்வதேச சூரியசக்தி கூட்டணி போன்ற உலக ஒத்துழைப்புகளில் இந்தியா தலைமை நிலையை வழங்கி வருகிறது.  2030 ஆம் ஆண்டுக்குள் புதை படிமம் அற்ற எரிசக்தி மூலம் 50 சதவீத எரிசக்தி நிறுவுத் திறனை அடையவும், 500 கிகாவாட் படிமம் அற்ற எரிசக்தித் திறனை எட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “இந்தியா தனக்காக  எந்த இலக்கை நிர்ணயித்துக் கொண்டாலும், அவற்றை சவால்களாக  பார்ப்பதில்லை. மாறாக அவற்றை வாய்ப்பாகவே கருதுகிறது.  கடந்த சில ஆண்டுகளாக இந்த தொலைநோக்குடன் இந்தியா முன்னேறி வருகிறது.  இந்த ஆண்டு பட்ஜெட்டில் இது கொள்கை அளவில் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ளது.

நண்பர்களே..

நடப்பாண்டு பட்ஜெட்டில் உயர்திறன்  மிக்க  சூரியசக்தி  தொகுப்புக்கு  ரூ.19,500 கோடி  அறிவிக்கப்பட்டுள்ளது. இது சூரியசக்தி  மற்றும் அது தொடர்பான பொருட்கள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி  மேம்பாட்டுக்கு சர்வதேச  மையமாக இந்தியாவை உருவாக்க உதவும்.

நண்பர்களே..

அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய ஹைட்ரஜன் இயக்கம் மூலம் பசுமை ஹைட்ரஜன் மையமாக இந்தியா மாறும். அபரிமிதமான, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் வடிவில் இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு உள்ளது.  இதில்  தனியார் துறை முயற்சிகள்  அவசியமாகும்.

நண்பர்களே...

எரிசக்தி சேமிப்பு சவால் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. மின்னூக்கி  மாற்றக்  கொள்கை  மற்றும்  உள்ளியக்கத்  தரங்கள்  தொடர்பாக  இந்தாண்டு  பட்ஜெட்டில்  அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இது  இந்தியா மின்சார  வாகனங்கள் பயன்பாட்டில்  எதிர்நோக்கும்  பிரச்சினைகளைக்  குறைக்கும்.

நண்பர்களே..

எரிசக்தி உற்பத்தியுடன் எரிசக்தி சேமிப்பு என்பது அதே அளவில் முக்கியத்துவம் கொண்டதாகும்.  எரிசக்தித் திறன் கொண்ட குளிர்சாதனப் பெட்டி, தண்ணீரை சூடேற்றும் கருவிகள், வெந்நீர் கொதிகலன்கள், மின்சார அடுப்புகள் ஆகியவற்றை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

மின் நுகர்வு அதிகமாகும் போது குறைவான எரிசக்தித் திறன் கொண்ட பொருட்களை தயாரிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நான் உங்களுக்கு ஒரு உதாரணம் கூறுகிறேன். எல்ஈடி பல்புகள் உற்பத்தியை அதிகரித்து அவற்றின் விலையை பெருமளவுக்கு அரசு முதலில் குறைத்தது.  அதன் பின்னர், உஜாலா திட்டத்தின்கீழ் 37 கோடி எல்ஈடி பல்புகள் விநியோகிக்கப்பட்டன. இதன்மூலம் 48 ஆயிரம் மில்லியன்  கிலோ வாட் மின்சாரம் சேமிக்கப்பட்டதுடன் மின்சாரத்திற்காக செலவிடும் 20 ஆயிரம் கோடி ரூபாயும் சேமிக்கப்பட்டது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர  குடும்பங்கள் பயனடைந்தன.    மேலும் வருடாந்திர கரியமில உமிழ்வும் 4 கோடி டன் அளவுக்கு குறைந்தது. தெரு விளக்குகளுக்கு எல்ஈடி பல்புகளை  பயன்படுத்தியதால் உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது .

நண்பர்களே..

நிலக்கரியின் மாற்றாக நிலக்கரி வாயுவாக்கத்தை நாம் கருத முடியும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிலக்கரி வாயுவாக்கத்திற்கு 4 முன்னோடித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இது தொழில்நுட்பம் மற்றும் நிதி நம்பகத்தன்மையை ஏற்படுத்தும்.   இதேபோல, எத்தனால் கலப்பை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வாரணாசி மற்றும் இந்தோரில் சில வாரங்களுக்கு முன்பாக கோபர்தான் நிலையம் தொடங்கப்பட்டது. இது போல நாட்டில் அடுத்த இரண்டாண்டுகளில் தனியார் துறையினர் 500 முதல் ஆயிரம் நிலையங்கள் வரை அமைக்க முடியும். இதற்கு தொழில்துறையினர் புதிய முதலீடுகளை கண்டறிய வேண்டியது அவசியம்.

நண்பர்களே..

நமது எரிசக்தித் தேவை வருங்காலத்தில் அதிகரிக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி மாற வேண்டியது அவசியமாகும். இந்தியாவில் 24 முதல் 25 கோடி வீடுகளில் தூய்மையான சமையல்,   சூரிய எரிசக்தி தகடுகள்,  வீட்டுத் தோட்டங்கள் அல்லது  பால்கனிகளில் சூரிய சக்தி மரம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இந்த முறையில் எடுக்கப்பட்டது. சூரியசக்தி மரத்தின் மூலம் வீடுகள் 15 சதவீத எரிசக்தியை பெறலாம். மின்சார உற்பத்தியை அதிகரிக்க குறு புனல் மின் திட்டங்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய வேண்டும். அனைத்து  விதமான  இயற்கை  வளங்களும்  குறைந்து  வருவதை உலகம் பார்த்து வருகிறது.  இத்தகைய  சூழலில்  சுழற்சி  பொருளாதாரத்தின்  தேவை அதிகரித்துள்ளதால்.  அதை    வாழ்க்கையின்  கட்டாயத்  தேவையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் நமது நோக்கங்களை மட்டும் அடையாமல் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும்  வழிகாட்ட முடியும் என்று  தெரிவிக்கிறேன்.

 

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
Robust activity in services sector holds up 6.3% GDP growth in Q2

Media Coverage

Robust activity in services sector holds up 6.3% GDP growth in Q2
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM pays tributes to HH Pramukh Swami Maharaj Ji on his Jayanti
December 01, 2022
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to HH Pramukh Swami Maharaj Ji on his Jayanti.

In response to a tweet by BAPS Swaminarayan Sanstha, the Prime Minister tweeted;

"I pay my tributes to HH Pramukh Swami Maharaj Ji on his Jayanti. I consider myself blessed that I got the opportunity to interact with him on multiple occasions and also got a lot of affection from him. He is globally admired for his pioneering service to society."